உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தோற்றாலும் வென்றாலும் விலகுவார்: அண்ணாமலை குறித்து பழனிசாமி யூகம்

தோற்றாலும் வென்றாலும் விலகுவார்: அண்ணாமலை குறித்து பழனிசாமி யூகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் பதவியில் நீடிக்கப் போவதில்லை' என, கட்சி நிர்வாகிகளிடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2016ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், பன்னீர்செல்வமும், பழனிசாமியும் முதல்வராக இருந்து அ.தி.மு.க., ஆட்சியை வழி நடத்தினர். இதில், நாலு ஆண்டு காலம், மத்திய பா.ஜ., அரசின் முழு ஆதரவோடு, ஆட்சி அதிகாரத்தை செலுத்தினார் பழனிசாமி.அடுத்து 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க., போட்டியிட்டது. ஆனால், தமிழக அரசியல் களமும், தி.மு.க., கட்டமைத்த கூட்டணியும் சாதகமாக இருக்க, தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழக எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமி செயல்பட்டார்.இந்நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற முடியாமல் போனதற்கு, பா.ஜ.,வுடனான கூட்டணியே காரணம் என்று, அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் தொடர்ந்து சொல்ல, கூட்டணியை மறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு வந்தார் பழனிசாமி.அந்த சமயத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'கடந்த காலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க.,வும் ஊழல் கட்சிதான்; தண்டிக்கப்பட வேண்டியது தான்' என்று அதிரடியாக புகார் கூறினார். 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஊழல் வழக்குக்காக தண்டிக்கப்பட்டவர்' என்றும் கூறினார்.இதையடுத்து, அ.தி.மு.க., தொண்டர்கள் பா.ஜ.,வுக்கு எதிராக கொந்தளிக்க, அதை சாக்காக வைத்து, கூட்டணியில் இருந்து விலகினார் பழனிசாமி. தமிழகத்தில் தன் தலைமையில் காங்., - வி.சி.,க்களை இணைத்து, நடப்பு லோக்சபா தேர்தலுக்கு வலுவான கூட்டணியை கட்டமைக்கலாம் எனவும் திட்டமிட்டு, பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இறுதியில் தே.மு.தி.க.,வை மட்டும் வைத்துக் கொண்டு லோக்சபா தேர்தலை சந்தித்தார். அ.தி.மு.க.,வுக்கான வெற்றி முகம், எந்தத் தொகுதியிலும் தென்படவில்லை. இதனால், கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் பழனிசாமி மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில், இந்த இக்கட்டான நிலைக்கு அண்ணாமலையே முழு காரணம் என நினைக்கும் பழனிசாமி, அதையே தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கூறி வந்தார். அவர்களிடம் அந்தக் கருத்து எடுபடவில்லை. இதனால் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, புது கருத்துச் சொல்லத் துவங்கி உள்ளார்.'கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வாய்ப்பில்லை. அதையும் மீறி வெற்றி பெற்றால், அவர் மத்திய அமைச்சராகி டில்லி சென்று விடுவார். தோல்வியடைந்தால், தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக பா.ஜ., தலைவர் பதவியை ராஜினாமா செய்வார். எப்படியிருந்தாலும், தமிழக பா.ஜ., தலைவர் பதவி, தேர்தல் முடிவுக்குப் பின் அவரிடம் இருக்காது. அடுத்த சட்டசபைத் தேர்தலுக்குள் அ.தி.மு.க.,வை வெற்றிக் கட்சியாக மாற்றி விடலாம்' என கூறி தெம்பூட்டி வருகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Easwar Kamal
மே 02, 2024 20:38

அது செரிங்கோ ஆனால் நீங்கள் நாடாளும் மன்றத்துக்கு உதவ வில்லை அடுத்து வருகின்ற சட்டசபை எப்படி உங்களுக்கு கை கொடுப்பார்கள் அப்படியே கூட்டணி வைத்தாலும் துணை முதல்வர் பதவி வேண்டும் என்பார்கள் குறைந்தது சீட் கேட்பார்கள் ஓத்து கொள்வார்களா உங்கள் அடிபொடிகள் கண்டிப்பாக ஓபிஸ் மற்றும் தினகரன் சீட் கேட்பார்கள்


பேசும் தமிழன்
மே 02, 2024 19:51

பங்காளி கட்சி திமுக.... தேர்தலில் வெற்றி பெற பங்காளி.... பழனி உதவி செய்து இருக்கிறார்.... இதில் என்ன தவறு ???


வீர தமிழன்
மே 02, 2024 19:51

எடப்பாடி தன் சொந்த நலனுக்காக பாஜகவை விட்டு அண்ணா திமுகவை கூட்டணியில் இருந்து வெளியே கொண்டு வந்தார் காரணம் கொடநாடு மற்றும் சொத்து குவிப்பு வழக்கு இல் இருந்து தப்பிக்க எடுத்த முடிவு ஆகும் அண்ணாமலையை மாற்றுவது என்பது கனவிலும் நடைபெறாது ஏனென்றால் அண்ணாமலையின் வலது புறம் மோடியும் இடதுபுறம் அமித் ஷாவும் பின்னால் நட்டாவும் உள்ளார்கள் நீங்கள் யாரை பிடித்து இவரை மாற்ற முடியும் அண்ணாமலையின் பதவிக்காலம் 2026 ஜூன் வரை உள்ளது ஆகையால் அண்ணாமலை மாற்றப்படுவார் என்பது உங்கள் கனவில் கூட நடக்காது.


Jagan (Proud Sangi)
மே 02, 2024 18:42

பாஜ தோத்தால் அண்ணாமலை பதவி விலகணும் என்றால் அதிமுக தோத்தால் எடப்பாடி பதவி விலகணும் பாஜ தோற்கப்போவது இல்லை வாக்கு சதவிகிதம் நிச்சயம் பதினெட்டு முதல் இருபது வரை வரலாம் எனவே ல் பாஜ இல்லாமல் இவரால் கனவு கூட காண முடியாது பாஜ குறைந்த பட்சம் நூறு தொகுதி கேட்பார்கள் இல்லை தனித்து போட்டி என்று அதிமுகவை காலி செய்வார்கள் எப்பிடி பார்த்தாலும் எடப்பாடி பதவிக்கு சங்கு தான்


GoK
மே 02, 2024 18:17

காற்றடித்து கோபுரத்தில் உட்கார்ந்த குப்பைகள், படிப்பறிவுடன் அனைத்திந்திய தேர்வில் வெற்றி பெற்று காவல் துறையில் ஒரு உயர் பதிவில் இருந்து தானாகவே விலகி பொது மக்கள் சேவைக்கு அரசியலுக்கு வந்தவரை விமரிசிக்க தகுதி இல்லாதவர்கள் அவர் சொன்னதில் என்ன தவறு?


Kumar Kumzi
மே 02, 2024 16:08

அதிமுகவுக்கு ஆப்பூ அடிச்ச ஒனக்கு ஆப்பு நிச்சயம்


Sck
மே 02, 2024 14:45

பாடி எப்படி? தோற்ப்பது என்னவோ உறுதி, சோ, தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா?


MADHAVAN
மே 02, 2024 13:50

தமிழகத்துல அண்ணாமலைக்கு பதவிபரிப்பு நிச்சயம்


enkeyem
மே 02, 2024 15:29

அண்ணாமலை வென்றாலும் தோற்றாலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி நிச்சயம் தமிழக கட்சியின் தலைமையில் அவருக்கு மிக முக்கிய இடம் உண்டு


Kumar Kumzi
மே 02, 2024 16:10

அம்பூட்டு பயமா


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 02, 2024 12:54

கோவை அதிமுக அதிமூக்கிய தலைவர் ஒருவரே கோவையில் அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டும் திமுகவிற்கு அல்லது பாஜகவிற்கு ஓட்டு போடச் சொல்லி அதிமுகவினரும் கோவையில் இரண்டு பிரிவாக பிரிந்து ஒரு பிரிவு திமுகவிற்கும் மற்றொரு பிரிவு பாஜகவிற்கு வாக்களித்து உள்ளாதாக பேசிக் கொள்கிறார்கள் சென்ற பஞ்சாயத்து தேர்தலிலேயே அந்த பிரமுகர் திமுகவின் வெற்றிக்கு உதவியாகவும் அதன் காரணமாக தான் செந்தில் பாலாஜி அவர்கள் கொங்கு மண்டலத்தில் பஞ்சாயத்து மாநகராட்சிகளை கைப்பற்றி வெற்றி பெற்று திமுகவில் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நிரந்தர பெருமை பெற்று தந்ததாகவும் இதன் காரணமாகவே அந்த அதிமுக்கிய பிரமுகர் மீது வருமானத்திற்கு மேல் சொத்து ஈட்டியதாக எவ்வித வழக்குகளும் தொடுக்க படவில்லை என்றும் பேசிக் கொள்கிறார்கள் அய்யா இவர் திமுகவின் ஸீலீப்பர் செல்லாக இருந்து கொண்டு வரும் தேர்தலில் திமுக பக்கம் சாயக்கூட சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாம் வாழ்க தமிழகம் வளர்க பாரதம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கீ ஜெய் தமிழ் அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும்


ram
மே 02, 2024 11:47

சிறுபான்மையினர் எப்போதும் திருட்டு திமுகாவுக்குத்தான் வோட்டு பிட்சை போடுவார்கள் எதற்கு இந்த எடப்பாடி கட்சிக்கு வேண்டாத வேலை எப்படியும் அவர்கள் வோட்டு போட மாட்டார்கள் அப்புறம் எதற்கு அவர்களை புடித்து தொங்கி கொண்டு இப்போது என்னவாச்சு கட்சி சார்பில்லாத திருட்டு திமுகவை பிடிக்காத ஹிந்துக்கள் பீ ஜெ பி கு அவர்கள் வோட்டை போட்டு விட்டார்கள்


மேலும் செய்திகள்