உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விளையாட்டு துறை வளர்ச்சி பற்றி உதயநிதி சிந்திக்கவில்லை: பா.ஜ.,

விளையாட்டு துறை வளர்ச்சி பற்றி உதயநிதி சிந்திக்கவில்லை: பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கை:கேலோ இந்தியா பற்றி, ஆதாரமற்ற சில சர்ச்சைகளை அமைச்சர் உதயநிதி எழுப்பியுள்ளார். முதலில் கேலோ இந்தியா திட்டத்திற்கான வரைமுறைகள் பற்றி, அவர் தெரிந்திருக்க வேண்டும். மாநிலங்களின் கோரிக்கைகளின் பொருட்டே, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும்.இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு நடத்தும், தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில், முதல் முறையாக தமிழகம் பங்கேற்க தவறி விட்டது. தமிழக விளையாட்டு கொள்கை கொண்டு வரப்படும் என, தி.மு.க., கொடுத்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை.அரசு பள்ளிகளில், 1:250 - 400 என்றிருந்த ஆசிரிய மாணவர் விகிதத்தை, 1:700 என மாற்றியமைத்து, உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்க உத்தரவிட்டுள்ளது ஏன் என்பதை உதயநிதி விளக்க வேண்டும். திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியை, மாநிலத்தின் முதல் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியாக மாற்ற வேண்டும்.விளையாட்டு துறையின் வளர்ச்சியை பற்றி சற்றும் கவலைப்படாமல், மக்கள் வரிப்பணத்தில் கார் ரேஸ் நடத்த, உதயநிதி முட்டி மோதுகிறார்.கடந்த 10 ஆண்டுகளில், விளையாட்டு துறையின் நலனுக்கான ஒதுக்கப்படும் நிதியில், 180 சதவீதம் அதிகரித்துள்ள பா.ஜ., அரசை கேள்வி கேட்க, அவருக்கு அருகதை இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Palanisamy T
ஜூலை 30, 2024 16:02

விளையாட்டுத் துறை வளர்ச்சியா சிந்திக்கவில்லையா? இதற்க்கெல்லாம் அவருக்கு நேரமேது? அவரின் அடுத்த குறிக்கோளெல்லாம் முதல்மைச்சர்ப் பதவி. இதுவே இவரின் கடைசி அமைச்சர்ப் பதவியாகயிருக்கவேண்டும். அமைச்சராக யிருக்க அரசுப் பதவிகள் போன்று ஒருப் பொறுப்பு கட்டாயம் வேண்டும். அதையும் அவர்தான் முடிவுச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் நாளை மக்கள் நல்லமுடிவு எடுக்க வேண்டும்.


அசோகன்
ஜூலை 29, 2024 18:32

போதை பொருளை விற்க மணல் கொள்ளை சாராயம் விற்கவே நேரமில்லை..... இதுல விளையாட்டு வேற..... அருவாளை எடுத்து ஒரே வெட்டில் மூன்று தலைகள் என்ற போட்டி வைத்தால் நம் ரவுடிகள் தங்கம் பெறுவார்கள்


pmsamy
ஜூலை 29, 2024 17:45

பாஜக அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர வேறு எதையும் சிந்திக்கவில்லை சோம்பேறிகள்


Ramesh Sargam
ஜூலை 29, 2024 13:28

உதயநிதி ஒரு உதவாநிதி. நடிப்பும் வராது, அரசியலும் தெரியாது. ஆனால் நீட் தேர்வை ஒழிப்பேன் என்று பொய் கூறி மக்களை நன்றாக ஏமாற்ற தெரிந்தவர்.


Yaro Oruvan
ஜூலை 29, 2024 12:49

அட என்னங்க நீங்க ,, தெரிஞ்சா சிந்திக்க மாட்டோமா? தெரியாதுங்க.. ஒரு எழவும் தெரியாதுங்க.. வோட்டுக்கு 2000 ஓவா கொடுக்குறோம்ல .. அப்புறம் என்ன கேள்வி ?


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 10:47

UPA ஆட்சியில் ஒலிம்பிக் பதக்கம் என்பதே கனவாக இருந்தது. இப்போ பாரதம் அள்ளுகிறது. டாஸ்மாக் அல்லது ஜாஃபர் சரக்கில் மூழ்கியுள்ள தமிழக இளைய சமுதாயம் எப்போது பதக்கம் பெறும்?


Barakat Ali
ஜூலை 29, 2024 11:24

போதையில் மூழ்கி முத்தெடுக்கும் வெள்ளாட்டுக்கு பதக்கம் வழங்க ஆரிய ஒலிம்பிக் கமிட்டி முன்வரணும் ...... அதற்கு நிவேதா பெத்துராஜ் தலைமை தாங்கணும் .....


Nathan
ஜூலை 29, 2024 07:34

அந்த அளவுக்கு மூளை இருந்தால் செய்ய மாட்டாரா விடுங்க அப்பு ஏதாவது கில்லி விளையாட புது விளையாட்டு மைதானம் வேணும்னா சொல்லுங்க நிதி ஒதுக்கீடு செய்து தருவார் ஆனால் கமிஷன் கரெக்டா தந்து விடனும் ஓகேவா


subramanian
ஜூலை 29, 2024 06:31

முப்பது லட்சம் கோடி ரூபாய் என்ன செய்வது, பட்டாயா வில், துபாய் , சார்ஜா, திரை துறை, எங்கெங்கு காணினும் ஊழல் பணம். இதற்கு நேரம் இல்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை