உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராஜ்யசபாவில் ஆதரவு வேண்டாமா? பா.ஜ.,வுக்கு ஜெகன் எச்சரிக்கை

ராஜ்யசபாவில் ஆதரவு வேண்டாமா? பா.ஜ.,வுக்கு ஜெகன் எச்சரிக்கை

'லோக்சபாவில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு பா.ஜ.,வுக்கு எவ்வளவு முக்கியமோ, ராஜ்யசபாவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் அதே அளவு முக்கியம்' என, ஒய்.எஸ்.ஆர். காங்., தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், தெலுங்கு தேசம் - ஜன சேனா - பா.ஜ., கூட்டணி பெரும்பான்மையான பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8mn2lqul&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாள் முதல், ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களிலும் தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர்.காங்., தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் அரங்கேறி வருகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காணும்படியும் கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியினர் நேற்று முன்தினம் மனு அளித்தனர்.அப்போது, ஒய்.எஸ்.ஆர்.காங்.,கின் ராஜ்யசபா குழு தலைவர் விஜய் சாய் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபாவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.,க்கள் உள்ளனர். சபையில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவதில் தெலுங்கு தேசம் கட்சியை பா.ஜ., முழுமையாக நம்பிஉள்ளது.அதே நேரம், ராஜ்யசபாவில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற எங்கள் ஆதரவும் பா.ஜ.,வுக்கு தேவை என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. இங்கு நாங்கள் கணிசமான எம்.பி.,க்களை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.ராஜ்யசபாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.பி.,க்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக, ஒய்.எஸ்.ஆர். காங்., கட்சி பா.ஜ.,வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது.

நெல்லுாரில் மோதல்

ஆந்திராவின் நெல்லுார் மாவட்டத்தில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்., தொண்டர்கள் இடையே நேற்று முன்தினம் இரவு பயங்கர மோதல் வெடித்தது. இதில், ஏழு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நான்கு பேர் தெலுங்கு தேசத்தையும், மூவர் ஒய்.எஸ்.ஆர்.காங்.,கையும் சேர்ந்தவர்கள்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sethuramalingam
ஜூன் 14, 2024 20:44

காவிரி பிரச்சினையில் அதிமுக வெளிநடப்பு செய்து பா.ஜ.கவுக்கு ஆதரவளித்த மாதிரியா?


Vathsan
ஜூன் 14, 2024 14:11

இனிமேலாவது மதில் மேல் பூனையாக நில்லாமல், ஏதாவது ஒரு கூட்டணிக்கு விசுவாசமாக இருங்கள்.


ram
ஜூன் 14, 2024 13:59

அதற்குத்தான் இங்கியிருந்து போய் இருக்கும் திருட்டு திமுக MP இருக்காங்களே முக்கியமான மசோதா வந்தால் வெளி நடப்பு செய்து அந்த மசோதாவை ஜெயிக்க வைத்து விடுவார்களே.


S Sivakumar
ஜூன் 14, 2024 13:20

பணத்தின் மீது அதீத ஆர்வம் பாவிகளாக ஆக்கி அதே எண்ணம் முளை முறுக்கேறி ஒருவரையொருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதையும் அரசியல் ஆக்கியது பதவி வெறி.


S MURALIDARAN
ஜூன் 14, 2024 11:07

மக்கள் நலத் திட்டங்கள் எதுவானாலும் அதைக் கொண்டு வரும் எந்த மத்திய அரசுக்கும் மாநிலக் கட்சிகள் ஆதரவு அளிப்பதில் நிபந்தனை விதிப்பது பிரிவினையை வளர்க்கவே செய்யும். மத்திய மாநில அரசுகளில் ஒரே கட்சி ஆட்சி செய்தாலும் மாநில நலனை மட்டுமே முன்னிறுத்தி முரண்பட்டு நிற்பது ஒட்டு மொத்த இந்திய நாட்டு முன்னேற்றத்திற்கு தடையாகவே இருக்கும்.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 14, 2024 06:37

வன்முறை அரசியல் கூடாது. தொண்டர்களும் ரவுடிகளை கட்சி பெயர் சொல்லி வன்முறை செய்பவர்களை காவல் துறை இடம் அடையாளம் காட்டா வேண்டும்


Kasimani Baskaran
ஜூன் 14, 2024 05:42

ஆதரவு அப்படியே கொடுத்து விடுவது போல உருட்டுவது தப்பித்துக்கொள்ளத்தான். திருப்பதியை நரிகள் ஆக்கிரமிக்க வகை செய்தவர்க்ககளை எப்படி அப்படியே விட்டுவிட முடியும்.


ஆரூர் ரங்
ஜூன் 14, 2024 05:25

பெட்டிகளுக்காக உருவானது YSRC. அதே பெட்டிகளுக்கு ஓட்டும் போடும். கொள்கையாவது மண்ணாவது? ஆக மொத்தம் வீணாக அடிபடுவது அடிமட்டத் தொண்டர்கள் மட்டுமே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை