உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தாறுமாறாக உயர்ந்த காய்கறிகள் விலை: கிராம் கணக்கில் வாங்க வேண்டிய சோகம்

தாறுமாறாக உயர்ந்த காய்கறிகள் விலை: கிராம் கணக்கில் வாங்க வேண்டிய சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், தங்கத்தை போல கிராம் கணக்கில் அவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் காய்கறி, பழங்கள், மூலிகைகள், வாசனை பொருட்கள், பூக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள், 39.2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன.இதன் வாயிலாக, ஆண்டுதோறும், 2.31 கோடி டன் தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தியாகின்றன.

6.9 லட்சம் ஏக்கர்

பெரம்பலுார், திருச்சி, துாத்துக்குடி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் சிறிய வெங்காயம்; தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் தக்காளி சாகுபடி நடக்கின்றன.கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கை, அவரைக்காய் உள்ளிட்ட பலவகை காய்கறிகள் சாகுபடி நடக்கின்றன.ஆண்டுதோறும், 6.90 லட்சம் ஏக்கரில் காய்கறி சாகுபடி நடந்தாலும், மாநிலத்தின் ஒட்டு மொத்த தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை.எனவே, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிடம் கையேந்தும் நிலை நீடித்து வருகிறது.

பட்ஜெட் அறிவிப்பு

காய்கறிகள் சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றன. இதற்காக பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளாக பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளன. இவற்றிற்கு அரசு உத்தரவு பெறப்பட்டு, திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாக தோட்டக்கலை துறையினர் கூறி வருகின்றனர். ஆனாலும், காய்கறிகள் உற்பத்தி அதிகரிக்கவில்லை.தற்போது, தமிழக மாவட்டங்களில் காய்கறி உற்பத்தி முடங்கியுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து பெறப்படும் காய்கறிகளை வைத்து நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது.வாகன வாடகை, மூட்டை ஏற்றி இறக்கும் கூலி, லாபம் ஆகியவற்றை கணக்கிட்டு, காய்கறிகளை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

பீன்ஸ் 170 ரூபாய்

இது, பொது மக்களுக்கு கட்டுப்படியாகாத விலையாக உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், கிலோ வெங்காயம் மற்றும் தக்காளி 50; சிறிய வெங்காயம் 80 ரூபாயையும் தொட்டு விட்டன.கேரட் 80 ரூபாய்க்கும், பீட்ரூட் 60, பீன்ஸ் 170, கத்தரிக்காய் 70, வெண்டைக்காய் 60, பாகற்காய் 60, புடலங்காய் 40, சேனைக் கிழங்கு 90, சேப்பங்கிழங்கு 50, பச்சை மிளகாய் 100, இஞ்சி 150, எலுமிச்சை 120, நுாக்கல் 50, முள்ளங்கி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.இதனால், கிலோ கணக்கிற்கு பதிலாக, தங்கத்தை போல, 100 கிராம், 200 கிராம் என, காய்கறிகளை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Gnanam
மே 31, 2024 20:19

ஒரு நாள் குடிசெல்வை நிறுத்தி,வீட்டில் அட்லீஸ்ட் 5 காய்கறி இடமிருந்து அதில் பயிர் செய்யுங்க...வாரத்துக்கு ஒரு முறை குடி நிறுத்தி வீட்டு தோட்டம், மாடி தோட்டம் பண்ணுங்க...


Sampath Kumar
மே 31, 2024 08:55

வாங்கட்டும் நல்ல வாங்கட்டும் மழை இல்லை விவசாயம் இல்லை பின்பு எப்படி காய்கறிகள் பயிரிட முடியும்? பெயரிடல் தான் விளைச்சல் அதிகரிக்கும் விளைச்சல் அதிகரித்தல் வில்லை தானாக இறங்கும் அப்போ புரியும் ஆனல் மக்கள் உண்ணார் மாட்டார்கள் தங்கத்தின் பின்னல் மட்டும் ஓடும் பைத்தியகர்கள் தங்கத்தை வைத்து திங்க முடியமா?


chennai sivakumar
மே 31, 2024 08:10

விளை நிலங்கள் விற்க்கப்பட்டால் விண்ணில் பயிர் செய்ய முடியுமா????


கௌதம்
மே 31, 2024 07:54

வருடத்தில் 10 மாதம் நஷ்டப்படும் விவசாயிகள் இந்த 2 மாதமாவது லாபம் சம்பாதிக்கட்டும்... 100ரூ வாங்கிய காய்கறிகள் 1000ரூ என்றாலும் சந்தோசமாக வாங்குவேன்.. சாராயம் விலை எவ்வளவு ஏறினாலும் வாங்கியே தீரும் நம் மக்களுக்கும் இது மிகப்பெரிய சுமையா என்ன?


Suresh sridharan
மே 31, 2024 07:32

அரசாங்கத்துக்கு என்ன வேலை பாரின்ல ஏதாவது தமிழர்கள் பற்றி சொல்றாங்களா வட நாட்டுல தமிழ் பத்தி சொல்றாங்களா மோடி அதை பண்ணுனாரு இத பண்ணினாரு மோடி இது இது பாக்குறதுக்கு தான் நேரம் ஆனா இங்க மக்கள் என்ன நிலைமையில் இருக்காங்க நிம்மதியா இருக்காங்களா காய்கறி விலை என்ன வீட்டு வாடகை என்ன தண்ணீர் எப்படி கிடைக்குது கரண்ட் பில் என்று ரோட்ல நடக்க முடியுதா கண்ட காளி பசங்க கஞ்சா தண்ணி அடிச்சிட்டு ரோட்ல அரசாங்க அதிகாரி பொதுமக்கள் எல்லாரையும் புடிச்சு அடிச்சுட்டு நடக்கிறானுங்க இத பாக்குறது நேரம் இல்லை யாருக்கும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை