உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வர் வேட்பாளராக தலித் தலைவரை முன்னிறுத்த தமிழக பா.ஜ., திட்டம்

முதல்வர் வேட்பாளராக தலித் தலைவரை முன்னிறுத்த தமிழக பா.ஜ., திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த, மேலிட தலைவர்கள் வியூகம் வகுத்துள்ளனர். இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z41kcgof&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வி.சி., தலைவர் திருமாவளவன், 'தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் வரும் போகும்; ஆனால், ஒருபோதும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வராக முடியாது' என்ற ஆதங்கத்தை தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பா.ம.க., தலைவர் அன்புமணி, 'தமிழகத்தில் பட்டியலின சமூகம் பா.ம.க.,வுக்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவோம்' என்றார். தமிழகத்தில் தி.மு.க., உட்பட, பல மாநில, தேசிய கட்சிகள், சமூக நீதியை நிலைநாட்டுவதாக வெறும் வாய் வார்த்தையில் தான் பேசுகின்றன. ஆனால், பா.ஜ., மட்டுமே, மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், நாட்டின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் மற்றும் பழங்குடியின திரவுபதி முர்மு ஆகியோருக்கு கொடுத்தது. அதேபோல தமிழக பா.ஜ., தலைவராக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முருகன் நியமிக்கப்பட்டார். முருகன், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், பா.ஜ., மேலிடம் அவரை மத்திய அமைச்சர் ஆக்கியது. பின், லோக்சபா தேர்தலிலும் தோல்வி அடைந்தபோதும், அவரை மீண்டும் மத்திய அமைச்சராக்கியது. பட்டியலின சமூகத்தினருக்கு பா.ஜ., அளிக்கும் முக்கியத்துவத்தால், தமிழக காங்கிரஸ் தலைவராக, பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை, அக்கட்சி நியமித்தது. திருமாவளவன் கருத்துக்கு பின், பா.ஜ.,வில் பட்டியல் சமூகத்தினருக்கு அளிக்கும் முக்கியத்துவம் பற்றி, தமிழக மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். வரும் 2026 சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கையில், கட்சி மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. எனவே, தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை முன்னிறுத்த, மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இது, தி.மு.க., கூட்டணியில் அதிர்வுகளை உருவாக்கும்; அ.தி.மு.க.,வுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். பா.ஜ., கூட்டணிக்கு, மேலும் பல கட்சிகள் வரும். இது, பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கவும் வழிவகுக்கும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mr Krish Tamilnadu
ஆக 18, 2024 20:06

கருத்து கணிப்பு தேர்தல் வந்து விட்டால், இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் அதிகம், இவருக்கு ஆதரவு தருவார்கள் என்ற ரீதியில் வரும். தெளிவாக பிரிவை கூறி, ஓட்டு வாங்குவது வேண்டாத வேலை. நல்ல மக்கள் தலைவனை முன்னிறுத்தி, அவரின் செயல்திறன் மூலம் மக்கள் மனதில் மதிப்பை ஏற்படுத்தி வெற்றி பெற முயற்சிப்பது நல்லது. 1970 முன் பிறந்தவர்களின், தனது சமூகத்தின் பழக்கவழக்க பற்று உள்ளவர்களின் ஓட்டு வாங்கி மறைமுகமாக கிடைப்பது அரிது தான். ஆக்ரோஷமாக செயல்பாடுகளை அவர்களின் பொது கூட்டங்கள், விழாக்களில் நிறுத்தி அமைதியான முறையில் நடத்தி அனைவரையும் வழி நடத்தும் நல்ல தலைவர்கள் நாங்களும் தான் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.


Sridhar
ஆக 18, 2024 12:39

தலித் என்றால் எதோ ஒருமித்த இனத்தினர் என்பதுபோல் நினைத்துக்கொண்டு செயல்பட்டால் ஏமாற்றமே மிஞ்சும். அவர்களுக்குள்ளும் நிறைய ஜாதியினர் இருக்கிறார்கள், பணக்காரர்கள், அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள், வடசென்னை போன்ற இடங்களில் பலமானவர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இதனால்தான் சமீபத்தில் உச்ச கோர்ட்டு கூட இட ஒதுக்கீடு விசயத்தில், இந்த வித்தியாசங்களை கணக்கில் கொண்டு, மிகவும் நலிந்த பகுதியினருக்கு சரியான சலுகைகள் கிடைக்கும் விதத்தில் ஒதுக்கீடுகள் அமையவேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தது. இதைக்கூட, அந்த சமுதாயத்தினரே எதிர்த்தார்கள் என்பதை காணும்போது, தங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கைநழுவி போய்விடக்கூடாது என்பதில் காட்டும் அக்கறை, எல்லோருக்குமே பொதுவான ஒரு மனித இயல்பு என்பது தெளிவாகியது. இதில் மேல்மட்டத்தினரோ அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களோ யாரும் விதிவிலக்கில்லை. அப்படியிருக்கும்போது, 90 சதவிகித மக்கள் எவ்வாறு தங்களை தனி என்று வித்தியாசப்படுத்திக்கொள்ள நினைக்கும் 10 சதவிகிதத்தினர் ஆட்சி செய்ய அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்? மேலும் அரசியல் ரீதியாகவும், குறைந்த வாக்குவங்கியினரை தூக்கிப்பிடித்தால், அது சாதுரியமான முடிவாக இருக்காதே? இப்போது செய்வதுபோல், ஜனாதிபதி, கட்சி தலைவர், துணை மந்திரி போன்ற பொறுப்புகளுக்கு நியமித்து பாவனை செய்வதுதான் அரசியலுக்கு சரியாக இருக்கும்.


kulandai kannan
ஆக 18, 2024 10:39

முதல் மந்திரி பதவிக்கெல்லாம் இட ஒதுக்கீடு வேண்டாத வேலை.


ஆரூர் ரங்
ஆக 18, 2024 10:08

மற்ற சாதியினரில் 90 சதவீதம் ஒரு SC முதல்வராவதையே ஏற்க வாய்ப்பில்லை. ஏனெனில் இது ஈர வெங்காய மண்ணு.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 10:05

ஒரு தலித் சமூக நீதி பேசும் திமுகவின் தலைவராக ஆக முடியுமா ????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 10:02

திருமாவளவன் கருத்துக்கு பின், பா.ஜ.,வில் பட்டியல் சமூகத்தினருக்கு அளிக்கும் முக்கியத்துவம் பற்றி, தமிழக மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். அட ..... இது தமிழக மக்களுக்குத் தெரியுமா ????


Sampath Kumar
ஆக 18, 2024 09:32

தலித்தை நிப்பாட்டி ?


spr
ஆக 18, 2024 06:59

ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவை "அடிமைகள் இனம்" அகராதிகள், "தலித்" என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள், நசுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள்,என்றுதான் குறிப்பிடப்படுகிறது என்று திரும்பாத திரும்பச் சொல்லி அவர்கள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் அரசியல்வியாதிகள் அவர்களை வைத்து ஆதாயம் காண முயல்வது வேதனைக்குரியது . ஒரு நேர்மையாளரை, மக்களால் அறியப்பட்ட நல்லவரை குற்றப் பின்னணி இல்லாதவரை முதல்வராக அறிவிப்போம் என்று பாஜக கூடச் சொல்ல விரும்பவில்லை. படித்த பண்புள்ள தலைவர்களைக் கூட சிறுபான்மையினத்தவர், தலித் பட்டியலினத்தவர் என்றெல்லாம்தான் அடையாளம் காட்டப்படுகிறது அவரது இதர சிறப்புக்கள் அடிபட்டுப் போகின்றன என்னவனால் என்ன சிறுபான்மையினத்தவர், தலித் பட்டியலினத்தவர் என யாராயிருந்தால் என்ன சிறுபான்மையினத்தவர், தலித் பட்டியலினத்தவர் அல்லாத ஆதிக்கத் தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் அவரும் சொல்வார் செய்வார்


Jysenn
ஆக 18, 2024 05:50

In 1980 the Janatha Party projected Jagjivanram as PM face with the slogan of Make a Harijan as PM and was wiped out in the election without a trace. The very same will take place here too.


மோகனசுந்தரம்
ஆக 18, 2024 03:57

இங்கு 500,1000 க்கு ஆலாய் பறக்கும் கூமுட்டைகள் இருக்கும் வரை பிஜேபி கால் ஊன்ற முடியாது. இந்த மக்கள் இலவசத்திற்கு என்று ஆசைப்படவில்லையோ அன்று தான் பிஜேபிக்கு வாய்ப்பு உண்டாகும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை