வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழர்கள், பொய்வாக்குறுதிகளை நம்பி மிகச்சிறப்பாக ஏமாறுவதால், காங்கிரஸ் கட்சி தமிழர்களின் விபரங்களைத் சேகரிக்கிறது போலும்
லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, தமிழர்கள் ஓட்டுகளை காங்கிரஸ் நம்பி இருக்கிறது. தமிழர்களை அடையாளம் கண்டு, அவர்களை கணக்கெடுக்க திட்டமிட்டு காங்கிரசார் காய் நகர்த்தி வருகின்றனர்.கர்நாடகாவில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். சட்டசபை, லோக்சபா தேர்தலில் எந்த கட்சியின் வேட்பாளர், வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், தமிழர்கள் ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.பெங்களூரு சென்ட்ரல், தெற்கு, வடக்கு, ரூரல் ஆகிய நான்கு லோக்சபா தொகுதிகளிலும் தமிழர்கள் ஓட்டுகள் முக்கியம் வாய்ந்ததாக அரசியல்வாதிகள் கருதுகின்றனர்.இது தவிர தங்கவயல், மைசூரு, சாம்ராஜ்நகர், குடகு, சிக்கமகளூரு, மங்களூரு, ஹாசன், ஷிவமொகா, ஹூப்பள்ளி - தார்வாட், பல்லாரி உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழர்கள் வசிக்கின்றனர். கர்நாடகாவில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு ஓட்டு உள்ளது. நடக்க இருக்கும், லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, தமிழர் ஓட்டுகளை காங்கிரஸ் முழுக்க, முழுக்க நம்பி இருக்கிறது. கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களை அடையாளம் கண்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை, தமிழர் வீடுகளுக்கு அனுப்பி ஓட்டு சேகரிக்க வைக்க காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் தயாராகி வருகிறார்.காங்கிரசை சேர்ந்த மூத்த தமிழ் தலைவர்கள் கூறுகையில், 'பழங்காலத்தில், கர்நாடக தமிழர்கள் பாரம்பரியமாக காங்கிரசை ஆதரித்து வந்தனர். காலப்போக்கில் இதில் மாற்றம் ஏற்பட்டது. இருந்தாலும் தமிழர்கள் மீது காங்கிரஸ் தலைவர்களுக்கு தனி கவனம் உள்ளது.'ஒட்டுமொத்த தமிழர்களையும் ஈர்க்க காங்கிரஸ் தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்காக வார்டுகளில் உள்ள முக்கிய தமிழ் தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர்' என்றனர்.- நமது நிருபர் -
தமிழர்கள், பொய்வாக்குறுதிகளை நம்பி மிகச்சிறப்பாக ஏமாறுவதால், காங்கிரஸ் கட்சி தமிழர்களின் விபரங்களைத் சேகரிக்கிறது போலும்