உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்...! பிரதமருக்கு அதிரடி பாதுகாப்பு?

டில்லி உஷ்ஷ்ஷ்...! பிரதமருக்கு அதிரடி பாதுகாப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நடந்து முடிந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரைக்கு பதிலளித்து பிரதமர் பேசும் போது, ஏராளமான களேபரங்கள் நடந்தன. மோடியின் பேச்சை கேட்க விடாமல் தடுக்க, எதிர்க்கட்சியினர் கூச்சல் போட்டுக் கொண்டேயிருந்தனர்; ஆனாலும், இது குறித்து கவலைப்படாமல், தன் உரையை முடித்தார் மோடி. தன் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களிடம், 'எல்லாரும் பிரதமர் இருக்கைக்கு அருகே போங்கள்' என்று கூறி, அவர்கள் பிரதமர் இருக்கைக்கு செல்வதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ராகுல். 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் சபையின் நடுவே வந்து, பிரதமருக்கு எதிரில் நின்று கோஷங்களை எழுப்பினர்.இது, பிரதமரின் பாதுகாப்பை கவனிக்கும், எஸ்.பி.ஜி., அமைப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 'தற்போதுள்ள அரசியல் வெறுப்பில், ஒரு வேளை எம்.பி.,க்கள் பிரதமரை தள்ளி விடுவது அல்லது அவரை தாக்கும் நிலை கூட ஏற்படலாம்; எனவே, எதற்கும் தயாராக இருக்க வேண்டும்' என, அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.எஸ்.பி.ஜி., அமைப்பு சீனியர் அதிகாரிகள், சமீபத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனராம்; அப்போது, பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக தீவிர ஆலோசனை நடந்ததாம். 'பார்லிமென்டில் எதுவும் நடக்கலாம்; எனவே, பார்லிமென்டிற்குள், அதாவது சபைக்குள்ளும் பிரதமருக்கு அச்சுறுத்தல் உள்ளது' என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதையடுத்து, 'எதிர்க்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சி எம்.பி.,க்களுக்கும் இடையே, ஏதாவது ஒரு தடுப்பு போன்று ஏற்பாடு செய்யலாமா' என, யோசித்து வருகின்றனராம். இதனால், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், பிரதமர் அருகே வர முடியாது; மேலும், கண்ணாடி தடுப்பு வைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதை அனைத்து எம்.பி.,க்களும் ஏற்றுக் கொள்வரா என்பது சந்தேகம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

subramanian
ஜூலை 24, 2024 19:01

பிரதமரின் பாதுகாப்பு குறித்து , காவல் அதிகாரிகள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. பிரதமரின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.


Ganesh
ஜூலை 21, 2024 22:50

மத்தியில் ஆளும் கட்சி மஜுரிட்டி இல்லாத அரசுதானே


sankaranarayanan
ஜூலை 21, 2024 21:06

எதிர் கட்சி தலைவர் நடந்துகொண்ட அநாகரிக செயலுக்கு அவைத்தலைவர் ஏதாவது செயல் எடுக்க வேண்டும் இப்படிப்பட்ட தூண்டிவிடும் எதிர் கட்சித்தலைவரை சிறிதுகாலம் சபையிலிருந்தே ஒய்வு பெற ஆணை இட வேண்டும் இதில் எந்த நீதி மன்றமும் தலையிட முடியாது இந்த செய்கை முற்றிலும் பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகும் இதில் சிறிதுகூட ஐயமில்லை


ஜானி
ஜூலை 21, 2024 17:41

99 இக்கு இந்த அட்டமா


பேசும் தமிழன்
ஜூலை 21, 2024 17:14

சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் ஆட்களை தூக்கி வெளியே வீச வேண்டும்..... எப்படி என்று தமிழக சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


அருண், சென்னை
ஜூலை 21, 2024 15:09

இதற்குத்தான் இந்தியர் அல்லாதவரை, தேசபற்று சிறிதும் அல்லாதவரை எதிர்க்கட்சி தலைவர் ஆகவிடக்கூடாது... நம் நாடு எந்த முன்னேற்றமும் அடையக்கூடாது ....இதுதான் எதிர்க்கட்சியின் கைகூலிகளின் எண்ணம் வேணுகோபால்-ஜி


arunachalam
ஜூலை 21, 2024 14:42

எதுவும் நடக்கலாம் என்பதே உண்மை. மோடி அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுப்பதில் தவறில்லை.


venugopal s
ஜூலை 21, 2024 12:40

என்ன பயம்?


Balasubramanian
ஜூலை 21, 2024 12:29

ஆமாம்! இனி மோடிஜியை யாரும் கட்டி பிடிக்க அனுமதிக்க கூடாது! மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் போர் முடிந்த உடன் பீமனை கட்டிப் பிடிக்க நினைத்தானாம்! கிருஷ்ணர் இரும்பினால் செய்த ஒரு பீமனை திருதராஷ்டிரன் முன் நிறுத்தி வைத்தாராம்! அதை அவன் கட்டிப் பிடிக்க அது சுக்கு நூறாக உடைந்தததாம்! அது போல பாராளுமன்ற உள் வளாகத்தில் இரும்பினால் ஆன மோடிஜி சிலையை வைத்தாலும் தவறாகாது


Dharmavaan
ஜூலை 21, 2024 12:13

நேதாஜியையும் சர்தார் படேலையும் முடித்து நேரு என்ற சந்தேகம் எல்லோருக்கும் உண்டு.


முருகன்
ஜூலை 21, 2024 13:53

உங்கள் கற்பனை திறனுக்கு நல்ல சினிமா எடுக்கலாம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை