உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்...: சிவகுமாரின் பண உதவி!

டில்லி உஷ்ஷ்ஷ்...: சிவகுமாரின் பண உதவி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கர்நாடகாவில் இப்போது காங்., ஆட்சி நடைபெறுகிறது. சித்தராமையா முதல்வராக இருந்தாலும், பண விவகாரத்தில் கட்சியை நன்றாக கவனித்துக் கொண்டிருப்பது, துணை முதல்வர் சிவகுமார். கட்சியின் தேசிய தலைமைக்கும் அதிக அளவில் பண உதவி செய்து வருகிறார்.தமிழகத்தில் உள்ள ஒரு மாநில கட்சி, கர்நாடகாவில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது. இந்த கட்சிக்கு பணத்தை அள்ளி வீசியுள்ளாராம் சிவகுமார். இது பலரையும், ஏன் காங்கிரஸ் கட்சியினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எதற்கு இந்த கட்சிக்கு பணம் தருகிறார்?கர்நாடகாவில் பா.ஜ.,வை சுத்தமாக ஒழிக்க வேண்டும் என்பது இவருடைய குறிக்கோள். அதனால், இந்த தமிழக கட்சிக்கு உதவியுள்ளாராம்.இந்த கட்சிக்கு கிடைக்கும் ஓட்டுகளால் பா.ஜ.,வின் ஓட்டு குறையும். இதனால் பெரிதாக ஒன்றும் ஆகப் போவது இல்லை என்றாலும், ஒரு வேளை வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்தால், இந்த கட்சி காங்கிரசுக்கு உதவும் என்கிற நப்பாசை தான் காரணமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

srinivasan Ramesh
மே 12, 2024 07:48

vee cce kka


நிக்கோல்தாம்சன்
மே 12, 2024 06:28

ரியல் எஸ்டேட் ன்று விவசாயிகளை மிரட்டி திருடும் நவீந திருடன் இந்த காங்கிரஸ் அரசியல்வாதி


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி