உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா! வேலை கிடைத்தால் இளைஞர்கள் ஓட்டம்

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா! வேலை கிடைத்தால் இளைஞர்கள் ஓட்டம்

கோவை : வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில், பணி வாய்ப்பு பெறும் இளைஞர்கள் பெரும்பாலானோர், சில மாதங்களில் அந்த வேலையை விட்டு செல்வது அதிகரித்துள்ளது.வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில், மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமை, சிறியளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாம், நீண்டகாலமாக நடத்தப்படுகிறது. தவிர, தமிழக அரசின் உத்தரவுப்படி, 2017ம் ஆண்டு முதல், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம் சார்பில், ஆங்காங்கே உள்ள கல்லுாரிகளில், ஆண்டுக்கு இருமுறை 'மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்' நடத்தப்படுகிறது.தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான நபர்களை, தனியார் நிறுவனத்தினர் அங்கேயே தேர்ந்தெடுக்கின்றனர். பணிக்கு சேர்ந்த நபர்களை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்பு கொண்டு, 'வேலையில் சேர்ந்தீர்களா... வேலை பிடித்திருக்கிறதா... முறையான வசதிகள் வழங்கப்படுகிறதா...' உட்பட பல கேள்விகளை கேட்டு தகவல் சேகரிப்பது வழக்கம்.

அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

கடந்த சில ஆண்டுகளாக, இதுபோன்ற தகவல்களை கேட்க போன் செய்யும் அதிகாரிகளுக்கு, அதிர்ச்சி தான் காத்திருக்கிறது. பணியில் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள், சில மாதங்களிலேயே அந்த வேலையை விட்டு வெளியேறி விடுகின்றனர் என்பது தான், அதிர்ச்சிக்கு காரணம்.கோவையில், கடந்தாண்டு ஒரு கல்லுாரியில் நடத்த முகாமில், பல தனியார் நிறுவனங்கள் சார்பில், 1,200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணியும் வழங்கப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள், இவர்களை தொடர்பு கொண்ட போது, வெறும் 30 பேர் தான், பணியில் தொடர்வதாக தகவல் கிடைத்துள்ளது.அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஒரு பணியில் சேர்கிறோம் என்றால், அதைப்பற்றி தெரிந்து, கற்றுக்கொள்ள சில மாதங்கள் பிடிக்கும். ஒரு தொழில் துவங்க வேண்டும் என்றால், எந்த துறையில் கால் பதிக்கிறீர்களோ அதை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஏமாற நேரிடும். ஆனால், பெரும்பாலானோர், தங்களுக்கு பிடித்த, எந்த தொந்தரவும் இல்லாத வேலையை தேடுகின்றனர் என்றுதான் எண்ண தோன்றுகிறது. இப்படியே கிடைக்கிற வேலையில், அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தால், ஒரு தொழிலையும் முழுவதுமாக கற்றுத்தேர முடியாது. கிடைக்கும் வேலையில் திறமையை மெருகேற்றிக்கொண்டு உயர்வதுதான் புத்திசாலித்தனம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'இந்த வேலை செட் ஆகாதுங்க'

வேலையை விட்டுச்சென்ற இளைஞர்களை அதிகாரிகள் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, 'வீட்டிலிருந்து சற்று தொலைவாக அலுவலகம் இருக்கிறது', 'எனக்கு இந்த வேலை 'செட்' ஆகாதுங்க', 'டூட்டி முடிச்சிட்டு வர லேட் ஆயிருது', 'சம்பளம் கட்டுப்படியாகல...' என்பன உள்ளிட்ட பதில்கள் கிடைத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

கனோஜ் ஆங்ரே
ஜூன் 21, 2024 20:22

அதாவது.. இந்த 2கே கிட்ஸ்... எல்லாருமே “நோவாம நோன்பு கும்முடணும்”..னு நினைக்குறானுங்க...? இது படிச்சிட்டிருக்கிறப்ப... கூப்டு ஒரு வேலைய கொடுத்தா... அந்த வேலை கஷ்டமா இருந்தாலும், அந்த வேலையில் ஒன்றி, அதன் தன்மையை அறிந்து... கற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டுடன் வேலை செய்தால்... இதற்கு குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும்... அந்த மூன்றாண்டுகளுக்கு பின்னர், இவனுடைய அனுபவத்தை கண்டு அந்த முதலாளியோ அல்லது நிறுவனமோ இவனை வேலையில் இருந்து விரட்ட யோசிக்கும்.. அதுபோல, முழுஈடுபாடு இல்லாமல், ஜாலியாக... அயர் செய்த சட்டை கலையாம வேலைக்கு செய்யணும்னா அதுக்கு திருடணும், இல்ல செயின் பறிப்பு வேலைதான் செய்யணும்... மாட்ற வரைக்கும் ராஜா... மாட்டுன மவனே அவன் எதிர்காலமே ஜெயில்தான். இக்கால இளைஞர்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதில்லை... வீட்டில் அம்மா, அப்பா கஷ்டம் தெரிவதில்லை... நான் டிகிரி முடித்துவிட்டு... 40 ஆண்டுகளுக்கு முன்பு லாரி ஓட்டுநர் ஆகணும்னா... கிளினீர் வேலை செய்யணும்..னு சொன்னாங்க... அதையும் செஞ்சி அந்த ஓனரிடம் நல்ல பெயர் எடுத்து டிரைவர் தொழிலை கத்துகிட்டேன்... அதன்பின்னர்... கஷ்டமான வேலையில் கிட்டதட்ட பத்தாண்டுகள் பணியாற்றினேன்.. ஒரே நிறுவனத்தில்.... அதன்பின்னர், இப்போது நான் எந்த ஒரு முன் அனுபவமோ... கணினி படிப்போ... கணினி அறிவோ இல்லாமல்... 28 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூட்டர் டேட்டா எண்ட்ரியாக நுழைந்து... இன்று என் நிறுவனத்தில் என்னை அடிச்சிக்க ஆளே இல்ல... இப்ப சி+, டேட்டா மேனேஸ்மெண்ட் அப்படீன்னு என்னென்னவோ கம்ப்யூட்டர் கோர்சில் மேல்படிப்பு படிச்சுட்டு வர்வறனுங்க எல்லாருமே என் வேலைய பார்த்துட்டு... எங்க சார் படிச்சீங்க... என்ன படிச்சீங்க...ன்னுதான் கேக்குறான்... யோவ் நான் படிக்கவே இல்லையா...ன் சொன்னா நம்ப மாட்டேங்குறான்... பிஇ ஐடி படிச்சவனே என்னை வியந்து பார்க்குமளவுக்கு பணியாற்றுகிறேன் என்றால் அதற்கு காரணம்... கம்ப்யூட்டர் துடைக்க ஆரம்பித்தபோது அதில் இருந்து முழுஈடுபாடு..... துடைத்தேன், என் தொழில் ஈடுபாட்டை கண்டு... சாப்ட்வேர் இன்சினியர்சே இதை கத்துக்க என்று எனக்கு சொல்லி கொடுத்தனர்... நான், எனது தூக்கத்தை தொலைத்து இரவு முழுவதும் அவர் சொல்லி தருவதை முழுஈடுபாட்டுடன் கற்று... இன்று வரை பி.இ. படிச்சவனையே கதற வைக்கிறேன்... என்றால் அதற்கு காரணமே எனது தொழில் உள்ள ஈடுபாடு. அதெல்லாம் இந்த கால பசங்களுக்கு கிடையாது... காரணம், தொப்புளுக்கு மேலே கஞ்சி... எனக்கோ முப்பதாண்டுகளுக்கு முன்பு பசிக்கு கஞ்சி கிடைக்காத நிலை. மனிதனாய் பிறந்தவன் எவனுமே எதையும் கற்றுக் கொள்ளலாம்... படிச்சாதான் பெரிய ஆள் ஆகமுடியும் என்று நினைப்பது முட்டாள்தனம்... கோவை ஜி.டி.நாயுடு பெரிய பெரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார்... அவன் என்ன இஞ்சினியர் படிப்பா படித்தார்... எல்லாம் ஈடுபாடுதான்.. அதெல்லாம் இக்கால இளைஞர்களிடமோ, மாணவர்களிடமோ இல்லை... அதனால்தான் எந்த வேலையிலும் நிரந்தரமா இருப்பதில்லை...


சிவம்
ஜூன் 20, 2024 21:04

இந்த லட்சணத்தில், வடக்கன் இங்கு வந்து எல்லா வேலையையும் ஆட்டய போடுறான் என்று புலம்பல் வேறு...


தமிழ்வேள்
ஜூன் 20, 2024 20:09

சென்னை க்கு வெளியே பெரும்பாலான சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோர் மற்றும் முதலாளிகள் தங்கள் ஊழியர்களை மரியாதை இன்றி நடத்துவது, ஏறுவது, அடிப்பது போன்றவை அதிகம்....- காலை எட்டு மணிக்கு தான் வருகிறாய்... ஆனால் இரவு ஒன்பது மணிக்கே வீட்டிற்கு கிளம்புறியே....- என்று டார்ச்சர் செய்வது அதிகம்... சாதாரண பண்டிகை விடுமுறை கூட அளிப்பது இல்லை... அப்புறம் எவன் அவர்களிடம் வேலை செய்வான்?..


Qatar tamilan - Stephen
ஜூன் 20, 2024 14:30

கொடுக்கிற சம்பளம் அவர்களின் சாப்பாடு மற்றும் தங்குமிட செலவுகளுக்கு பத்தாம இருந்தா என்ன செய்வது. அதற்கு பதிலாக வீட்டிற்கு அருகிலேயே கிடைக்கும் வேலையை செய்யலாம். அனைத்து வேலைகளுக்கும் குறைந்த பட்ச சம்பளமாக 25000/மாதம் கொடுத்தால் இப்படி வேலையை விட்டு செல்ல மாட்டார்கள்


rsudarsan lic
ஜூன் 20, 2024 19:39

அதாவது துபாய் போன்ற நாடுகளில் கொடுப்பது போல. ஓகே ok


...
ஜூன் 20, 2024 13:59

விரைவில் குடும்பம் செட்டில் ஆக ஒரே வழி கள்ளச்சாராயம் குடித்து செத்துபோனா நம்ம குடும்பம் நல்லா இருக்கும்


Selvaganesh Til
ஜூன் 20, 2024 19:27

உண்மை தான் நண்பரே


Kumar
ஜூன் 20, 2024 13:26

இது போல் பணம் தந்தால் அவர்கள் எப்படி திருந்துவார்கள்


Kumar
ஜூன் 20, 2024 13:25

உண்மை


Manalan
ஜூன் 20, 2024 13:03

நல்ல சாராயத்தை குடுச்சிட்டு இருக்கலாம் .


தமிழரசன்
ஜூன் 20, 2024 11:47

இதுக்கு பேசாம கள்ளச்சாராயம் குடிச்சிட்டு விழுந்து கெடக்கலாம். போய்ச்சேந்தா பது லட்சம் குடும்பத்தவருக்கு கிடைக்கும். வேலையெல்லாம் எவன் செய்வான்?


Rajarajan
ஜூன் 20, 2024 07:51

விரைவாக வாழ்வில் முன்னேற ஒரே வழி? அதாங்க, அரசியல் கட்சியில் அடிப்படை உறுப்பினரா சேர்ந்து, கட்ட பஞ்சாயத்து, மணல் கடத்தல், இப்படி ஆரம்பிச்சி, கட்சிக்கு அதிக நிதி கொடுத்தா, உடனே மாநில உறுப்பினர் அந்தஸ்து. அப்பறம் தேர்தல், பதவி, சம்பாத்தியம், பலதலைமுறைக்கு சொத்துனு, அதிவிரைவா மேல போய்கிட்டே இருக்க வேண்டியது தான். இந்தியாவில் இதுதான் அதிவிரைவு பணக்காரர் ஆகும் எளிமையான திட்டம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை