உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை இங்கிலாந்து மியூசியத்தில் கண்டுபிடிப்பு

திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை இங்கிலாந்து மியூசியத்தில் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை, 1957ம் ஆண்டு திருடு போனது. இது, 15-ம் நுாற்றாண்டு சிலையாகும். இது தொடர்பாக, கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சி.ஐ.டி.,யில் புகார் மனு அளிக்கப்பட்டது. விசாரணையில், மர்ம நபர்கள் திருமங்கையாழ்வார் சிலையை திருடி விட்டு, பக்தர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க போலி சிலையை வைத்தது தெரிந்தது.இக்கோவிலில் திருடு போன உண்மையான சிலையின் படம், புதுச்சேரியில் உள்ள இந்தோ- - பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டில் இருந்து பெறப்பட்டு, போலி சிலையுடன் ஒப்பிடப்பட்டது. அத்துடன் அந்த உண்மையான சிலையை, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள, அஷ்மோலியன் அருங்காட்சியக நிர்வாகம், 1967ம் ஆண்டு, சூத்பி ஏல மையத்தால் ஜே.ஆர்.பெல்மான்ட் என்ற சிலை சேகரிப்பாளரிடம் இருந்து ஏலம் எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளது.இந்நிலையில், இந்திய பிரைட் திட்டத்தின், தொல்பொருள் நிபுணர் விஜய்குமார், திருமங்கை ஆழ்வார் சிலை, தமிழகத்தில் இருந்து திருடப்பட்டது என்பதை உறுதி செய்து, அருங்காட்சியக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் மற்றும் லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையம், தமிழக சிலை தடுப்பு பிரிவு போலீஸ் ஆகியவை இணைந்து, சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு, முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதையடுத்து, அந்த சிலையை ஒப்படைக்க அஷ்மோலியன் அருங்காட்சியகம் விருப்பம் தெரிவித்துள்ளது.இதையடுத்து, அந்த சிலையை, இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது குறித்து, இந்திய பிரைட் திட்டத்தின் தொல்பொருள் நிபுணர் விஜய்குமார் கூறியதாவது:திருமங்கை ஆழ்வார் சிலை விஜயநகர காலத்து சிலையாகும். இச்சிலையை கொண்டு வர அருங்காட்சியம் நிர்வாக குழு ஒப்புதல் உள்ளது. 90 சதவீத செயல்பாடுகள் முடிந்து, இந்தியாவிற்கு விரைவில் வர ஏற்பாடு நடந்து வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் சில சிலைகள் ஏலம்

சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான காளிங்க நர்த்தன கிருஷ்ணன் சிலை, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கலை அருங்காட்சியகத்திலும், விஷ்ணு சிலை டெக்சாசில் உள்ள கிம்பெல் கலை அருங்காட்சியகத்திலும், ஸ்ரீதேவி சிலை புளோரிடாவில் உள்ள ஹில்ஸ் ஏல தொகுப்பு மையத்திலும் ஏலம் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.- - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 12:07

இங்கு ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் சுரண்டிய செல்வங்களை திரும்பக் கொண்டு வந்தால் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாம்தான். இதனை மறக்கடிக்கதான் வெள்ளையர்களே நமக்குக் கல்வியறிவு கொடுத்தவர்கள் என்ற பிரச்சாரம்.


Gopalan
ஜூன் 11, 2024 10:49

இது போன்ற திருட்டு சிலைகள் இங்கிலாந்து நாட்டில் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். தங்கங்கள் எவ்வளவு கோவிலில் இருந்து போனது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி