உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பயங்கரவாதிகள் பயிற்சி தளமாக மாறி வரும் சத்தியமங்கலம் காடு

பயங்கரவாதிகள் பயிற்சி தளமாக மாறி வரும் சத்தியமங்கலம் காடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:பயங்கரவாதிகள் ஆயுத பயிற்சி பெறும் இடமாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி மாறி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல், அதே பகுதியைச் சேர்ந்த ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின், கார் குண்டு வெடிப்பை நடத்தி பலியானார். இதுகுறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஜமேஷா முபின் கூட்டாளிகள் 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.தொடர் விசாரணையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில், அவர்கள் வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை, வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆயுத பயிற்சிக்கான தளமாக மாற்றி உள்ளனர். அவர்கள் சதி திட்டம் தீட்ட ரகசிய கூட்டங்களையும் நடத்தி இருப்பது, எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவது பற்றி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

subramanian
மே 04, 2024 08:07

திமுக அராஜக ஆட்சிக்கு வந்தால் இப்படி நடக்கும் இந்த கட்சி தீய சக்திகள் கூடாரம் திமுக இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் திமுக தலைமை முதல் கீழ் மட்ட தொண்டன் வரை அனைவரது வருமானத்துக்கு அதிகமாக இருக்கும் சொத்துக்களை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை