உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: சோனியாவை சமாதானப்படுத்திய ராகுல்!

டில்லி உஷ்ஷ்ஷ்: சோனியாவை சமாதானப்படுத்திய ராகுல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., -- காங்., ஆகிய இரண்டு கட்சிகளும், பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறும் போது, ஒவ்வொரு வாரமும் அனைத்து எம்.பி.,க்களையும் அழைத்து, பார்லிமென்ட் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தும்; இதை பார்லிமென்ட் கமிட்டி கூட்டம் என்பர்.பா.ஜ., பார்லிமென்ட் கமிட்டி கூட்டத்தில் பிரதமரும், காங்., கூட்டத்தில், கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவரான சோனியாவும் பேசுவர். சமீபத்தில் நடைபெற்ற காங்., கூட்டத்தில் பேசிய சோனியா, 'நடக்கவிருக்கும் மஹாராஷ்டிரா உட்பட சில மாநில சட்டசபை தேர்தல்களில் நம் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; பா.ஜ.,வின் சரிவு ஆரம்பித்து விட்டது' என பேச, எம்.பி.,க்கள் மேஜைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்; சோனியாவிற்கோ ஏகப்பட்ட சந்தோஷம்.இதைத் தொடர்ந்து, 'நேஷனல் ஹெரால்ட் சம்பந்தப்பட்ட வழக்கில் நம் கட்சி எந்தவித தவறும் செய்யவில்லை. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., போன்ற அமைப்புகளை வைத்து, எங்களை மிரட்டப் பார்க்கிறார் மோடி; இதெற்கெல்லாம் அஞ்ச மாட்டோம்' என, கோபமாக பேசினாராம் சோனியா. உடனே, அம்மாவின் பக்கத்தில் சென்று அவரை தட்டிக் கொடுத்து,'கோபப்பட வேண்டாம்; அமைதியாக இருங்கள்' என கூறினாராம் ராகுல். இதைப் பார்த்து நெகிழ்ந்து போயினர், காங்., - எம்.பி.,க்கள்.இதையடுத்து தான், 'அமலாக்கத்துறை என் வீட்டை ரெய்டு செய்யப் போகின்றனர்; அதற்காக, அவர்களுக்கு டீ, பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்' என, ராகுல் கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ponssasi
ஆக 08, 2024 18:04

ஒரு இந்தியர் இங்கிலாந்து பிரதமரானபோது கொண்டாடுகிறோம், கமலா ஹரிஷ் அமெரிக்க துணை ஜனாதிபதியாகும்போது சிலாகிக்கிறோம், அதிபர் வேட்பாளர் ஆகும்போது ஆனதப்படும் நாம் ஒரு இத்தாலிய பெண்ணை பிரதமாகும் நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெளிநாட்டுக்காரி என கூச்சல் போடும் நாம் நம்மை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அமெரிக்காவோ, இங்கிலாந்தோ அவர் இந்தியர் அவருக்கு என்னை ஆள தகுதி இல்லை என சொல்லவில்லை, திறமை எங்கு உள்ளதோ, மக்கள் யாரை ஆதரிக்கின்றனரோ அவர்கள் பிரதமராக வருகிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் என விளித்த, அகிம்சையை பிறந்ததாக சொல்லப்படும், அனைத்து மதமும் சமம், என சொல்லப்படும் உலகின் மிக பெரிய ஜனநாயக தேசத்தில் மக்களால் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வென்றபின் அவர் இந்தியர் அல்ல என பிரதமராக பதவியேற்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டனர்.


Raj
ஆக 05, 2024 15:05

சோனியாவ இந்தியா சிடிஸின்ஸ், ஏனென்றால் ராஜிவ் காந்தியை இந்தியா சட்டப்படி திருமணம் செய்திருக்கார். அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு. அவர் இந்தியாவுக்காக தந் வாழ்வை அர்பணித்திருக்கிறார். இத்தாலிக்காக அல்ல. சங்கிகளுக்கு அது புரியாது.


Raghavan
ஆக 05, 2024 12:40

மகாராஷ்டிராவை பொருத்த நாட்டில் அதன் கூட்டுனியான சுப சேனா துரோகி பிஜேபி மூலம் அதிக எம்எல்ஏ களைப் பெற்று இன்று காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக்கொண்டு கேவலமான அரசியல் செய்கிறார்கள்


விஜய்
ஆக 04, 2024 11:33

கொடும இதெல்லாம் நம்ம நாட்டுல வந்து தைரியமா பேசிட்டு இருக்குதுங்க


subramanian
ஆக 04, 2024 10:20

ஆக மொத்தம் தங்கள் தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்ய எண்ணம் இல்லை.


pappu69
ஆக 04, 2024 01:27

waiting with tea biscuit for ED team to ride is a cheap stunt , this silly pappu to divert people attention from his criminal negligence by killing 381 innocent lives in wayanad


A Viswanathan
ஆக 04, 2024 08:10

இத்தாலியிலிருந்து இங்கு வந்து நம் நாட்டை கொள்ளை அடித்து விட்டு என்னமா பேசுகிறார்கள். இவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.நாடு கடத்த வேண்டும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி