உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மேகதாது திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் தர வேண்டும்: குமாரசாமி

மேகதாது திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் தர வேண்டும்: குமாரசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

“தமிழகத்துக்கு கர்நாடகா எப்போதும் பிரச்னையை ஏற்படுத்தியது இல்லை. கூடுதல் நீரை பயன்படுத்தும் நோக்கில் தீட்டப்பட்டுள்ள மேகதாது திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்,'' என மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி வலியுறுத்தினார்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மதச் சார்பற்ற ஜனதா தள தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி நேற்று பெங்களூரில் கூறியதாவது: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கே.ஆர்.எஸ்., அணைக்கு சென்று பார்வையிட்டுள்ளார். அவரால் தான் தற்போது அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன போலும். கங்கா ஆரத்தி போன்று காவிரி ஆரத்தி செய்வது நல்ல விஷயம் தான்.ஐந்தாறு நாட்களாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 5.6 டி.எம்.சி., தண்ணீர் சென்றுள்ளது. ஜூன், ஜூலையில் அளிக்க வேண்டிய நீரை விட அதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் நான் கூறுவது ஒன்று தான். தமிழக முதல்வர், கர்நாடகா மீதான தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு கர்நாடகா எப்போதும் பிரச்னையை ஏற்படுத்தியது இல்லை. வீணாகும் உபரிநீரை நல்ல முறையில் பயன்படுத்தும் நோக்கில் மேகதாது திட்டத்துக்கு தமிழகம் சம்மதிக்க வேண்டும்.கர்நாடக காங்., அரசு சில்லரைத்தனமான அரசியல் செய்கிறது. மத்திய அமைச்சர்களை பற்றி தரக்குறைவாக பேசுகிறது. மதிப்பிற்குரிய ராணுவத்தினரையும், துணை முதல்வர் இழிவாக பேசியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Gajageswari
ஜூலை 24, 2024 07:19

மேகதாதுவில் அணை கட்டுவது. தமிழகத்திற்கே அதிக பயன்தரும்


முருகன்
ஜூலை 23, 2024 21:45

ஒட்டு அரசியல் பேசும் இவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்


அரசு
ஜூலை 23, 2024 19:14

அவர் ஒரு மத்திய அமைச்சர். எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானவர். அவர் இவ்வாறு பேசுவது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகில்லை.


ஆரூர் ரங்
ஜூலை 23, 2024 15:40

தமிழகத்தில் புதிய அணைகளுக்கு இடமில்லை. அவங்க கட்டுவதையும் எதிர்த்தால் என்ன அர்த்தம்? சக பாரத மாநிலத்தை நம்ப மாட்டோம் என்பது தவறான செயல்.


Swaminathan L
ஜூலை 23, 2024 13:26

கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் காவிரி நீர் நுகர்வு மற்றும் தேவை பல மடங்கு அதிகரித்து விட்டது சமீப காலமாக. பெங்களூருவின் குடிநீர் மற்றும் தினசரி நீர் தேவையைப் பூர்த்தி செய்ய கர்நாடக அரசு வருடாவருடம் அதிக சிக்கல்களைச் சந்திக்கிறது. தமிழகத்தில் இன்னொரு பெரிய அணை கட்ட வாய்ப்பில்லாத போது, உபரி நீரை சேமிக்கும் புது வழி இல்லாதபோது, தமிழகம் சட்டரீதியாக ஒரு பிரச்சினையை மழை குறைவு வருடங்களில் சந்திக்கும். குடிநீர் தேவை என்பது விவசாயத்தை விட முக்கியத்துவமானது. எனவே, மழை குறைவு வருடங்களில் கர்நாடகம் பெங்களுருவின் குடிநீர்த் தேவையை கணக்கில் காட்டி தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும். இதற்கு ஒரே வழி, மேகேதாது அணை கட்டுவதற்கு இரு மாநில அரசுகளும் ஒரு அடிஷனல் ஒப்பந்தம் போட வேண்டும். அதன்படி, அணையின் நிர்வாகம் மற்றும் நீர் திறப்பு அதிகாரம், கண்ட்ரோல் தமிழகத்திடம் இருக்க வேண்டும். மேகேதாது அணை நீரில் 60% உரிமை தமிழகம் பெற வேண்டும். மழை குறைவு வருடங்களில் மேகேதாது அணை நீரில் 50% உரிமை தமிழகம் பெற வேண்டும். சட்டப்படி இந்த வழிமுறைகள் ஏற்படுத்தினால் மேகேதாது அணை கட்டுவது நீண்ட கால தீர்வாக அமையும்.


Srprd
ஜூலை 23, 2024 11:53

No way. TN will and should not agree to the construction of Mekedatu.


Ramesh Sargam
ஜூலை 23, 2024 09:56

ஆனால் நீங்கள் டிரிபுனல் பரிந்துரைக்கு மட்டும் செவிசாய்க்க மாட்டீர்கள். அதாவது டிரிபுனல் தண்ணீர் திறந்து விடு என்றால், விடமறுப்பீர்கள். இது என்னையா நியாயம்?


இறைவி
ஜூலை 23, 2024 06:54

ஐயா குமாரசாமி, உம்மை முன்னாள் முதல்வர் என்று பார்ப்பதை விட ஒரு மனிதனாகவாவது பார்க்க விரும்புகிறேன். ஆனால் அவை எதற்கும் நான் தகுதி இல்லை என்று மீண்டும் நிரூபிக்கிறீர்கள். காலம் காலமாக உங்கள் அணைகள் நிரம்பியபின் தான் தண்ணீரை திறந்து விடுகிறீர்கள். தண்ணீர் பங்கீடு என்பது இன்று எனக்கு ஒரு கோடி கன அடி நீர் கிடைத்தால் அதில் பாதியை தமிழகத்திற்கு கொடுப்பதுதான். அதுதான் சரியான நீர் பகிர்தல். என் அணைகள் முழுதும் நிரம்பியபின் நீங்கள் திறந்துவிடும் தண்ணீர் பங்கீடு தண்ணீர் அல்ல. அது உங்களால் சேமிக்க முடியாத நீர். தமிழகத்தை குறுவைக்கு நீங்கள் ஜூன் மாதம் தண்ணீர் திறந்து விட்டிருந்தால் உங்கள் வார்த்தையை நம்பலாம். இந்த மழைக்கு முன் காவிரி ஆணையம் இரண்டு மாதங்களாக தண்ணீர் திறக்க உத்தரவிட்ட பின்னும் எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று கோடி பிலாக்கணம் வைத்தீர்கள். ராமகிருஷண ஹெக்டே அங்கு முதல்வராக இருந்தபோது காவிரி அரசியல் பற்றி எரிந்த போதும் எம் ஜி ஆர் இங்கிருந்து ஃபோனில் வேண்டுகோள் விடுத்தால் சத்தமின்றி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த முதல்வர்களுக்கு அரசியல் செய்வதைவிட மக்கள் நலன் முக்கியமாக இருந்தது. இங்கு அரசியல் என்ற பெயரில் எமாற்றிக் கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் கூட்டம் கூச்சல் போட்டுவிட்டு நீதிமன்றத்தில் மனு என்ற பெயரில் கூட்டணி கட்சி வக்கீல்களுக்கு மக்கள் பணத்தை அள்ளிக் கொடுப்பார்கள். இங்கு இருக்கும் அடிமை கும்பல்கள் ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் ஓட்டை விற்று குடித்து விட்டு அடிமையாகவே இருக்கும். எம் ஆட்சியாளர்கள் நேர்மையாக இருந்தால் எங்கள் தேவையின் போது திறக்காத தண்ணீரை இப்போது வடிகாலாக திறக்காதீர்கள். அப்படி திறந்தால் ஒவ்வொரு கோடி கன அடிக்கும் நீங்கள் எங்கள் தேவையின் போது, நாங்கள் கேட்கும்போது, மூன்று கோடி கன அடி அபராதமாக கொடுக்க வேண்டும் என்று பிரச்சனையை ஊதி பெரிதாக ஆக்கியிருக்க வேண்டும். இன்று வரை உங்கள் கர்நாடக அரசு தமிழ்நாட்டை வடிகாலாக மட்டுமே உபயோகித்து வருகிறது. எங்கள் ஆட்சியாளர்கள் கூட்டணி தர்மம், பரவியிருக்கும் குடும்ப வியாபாரம் இவைகளை மட்டுமே கவனிப்பார்கள். வாழ்க இந்த இந்த தென் இந்திய அரசியல்வாதிகள். உங்களால் தமிழகம் பாலைவனமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.


Venugopal Gopalsamy
ஜூலை 23, 2024 15:59

unmai


நிக்கோல்தாம்சன்
ஜூலை 24, 2024 11:58

சமாதிக்கு தயிர்வடையும் தினகரனும், ஒரு பேனாவின் சிலைக்கு 80 கோடி ரூபாயும் செலவிடும் சொல்லுங்க , முதலில் அணை கட்டுவது வ்வளவு முக்கியம் என்று


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி