உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போதை பொருள் கடத்தலால் அடுத்தடுத்து சிக்கும் தி.மு.க.,வினர்

போதை பொருள் கடத்தலால் அடுத்தடுத்து சிக்கும் தி.மு.க.,வினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக சொல்லப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க., விவசாய அணி அமைப்பாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் போதை பொருள் கடத்திச் சென்றதாக, சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.பின், இவர் அளித்த தகவலின்படி, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக, நேற்று முன் மீமிசல் அருகே காசாங்குடி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம், 43; ராஜா, 45, மற்றும் தி.மு.க., புதுக்கோட்டை தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சவுந்திரபாண்டியனின் கார் டிரைவர் கண்ணன், 40, ஆகியோரை மீமிசல் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பொன்பேத்தி பகுதியில் வசிக்கும் தி.மு.க., ஒன்றிய குழு உறுப்பினரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க., விவசாய அணி அமைப்பாளராகவும் இருக்கும் சுந்தரபாண்டியன், 47, என்பவருக்கும் போதை பொருள் கடத்தலில் சம்பந்தம் உண்டு என போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசிடம் சிக்கிய கண்ணனிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், முழு தகவல் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, சவுந்திரபாண்டியனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே, தி.மு.க.,வைச் சேர்ந்த ஜாபர் சாதிக், ராமநாதபுரம் இப்ராஹிம் உள்ளிட்டோர் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி கைதாகி இருக்கும் நிலையில், சவுந்திரபாண்டியனும் சிக்கி இருப்பது, கட்சி தலைமையை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. சவுந்திரபாண்டியன், கண்ணன், சதீஷ் உள்ளிட்டோருக்கும், ஜாபர் சாதிக்குக்கும் தொடர்பு உண்டா என்ற ரீதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஆக 04, 2024 20:24

திமுக ஆட்சியில் இருக்கும்வரை போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு இவையெல்லாம் தடுக்கவே முடியாது.


ராமகிருஷ்ணன்
ஆக 04, 2024 18:41

திமுகவின் சிறுபான்மை அணியை திமுக போதை அணி என்று பெயர் மாற்றம் செய்து விடலாம். பொருத்தமான பெயராக இருக்கும்.


bgm
ஆக 04, 2024 14:19

ஐயங்கார் மற்றும் திகழ்ந்த ஓவியன் அப்புடின்னு பேரை மாத்தி ஒளிஞ்சு கிட்டு முட்டு குடுக்க வந்துடுவார் எங்கப்பா அந்த 200 ரூவா முட்டு


Mohan das GANDHI
ஆக 04, 2024 12:38

திமுக தலைவன் முதல் தொண்டன் வரை போதைப்பொருள், கள்ளச் சாராயம் வியாபாரிகளே செஞ்சி மஸ்தான் இதில் நம்பர் ஒன்


Rathinasabapathi Ramasamy
ஆக 04, 2024 19:14

பீ சே பீ யில் சிக்கியது தெரியாதா?


karunamoorthi Karuna
ஆக 04, 2024 08:39

திமுகவில் சாராய ஆலைகள் நடத்த பெரிய பெரிய பிரமுகர்கள் இருக்கிறார்கள் கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்வதற்கு கூட கவுன்சிலர் புருஷர்கள் இருக்கிறார்கள் அதே போல் போதைப் பொருள் தயாரித்து விற்பனை செய்வதற்கு கூட புதிய தொழில் தொடங்கி இருப்பார்கள் ஒவ்வொரு பிரிவிலும் அணி இருப்பது போல் போதைப் பொருள் அணி இருக்கும்


முருகன்
ஆக 04, 2024 07:46

இந்த மாதிரி ஆட்களை ஜாமினில் வர முடியாத படி கைது செய்ய வேண்டும்


nagendhiran
ஆக 04, 2024 06:11

சண்டையில் கிழியாத சட்டையும்? போதை பொருள் வழக்கில் சிக்காத தி.மு.க காரனும் இல்லை?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி