உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்...! முதல் கையெழுத்து என்ன?

டில்லி உஷ்ஷ்ஷ்...! முதல் கையெழுத்து என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தில் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பல துறைகளைச் சேர்ந்த செயலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f8abm3za&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றால் ஒரு முக்கிய திட்டத்தை கொண்டு வர உள்ளாராம். அது தொடர்பாகத்தான் இந்த அதிகாரிகள் கூட்டம் என்கின்றனர். 70 மற்றும் அதற்கு மேலான வயதுடையவர்களுக்கு மருத்துவ உதவி, மருந்து, அறுவை சிகிச்சை என, அனைத்தும் இலவசம். 5 லட்சம் ரூபாய் வரை அறுவை சிகிச்சையும் இலவசம்; இது மோடியின் திட்டம்.பதவியேற்றவுடன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும். மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதும், இந்த திட்டம் தொடர்பாகத்தான் முதல் கையெழுத்து போடுவார் என சொல்லப்படுகிறது.இந்த திட்டத்திற்கான காப்பீட்டு தொகையை மத்திய அரசே செலுத்தும். சீனியர் சிட்டிசன்கள் மருத்துவ செலவிற்கு திண்டாடும் நிலையில் இந்த திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதம் என்கின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.கடந்த 2004 லோக்சபா தேர்தலின் போது, அப்போது ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசும் இப்படித்தான் ஏராளமான கனவுகளோடு இருந்தது. கடைசியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்க முடியவில்லை என்பதை மோடி உணர்ந்திருக்க வேண்டும் என்கின்றனர் காங்கிரசார். ஆனால் பா.ஜ.,வினரோ, மீண்டும் மோடிதான் என நம்பிக்கையுடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

visu
ஜூன் 01, 2024 07:45

ஹாஹா காங்கிரஸ் காண்பது தான் கனவு அவர்கள் ஏதாவது முயற்சி செய்திருந்தால் தானே வெற்றி பெற. பிஜேபி தான் என்பது அணைத்து கருது கணிப்பு முடிவு ஜூன் 4 வரை பொறுத்தால் கனவு களையும்


கனோஜ் ஆங்ரே
மே 31, 2024 12:50

அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.... அப்புறம் சித்தப்பா..ன்னு கூப்பிடலாம். கனவு காண்பதற்கு அவரவர்களுக்கு உரிமை உண்டு...? “கடவுள் இருக்கான் குமாரு”...?


Raa
மே 28, 2024 15:21

அதற்க்கு பதில், தரமான மருத்துவத்தை இலவசமாக கொடுக்க முயலலாமே? இது தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியை அல்லவா வளர்ந்துவிடும்


Bala
மே 27, 2024 21:46

முதலில் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை உடனே திரும்ப கொடுக்க வேண்டும். உலகத்திலேயே முதியோரிடம் கொள்ளை அடிக்கும் ஒரே ஒரு அரசு பிஜேபி அரசு மட்டும் தான்.


vadivelu
மே 30, 2024 14:01

கரெக்டு, தினம் காலி, மாலை வெளியூர் பயணம் சென்று கொண்டு இருக்கும் வயதானவர்களுக்கு சொல்கிறீர்கள் .. அவர்கள் ஏன் தினமும் செல்ல வேண்டும். ஏதோ வருடத்தில் நான்கு ஐந்து தடவை செல்ல அவசியம் வரலாம். தினம் அவர்களுக்கு வெளியூர் செல்லும் தேவை இல்லாமையை செய்யலாம். வயதானவர்கள் சென்ற் ஐம்பது வருடங்களுக்கு முன் போல இப்போது பெரும்பாலும் இல்லை. ஏதோ அரசின் மீது வன்மத்தில் சொல்வதாக தெரிகிறது. உலகிலேயே முதியோரிடம் கொள்ள எப்படி டிக்கிறது என்பதை சொன்னால் கொஞ்சம் அலெர்ட்டாக இருக்கலாம், சொல்லுங்க


alharsha home
மே 27, 2024 18:34

தேர்தல் நடைமுறை சட்டம் இப்போ இருக்கும் போது எப்படி அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி இருக்கமுடியும்?


Kumar Kumzi
மே 27, 2024 14:28

கொங்கிரஸ் கனவு பழிக்க போவதில்லை


G.NEELAKANNAN VAISHNAVI TEXT WORK
மே 27, 2024 12:56

இந்தியா உடன் மோடி வாழ்௧வே


V S Narayanan
மே 27, 2024 07:17

ஒரு நல்லவர், வல்லவர் மோடிதான் பிரதமராக வர வேண்டும்.


V S Narayanan
மே 27, 2024 07:11

மோடிதான் வர வேண்டும்


SARAVANAN A
மே 26, 2024 16:02

மோடி 2.0- வில் கொரோணா, லாக்டௌன் போன்ற தாக்குதல்களை சமாளித்து இன்றைய நிலைக்கு நாம் வந்திருப்பதே மிகப்பெரிய சவாலான விஷயம். லாக்டௌனால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு, போதாக்குறைக்கு இரஷ்ய உக்ரைன் போர் என அனைத்து தடைகளையும் கடந்து முன்னேற்ற பாதைக்கு திருப்பும்போது அடுத்த தேர்தலே வந்துவிட்டது மோடி 3.0 நிச்சயம் புதிய இந்தியாவை கட்டமைக்கும் உன்னத அரசாகவே இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை