உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எஸ்.சி., எஸ்.டி.,க்கு க்ரீமிலேயர் வராது: மத்திய அரசு முடிவு

எஸ்.சி., எஸ்.டி.,க்கு க்ரீமிலேயர் வராது: மத்திய அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர் முறை அமல்படுத்தப்படாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில், இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீட்டில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு க்ரீமிலேயர் முறையை அமல்படுத்த பரிந்துரைத்தது. இந்த முடிவை அமல்படுத்தக் கூடாது என, லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தினர்.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்குள் க்ரீமிலேயர் வழங்குவது அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது. ஆகையால், அவர்களுக்கு க்ரீமிலேயர் முறையில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை,” என்றார். -நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

KR india
ஆக 11, 2024 02:06

ஒரு சில சாதியை சேர்ந்தவர்கள் மட்டும், மாதம் ஒரு கோடி சம்பாதித்தாலும், கிரிமிலேயேர் வராது. இடஒதுக்கீடு சலுகைகளை, கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வருபவர்கள் தொடர்ச்சியாக அனுபவிக்கலாம். அப்படித்தானே ? சரி இருக்கட்டும் இடஒதுக்கீட்டையும் எதிர்க்க வில்லை கிரீமிலேயேர் முறையையும் எதிர்க்கவில்லை அதே போல் எம்.பி.சி பிரிவின் கீழ் வர கூடிய சாதியினர் மற்றும் ஏழை முற்படுத்தப் பட்டோர் சமுதாயத்திற்குண்டான இடஒதுக்கீட்டிலும், அதே அணுகுமுறையை, அதே கிரீமிலேயேர் வரம்பை தர வேண்டுமல்லவா ? அனைத்து தரப்பு, இந்திய மக்களும் உங்கள் பிள்ளைகள் தானே இந்திய அரசு சில சாதியினரை மட்டும் இரண்டாம் தர குடிமக்கள் போல் நடத்துவது எப்படி நியாயமாகும் ? ரெட்டியார், முதலியார், பிராமணர், சைவப் பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், நாயர் போன்ற உயர் சாதியில் உள்ள ஏழைகள் வாழ வேண்டாமா ? அவர்களுக்கெல்லாம், கிரிமிலேயேர் இல்லாமல், இடஒதுக்கீட்டு சலுகை கிடைக்குமா ? அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் தானே ஒரே நாடு ஒரே சட்டம் எல்லாம் பொய்யா ?


Ram
ஆக 10, 2024 21:43

என்ன கொடுமை


Sathyanarayanan Sathyasekaren
ஆக 10, 2024 21:40

இதை வைத்து கல்லா கட்டலாம் என்று புள்ளி வாய்த்த கூட்டணி நினைத்து கொண்டு இருந்தது. இப்போது அது முடியாது, ஏற்கனவே, பிஜேபி மீது, பிஜேபி ஆட்சிக்கு வாழ்தல் இட ஒதுக்கீடு இருக்காது போன்ற ஏகப்பட்ட பொய்களை சொல்லி சில இடங்களில் ஜெயித்தார்கள்.


Nathan
ஆக 10, 2024 19:30

இட ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற்றவரின் வாரிசுகள் இட ஒதுக்கீடு பெற தகுதியற்றவர்களாக சட்டம் கொண்டு வர வேண்டும். இட ஒதுக்கீடு பரம்பரை உரிமையாக இருக்கும் வரை அதனால் சமுதாயத்தில் எந்த மாற்றமும் நிகழாது


GMM
ஆக 10, 2024 19:03

சாதி இட ஒதுக்கீடு இருக்கும் வரை தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். இட ஒதுக்கீடு இருக்கும் வரை sc/st/bc முன்னேறுவது கடினம். சில சலுகைகள் போதும். தேச ஒருமைப்பாடு வலுவாக இருக்காது. இட ஒதுக்கீடு பெற்ற சமூகம் தன் சமூக வளர்ச்சிக்கு என்ன பங்களிவு செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் /திராவிடம் யோசனை சொல்லவில்லை. பிற மதத்தினர் எப்படி அடிமைப்படுத்தி, மறைத்தனர் என்பது முன்னோர்கள் அறிவர். இட ஒதுக்கீட்டில் பயன்பெற்ற குடும்பம் மீண்டும் பயன்பெறுவது ஒடுக்கப்பட்ட சமூக வளர்ச்சிக்கு உதவாது. பிஜேபி யின் வாக்கு வங்கி முடிவு.? ஊழல் ஒழிப்பு எல்லோரும் விரும்புவர். அந்த ஒரு கொள்கை முடிவு பிஜேபிக்கு போதும். ஊழல் அசுர கூட்டணி ஒன்று சேர்ந்தும் பிஜேபி வெற்றியை தடுக்க முடியவில்லை. சாதி, மத வளையத்தில் செல்ல வேண்டுமா?


மணி
ஆக 10, 2024 16:17

இன்னும் 5000 வருஷம்.கிடைத்து பரிசீலிக்கலாம்.


Sridhar
ஆக 10, 2024 14:53

தவறான முடிவு. முன்னேறியவர்கள் விலகி நின்றால்தானே, மேலும் அடித்தட்டில் இருப்பவர்கள் மேலே வரமுடியும்? அவ்வாறு விலகி நிற்க மறுப்பதும் ஒரு ஆணவ மனப்பாண்மைதானே? ஆக, இந்த ஆணவ போக்கு ஜாதிகளை மீறிய ஒரு மனித இயல்புதான் என்பது தெளிவாகிறதே? மேலும் அம்பேத்கர் இடஒதுக்கீடு முறையை கொண்டுவரும்போதே இது 20 வருடங்களுக்குமேல் இருக்கக்கூடாது என்றார். 75 வருடங்கள் ஆகியும், இந்த இட ஒதுக்கீடுகளினால் பிரயோசனம் இல்லையென்றால், அவற்றை முற்றுலுமாக தூக்கி எறிவதுதான் சிறந்த செயலாக இருக்கமுடியும். இடஒதுக்கீடுகளுக்கு பதிலாக, மனிதவள மேம்பாடு நிலையங்கள் ஆரம்பித்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிற்பட்ட சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலை திறமைகளை கற்றுக்கொடுத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றலாம். பொருளாதார ரீதியில் அவர்கள் தற்சார்பாக முன்னேற்றமடைந்துவிட்டார்கள் என்றால், மற்றவர்கள் அவர்களை எவ்வாறு நடத்த முற்பட்டாலும், தூக்கி எறிந்துவிட்டு தங்கள் முன்னேற்றத்தில் முனைப்பாக இருந்துவிடுவார்கள். கோவிலுக்குள் விடமாடியா, நாங்களே அதைவிட பெரிய கோவில் ஒன்றை கட்டிக்கொள்கிறோம் என்கிற நிலைக்கு சென்றுவிடுவார்கள். இதை செய்யாமல், வோட்டு அரசியலுக்காக நாட்டை சீரழித்துக்கொண்டு ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள்.


Swaminathan L
ஆக 10, 2024 10:59

ஏற்கனவே, இட ஒதுக்கீடு விகிதத்தை ஒழுங்கு படுத்த நாடு தழுவிய ஜாதிவாரி சென்சஸ் எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோஷம். இந்த விஷயத்தில், உச்சநீதிமன்றம் பரிந்துரைப்படி க்ரீமி லேயர் நெறிமுறைகள் படுத்தினால், அடுத்து ஓபிசியிலும் அப்படிச் செய்ய வேண்டி வரும். உட்பிரிவுகளில் உள் ஒதுக்கீடு என்று அடுத்த சவால் வரும். இவ்வளவும் நடைமுறைப்படுந்தினால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய இதர பிரிவுகளுக்கும் இட ஒதுக்கீடு நடைமுறை வரும். இத்தனை சீர்திருத்தங்களுக்கு நாட்டு மக்களோ, வித்தியாசம் இல்லாமல் யாதொரு அரசியல் கட்சிகளுமோ தயாராக இல்லை. எனவே, இண்டி கூட்டணி இந்த விஷயத்தில் கள்ள மௌனம் காக்க, ஆளும் அரசுக்கு அவ்வாய்ப்பு இல்லாததால் அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது என்கிற காரணம் சொல்லி இந்த விஷயத்தோடு மேற்குறிப்பிட்ட மற்ற விஷயங்களுக்கும் தற்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவாகியது.


ஆரூர் ரங்
ஆக 10, 2024 09:23

நியாயமானதே. ஆனால் OBC ஒதுக்கீடு சற்றும் நியாயமற்றது. எந்தந்த சாதிகளை OBC பட்டியலில் சேர்க்கலாம் என்பதை அப்பகுதியில் வாழும் SC, ST மக்களே முடிவு செய்ய வேண்டும். தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள் யார் என்பது பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்குத்தான் தெரியும்


naranam
ஆக 10, 2024 08:37

ஏன்? வந்தால் தான் என்ன குறைந்து போய்விடும்? ஒவ்வொருவரும் நீதிபதி, அமைச்சர், நாடாளு மன்ற உறுப்பினர் ஆகி சம்பாதித்த சொத்து சேர்த்த பிறகும் அவர்களுக்கு மேலும் இட ஒதுக்கீடு தேவையாம்.. கேவலமான பிழைப்பு.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை