உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தனித்து நின்றாலும் தமிழகத்தில் ஜெயிப்போம்: செல்வப்பெருந்தகை

தனித்து நின்றாலும் தமிழகத்தில் ஜெயிப்போம்: செல்வப்பெருந்தகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

“தனித்து நின்றாலும், வெற்றி பெறும் வலிமையுடன் உள்ளோம்,” என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.திருவள்ளூர் நகர காங்., செயற்குழு கூட்டம் நடந்தது. அதில், செல்வப்பெருந்தகை பேசியதாவது: ஐந்து ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் இருந்த நிலை, இப்போது முழுமையாக மாறி இருக்கிறது. எல்லா இடங்களிலும் கட்சி வலிமையாக உள்ளது. தனித்துப் போட்டி யிட்டாலும் வெற்றி பெறும் அளவுக்கான சூழல் உள்ளது. இருந்தபோதும் கட்சி கட்டமைப்பை இன்னும் கூடுதலாக வலுவாக்க வேண்டும்.கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் நேரத்தில், எங்களுக்கு உரிய மரியாதையும்; அங்கீகாரமும் அளிக்கவில்லை என, கட்சியினர் மத்தியில் பெரிய மனக்குறை உள்ளது. ஏதோ ஒரு விதத்தில் உதாசீனப்படுத்துவது போலத்தான் நடந்து கொள்கின்றனர். நாம் நம்மை முழுமையாக வலுப்படுத்திக் கொள்ளும்போது, இதெல்லாம் தானாகவே மறைந்து விடும். இவ்வாறு அவர் பேசினார்.பின், அவர் அளித்த பேட்டி: கட்சி வளர்ச்சிக்கு என்ன தேவையோ, அது குறித்துப் பேசினேன். என்னதான் கூட்டணி என்றாலும், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் என்றால், எங்களுக்கு 9 தொகுதிகள்தான் கொடுக்கின்றனர். 'ஓட்டு வங்கி அதிகரிக்கட்டும்; அப்போது, 20 தொகுதிகள் கேட்டாலும் கொடுக்கிறோம்' என்கின்றனர். அதற்கேற்ப கட்டமைப்பை கட்சியினர் உருவாக்க வேண்டும். இதைத்தான் கூட்டத்தில் பேசினேன். யாரையும் யாரும் விமர்சிக்கவும் இல்லை; யாருக்கும் நெருக்கடி கொடுக்கவும் இல்லை. இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் என்றால், சொந்தக் கட்சியினரை உற்சாகப்படுத்த இப்படி பேசுவது சகஜம் தான்- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Barakat Ali
ஜூலை 19, 2024 14:39

ரொம்ப பிகு பண்ணுனா வெளியே தள்ளி கதவைச் சாத்திருவாங்க செல்வம் .....


ram
ஜூலை 19, 2024 13:42

அப்படியா... இது தெரியாம போச்சே..


Balasubramanian
ஜூலை 19, 2024 12:55

பெட்டு கட்ட தயாரா உ.பி மகாராஷ்டிரா, தமிழ் நாடு மொத்தம் 52 சீட்டு, காங்கிரஸ் பாஜக ஒண்டிக்கு ஒண்டி! சவாலா? சீட்டை ராஜினாமா செய்து விட்டு களத்தில் இறங்கி மோத தயாரா?


பேசும் தமிழன்
ஜூலை 19, 2024 09:03

அட.... அப்போ என்ன ..... அறிவாலய வாசலில் பிச்சை எடுத்தீர்கள்.. அண்ணாமலை அவர்களை போல் காங்கிரஸ் கட்சி தலைமையில் தனி கூட்டணி ஏற்படுத்தி தேர்தலில் போட்டியிட வேண்டியது தானே ???


Sck
ஜூலை 19, 2024 07:48

ஹி,ஹி, உங்கள் அசட்டு தைரியத்தை பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள். ஹும், அடுத்தது யாரு?


krishna
ஜூலை 19, 2024 07:44

NADAKKAVE OONDRUKOL VENUM IDHULA OLYMPICS 100 METER GOLD MEDAL VAANGUVEN ENA ORUVAN AASAI


pv, முத்தூர்
ஜூலை 19, 2024 05:59

கொஞ்சம் தள்ளிநின்னாலே யார்க்கும்தெரியாது, இதுல தனியா நிக்கிறாங்களாம்


கோவிந்தராஜ்
ஜூலை 19, 2024 04:22

வாரமலரில் தமாசுபகுதிக்கு அனுப்பவும் முதல் பரிசு நிச்சயம் உண்டு


A VISWANATHAN
ஜூலை 19, 2024 09:07

இபிஎஸ் மாதிரி காங்கிரஸ்சுக்கு இந்த ஆள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை