உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வயிறு எரிகிறது; 2 நாளாக சாப்பிடல: மாஜி அமைச்சர் உதயகுமார் குமுறல்

வயிறு எரிகிறது; 2 நாளாக சாப்பிடல: மாஜி அமைச்சர் உதயகுமார் குமுறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓட்டு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான ஆலோசனைகளை வழங்க, நேற்று தேனி வந்தார், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.அப்போது அவர் அளித்த பேட்டி: தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளரைக் காட்டிலும் அ.தி.மு.க., வேட்பாளர் அதிகம் உழைத்திருக்கிறார். தொகுதியின் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று 9 லட்சம் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டிருக்கிறார். ஆனால், ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுள்ளனர். அதில் கருத்து திணிப்பு நடத்தி, எங்கள் தொண்டர்களை சோர்வடைய செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. அ.தி.மு.க.,வுக்கு என நிரந்தர ஓட்டு வங்கி உள்ளது. அ.தி.மு.க.,வினர் ஒரு போதும் மாற்று கட்சியினருக்கு ஓட்டளிக்க மாட்டர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 25 இடங்களை கட்டாயம் அ.தி.மு.க., பெறும். தேனி தொகுதியில் கட்டாயம் வெற்றி பெறுவோம். ஓட்டளித்து விட்டு வருவோரிடம் ரகசிய கருத்துக்கணிப்பு நடத்தியதாக சொல்கின்றனர். ரகசியமாக நடத்தப்படும் கருத்துக்கணிப்பு எப்படி ஒழுங்காக இருக்கும்?15 லட்சம் வாக்காளர்கள் உள்ள தொகுதியில், 3 லட்சம் வாக்காளர்களிடம் கேட்டு, அவர்கள் கருத்தறிந்து கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தால் ஓரளவுக்கேணும் சரியாக இருக்கும். ஆனால், ஒரு சிலரிடம் மட்டும் கருத்துக்கேட்டு விட்டு, ஒட்டுமொத்த மக்களின் கருத்து போல சொல்வது அபத்தம். ஒரு தரப்பினர் ஆன்-லைனில் கருத்துக் கணிப்பு நடத்தினோம் என்கின்றனர். தொகுதி வாக்காளர்களில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களிடமாவது கருத்து கேட்டிருக்க வேண்டாமா?தற்போது வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பார்த்துவிட்டு வயிறு எரிகிறது. இரண்டு நாட்களாக நான் சாப்பிடவில்லை. கடும் மன உளைச்சலில் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்-நமது நிருபர்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

என்றும் இந்தியன்
ஜூன் 08, 2024 15:53

இரண்டு நாட்களாக நான் சாப்பிடவில்லை.????யாரு நீ ரெண்டு நாளாக???அப்போ எப்படி இவ்வளவு பேசமுடியுது???அதாவது சரக்கு அடிக்கமுடியவில்லை ரெண்டு நாளாக வயித்தெரிச்சல்களினால் என்று சொல்லுங்க


ram
ஜூன் 06, 2024 12:08

இப்போது வயிறு எரிகிறதே என்று கூவ வேண்டியது.


Venkatesan
ஜூன் 05, 2024 17:29

இனி இரட்டை இலை தமிழகத்திற்கு தேவை இல்லை.


skv srinivasankrishnaveni
ஜூன் 05, 2024 14:18

எங்களுக்கு உச்சிமுதல் பாதங்கள்வரை எரியுதே தைலங்களை பிச்சைக்காரனாக்கியதே அதிமுக அண்ட் திமுக தான்யா ஏழைகளை இன்னம் பரம ஏழையாக்கியத்து நீங்கல்லாம் சுகமா சொகுசா வாழறேறீங்க என்பதுதான் உண்மை


ராது
ஜூன் 05, 2024 08:36

பெயர் சொல்லுவதே - உதய்-குமார் பாஜக வேண்டாம் என்றால் நீங்களெல்லாம் ஜெ ஜெ என்று நினைப்பு - இரட்டை மனம் கொண்ட இரட்டை இலை இலையுதிர் காலத்தில் இலையை இழுக்கும் சூரியனின் வெப்பத்தால் - ஆனால் தாமரை மலருமே சூரியனைத் கண்டு - தாமரை இலை தண்ணீர் போல் இரட்டை இலை கூட்டணியில் இருந்ததால் வழுக்கியதே


thiruvazhimaruban kuttalampillai
ஜூன் 05, 2024 07:53

அதிமுக பாஜக கூட்டணியை அழிக்க வேண்டும் என்று திமுக ஆதரவாக இருந்த சி வி சண்முகம் ஜெயகுமார் முனுசாமி சொல்லூர் ராஜி திண்டுக்கல் சீனிவாசன் செங்கோட்டையன். கடம்பூர் ராஜி ராஜன் செல்லப்பா பொள்ளாச்சி ஜெயராமன் போன்றவர்கள் சிறுபான்மையினர் வாங்கு வங்கிக்கு கூட்டணியிலிருந்த பாஜகவை அவமான செய்தற்கு கிடைத்த ஆப்பு


Sebastinantony A Antony
ஜூன் 05, 2024 07:29

அய்யோ அய்யோ எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு எறியுது ???


சுந்தர்
ஜூன் 04, 2024 08:17

வாய்ப்பே இல்ல ராஜா


Devan
ஜூன் 04, 2024 07:15

முடிவு தெரிந்ததும் சாப்பிடவே முடியாதே என்ன செய்ய போகிறீர்கள்.


Jagan (Proud Sangi)
ஜூன் 04, 2024 03:44

புள்ளியியல் போர்முலா உண்டு. சரியான சாம்பிள் எடுத்தால் ஆண் , பெண், நடு வயது, முதியோர், வேலைக்கு செல்வோர் , தொழில் முனைவோர் எல்லாம் சரியான % அளவில் இருந்தால் ப்ரொஜெக்ஷன் சரியாக வரும். இவர் படிக்காதவர் மற்றும் அடிதடி நம்பி அரசியலில் இருப்பவர் எனவே வயிறு எரியுது, கும்பி கருகுது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை