உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின் ஆலோசனை; பா.ஜ.,வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டம் நடத்த திட்டம்

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின் ஆலோசனை; பா.ஜ.,வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டம் நடத்த திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமலாக்கத்துறை வழக்கில் சிக்கி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 11ம் தேதி ஜாமினில் வந்தார். தற்போது, லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருக்கும் அவரை, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mors1zug&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களிடம், 'நடக்கும் லோக்சபா தேர்தலில், இண்டியா கூட்டணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும்; இல்லையேல், எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் வரிசையாக சிறையில் தள்ளப்படுவர்' என, கெஜ்ரிவால் கூறி வருகிறார்.

ராகுல் ஏன் மவுனம்

கெஜ்ரிவால் ஜாமினில் வந்ததும், அவருக்கு வாழ்த்து கூறி பேசிய இண்டியா கூட்டணி தலைவர்களில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் ஒருவர். இருவரும் போனில் நீண்ட நேரம் பேசியுள்ளனர். கெஜ்ரிவாலிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாக, அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கெஜ்ரிவால் அவர்களே... உங்களின் உறுதியான சட்ட போராட்டத்தைக் கண்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் அதிர்ந்துள்ளனர். லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. துவக்கத்தில், பா.ஜ., பக்கம் ஆதரவு இருப்பது போன்ற சூழல் காணப்பட்டது. அடுத்தடுத்த கட்டங்களில் நிலைமை மாறியுள்ளது. பா.ஜ.,வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்றே, பலரும் கூறுகின்றனர். துவக்கத்தில், 'இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்' என்று கேட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தற்போது காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே தான் போட்டி' என்று கூறி வருகிறார். அம்பானி -- அதானிக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் மோடி, அவர்கள் குறித்து ராகுல் ஏன் மவுனம் காக்கிறார் என்று பேசி, தன் பதற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பா.ஜ., தலைவர்கள் இப்படி மாறி மாறி பேசுவது, அவர்கள் தோல்வி பயத்தில் இருப்பதையே காட்டுகிறது.

யோசனை

கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் இன்றைக்கல்ல; என்றைக்கும் பா.ஜ.,வுக்கு வேலையில்லை. எதிர் அணியினர் பலவீனமாக இருப்பதை பயன்படுத்தி, கட்சியை ஓரளவுக்கு வளர்க்க முயற்சித்திருக்கலாம். ஆனாலும், இங்கெல்லாம் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது. அமலாக்கத்துறை வாயிலாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டி.ஆர்.எஸ்., கவிதா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் நீங்கள் என, பல தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்ததால், பா.ஜ.,வுக்கு எதிரான மனநிலை, மக்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் அனைவரையும், டில்லிக்கு வரவழைத்து, தேர்தலுக்காக பிரமாண்ட கூட்டம் நடத்த வேண்டும் என்ற, என் யோசனை ஏற்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளில் நீங்கள் களம் இறங்கிய போது தான், அமலாக்கத்துறை உங்களை கைது செய்தது. அதனால், கூட்ட ஏற்பாடு கைவிடப்பட்டது.தற்போது, இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக எழுச்சியான சூழல் இருப்பதால், கடைசி கட்ட லோக்சபா தேர்தலுக்கு முன், டில்லியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். அதற்கு, நீங்களே முயற்சி எடுக்க வேண்டும். ராகுல், உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி யாதவ், சரத்பவார், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களோடு, நானும், நீங்களும் பங்கேற்க வேண்டும்.

கூட்டணிக்கு பலம்

முடிந்தால், வேறு சில மாநிலங்களுக்கும், நீங்கள் பிரசாரத்துக்கு செல்லுங்கள்; அது, நம் கூட்டணிக்கு பலமாக இருக்கும். இவ்வாறு கெஜ்ரிவாலிடம் ஸ்டாலின் கூறி உள்ளார்.

அதை ஏற்ற கெஜ்ரிவால் பதிலுக்கு தெரிவித்ததாவது:

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும், அமலாக்கத்துறை வாயிலாக நெருக்கடிகள் வரும் என்பதால் தான், இண்டியா கூட்டணியை பலமானதாக்க வேண்டும் என்றேன். ஆனால், எதிர்க்கட்சிகள் தரப்பில் இருக்கும் ஒரு சில தலைவர்கள், என்னையே எதிரியாக பார்த்தனர். அதன் விளைவையே, எல்லாரும் அனுபவிக்கிறோம்.எதிர்க்கட்சி தலைவர்களில் சிலரே, டில்லி, பஞ்சாபை கடந்து, ஆம் ஆத்மி வளர்ந்து விடக்கூடாது என்று நினைக்கின்றனர்.

ஒத்துழைப்பு

அந்த நினைப்பை விட்டு விட்டு, ஒவ்வொருவரையும் காப்பாற்றிக் கொள்ளவாவது ஒன்றுபட வேண்டும். இதை நீங்கள் எல்லாரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். வெற்றி - தோல்வி பற்றி கவலைப்பட வேண்டாம். பா.ஜ.,வை எதிர்க்கும் இண்டியா கூட்டணி, தேர்தலுக்கு பின்னும் ஒற்றுமையோடு தொடர வேண்டும். அதற்காக, என் கவுரவம் கெடாத வரை, என்னாலான எல்லா ஒத்துழைப்பையும் வழங்குவேன். உங்கள் மீது இண்டியா கூட்டணி தலைவர்கள் பலருக்கும் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. அதனால், டில்லி பொதுக்கூட்டத்துக்கு நீங்களே முயற்சி எடுங்கள்; அனைத்து ஒத்துழைப்பையும் தருகிறேன்.இவ்வாறு ஸ்டாலினிடம் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்திற்கான அடுத்த கட்ட பணிகளை ஸ்டாலின் துவக்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

நரேந்திர பாரதி
மே 15, 2024 05:19

இனிமேல் டெவலப்மென்ட்டெவலப்மென்ட்டெவலப்மென்ட் தான்பேபேபே


DARMHAR/ D.M.Reddy
மே 14, 2024 23:00

கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்ற முதுமொழி சிலருக்கு நினைவு வரலாம்


Duruvesan
மே 13, 2024 20:26

ஸ்டாலின் கண்டி பிரச்சாரம் பண்ணா ராவுள் ரபரேலி ஜெயிப்பது உறுதி வருங்கால பிரதமர் கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க


Rajah
மே 13, 2024 18:54

காங்கிரஸின் பரம எதிரியுடன் கைகோத்திருப்பது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது என்று பாருங்கள் தற்செயலாக வென்றால் பிரதமர் பதவிக்கு அடித்துக் கொள்வார்கள் வெட்கமே இல்லாதவர்கள்


kulandai kannan
மே 13, 2024 18:24

கும்மிடிபூண்டி தாண்டாதவரெல்லாம் டெல்லி அரசியல் பேசலாமா?


Ravichandran S
மே 13, 2024 18:16

என்ன இப்படி சொல்லிட்டீங்க


rishi
மே 13, 2024 17:26

அப்படியே உதயநிதியையும் மறக்காம கூட்டிட்டு போங்க, சனாதன கணக்கு இன்னும் பாக்கி இருக்கு, வச்சி செய்யணுமுல்ல


Muralidharan S
மே 13, 2024 17:15

முப்பத்தி ஒன்பது இடங்களை வென்றால் கூட வழக்கம் போல பாராளுமன்ற கேன்டீனில் தான் வாசம் மொத்தமாக நூறு இடங்களை கூட தாண்ட முடியாத கூட்டணியில் பத்து பேர் பிரதமர் கனவில் நடத்துங்கள் ஆலோசனையை


vijay
மே 13, 2024 16:44

அதாவது ஜெயிப்போம் என்ற நினைப்பை விட்டு விட்டு, ஒவ்வொருவரையும் காப்பாற்றிக் கொள்ளவாவது ஒன்றுபட வேண்டும் இதை நீங்கள் எல்லாரிடமும் எடுத்துச் சொல்லுங்கள் ஆக, ஊழல் வழக்குகளில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளவே இந்த புள்ளி வைத்த கூட்டணி முயல்கிறது, கூட்டு சேர்ந்துள்ளது என்பதை இவர்களே வெளியே சொல்லிவிட்டார்கள் இதற்கப்புறமும் இவர்களை நம்பி வோட்டளிப்பதை மக்கள் நிறுத்தவேண்டும்


Chegalvatayan
மே 13, 2024 16:29

தர்மம் வெல்லும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை