உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் புதிய திட்டம்?

டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் புதிய திட்டம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நம் அண்டை நாடான வங்கதேசத்தில் சமீபத்தில் கலவரம் நடந்தது. அதில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியினர் கொல்லப்பட்டதுடன், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு, பலர் கொல்லப்பட்டுள்ளனர்.இதற்கு, பா.ஜ., கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி பேசிய பிரதமர் மோடி, தன் உரையில், 'வங்க தேசத்தில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்; இந்தியாவின் 140 கோடி மக்களும் இதைத்தான் விரும்புகின்றனர்' என்றார்.இஸ்ரேல் தாக்குதலால், காசாவில் பலியானவர்களுக்கு இந்தியாவில் எதிர்க்கட்சிகளும், பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், வங்கதேசத்தில் நடைபெறும் தாக்குதல் குறித்து அதிகம் பேசவில்லை. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கண்டனம் என ஏதோ பேச்சிற்கு பேசினாலும், ராகுல் இதுகுறித்து வாய் திறக்கவில்லை.இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பா.ஜ., முடிவெடுத்து உள்ளதாம். அனைத்து மாநில தலைநகரங்களிலும், ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டன கூட்டம் நடத்தப் போகிறதாம்.பா.ஜ.,வின் முதுபெரும் தலைவர் அத்வானி ரத யாத்திரை நடத்தியது போல, இந்த பொதுக்கூட்டங்கள் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும் என, பா.ஜ., நம்புகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

G Mahalingam
செப் 17, 2024 10:37

பாஜாக இந்துக்களுக்கு அதிக ஆதரவாகவும் மற்ற மதங்களுக்கு குறைவான ஆதரவாக செயல் படுகிறது. ஆனால் காங்கிரஸ் திமுக அத்தனை கட்சிகளும் இந்துக்களுக்கு எதிராகவும் இஸ்லாமிய கிறிஸ்துவ மக்களுக்கு முழு ஆதரவும் செயல்பட்டு வருகிறது. இந்துக்களுக்கு 500 ரூபாய் பிரியாணி கொடுத்து வோட்டை வாங்கி விடலாம் என்ற நினைப்பு தான்.


MADHAVAN
ஆக 19, 2024 10:56

பிஜேபி கரனுங்க மதத்தை வைத்து பிழைப்பு நடத்துறானுங்க னு அப்போதான் எல்லோருக்கும் தெரியும்,


Paramasivam
ஆக 24, 2024 18:41

வெளிநாட்டில் ஒரு நாய்க்கோ பன்றிக்கோ பாதிப்பு ஏற்பட்டால் இங்கு அறிக்கை ஆர்ப்பாட்டம் என்று குலைக்கும் இன்டியினர் வங்கதேசத்தில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதிற்கு என்ன செய்தனர்? யார் மதவாதி? யார் கொலைகாரர்களுக்கு ஆதரவு? மனிதாபிமானம் என்று ஒன்றாவது உள்ளதா? தலைவலியும் காய்ச்சலும் வந்தால் தான் தெரியும். அப்புறம் குய்யோ முறையோ என்று கத்தி என்ன பயன்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை