உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செங்கல்பட்டோடு ரயிலை நிறுத்தியது ஏன்?

செங்கல்பட்டோடு ரயிலை நிறுத்தியது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஜ்யசபாவில் நேற்று அ.தி.மு.க., - எம்.பி.,யான சி.வி.சண்முகம் பேசியதாவது: கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் நெரிசலை பொது இடங்களில் கட்டுப்படுத்தி, நோய் தாக்குதலை தடுக்க வேண்டும் என்பதற்காக, நாடு முழுதும் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

10,000 பேர் பாதிப்பு

கொரோனா தீவிரம் குறைந்து சகஜ நிலை திரும்பிய பின், நிறுத்தப்பட்ட ரயில் சேவையை தொடரச் செய்திருக்க வேண்டும். இதுவரை செய்யவில்லை. இதனால், தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் உள்ளிட்ட பல பகுதிகளில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தினக்கூலி தொழிலாளர்கள், அலுவலகம் செல்வோர், பெண்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் 10,000 பேர் வரை இப்படி பாதிக்கப்படுகின்றனர். தொழிற்சாலைகளை உள்ளடக்கிய நகரம் திண்டிவனம். இந்நகரத்தை ஒட்டி சிட்கோ மற்றும் சிப்காட் போன்ற தொழில் பேட்டைகளும் அமைந்துள்ளன. அருகில் இருக்கும் புதுச்சேரி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களைச் சார்ந்து ஏராளமான மக்கள், தினந்தோறும் பல்வேறு பணிகளுக்காக சென்று திரும்ப வேண்டியுள்ளது. அதற்கு ரயில் பயணம் தான் ஏற்றது. அதனால், ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளை உடனடியாக துவங்க வேண்டும். குறிப்பாக திண்டிவனத்தில் ரத்து செய்யப்பட்ட உழவன், மங்களூரு, சேலம், காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில்களை கட்டாயம் இயக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோக்கம்

சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை முழுவதும் மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை அகலப் ரயில் பாதையாக மாற்றப்பட்டு விட்டது. அப்படி செய்யப்பட்டதன் நோக்கமே, இந்த மார்க்கத்தில் அதிக ரயில்களை இயக்கி, கூடுதல் சேவை அளித்திட வேண்டும் என்பதுதான்.ஆனால், தற்போது எழும்பூரில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும், செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதைக் கடந்து இயக்கப்படுவதில்லை. அப்படியென்றால், மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை அகல பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் என்ன?எனவே, சென்னை எழும்பூரில் இருந்து திண்டிவனம் மற்றும் விழுப்புரம் வரை நிறைய மின்சார ரயில்கள் தினந்தோறும் இயக்கப்பட வேண்டும். அதிவேக விரைவு ரயில்களையும் இதே மார்க்கத்தில் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சண்முகம் பேசினார்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஆக 08, 2024 19:06

தமிழக எம் பி க்கள் பாராளுமன்றத்தில் பேசினால் உடனே மத்திய பாஜக அரசு செய்து விடும் என்று அப்பாவித்தனமாக நம்பும் பாஜகவினர் இவரது கேள்விகளுக்கு ரயில்வே துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்று சொல்வார்களா?


தமிழ்வேள்
ஆக 08, 2024 17:16

தாம்பரம் நிலைய மேம்பாட்டு பணிகள் புதிய இரண்டு பிளட்பார்ம்கள் ,அவற்றுக்கான தண்டவாள இணைப்புகளுக்காக தற்காலிகமாக 15 நாட்களுக்கு மட்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ..அவ்வளவுதான் ...இவர்களுக்கு எதுவும் புரியாது ..திருடுவதை தவிர ....ரயில்வே நினைத்தால் , நான்கு நாட்களில் அனைத்து வேலைகளையும் முடிக்கிறோம் என்று ஒட்டுமொத்த போக்குவரத்தையும் நிறுத்தினால் , இவர்களால் சகிக்க இயலுமா ? தமிழக சட்டமன்றம் போல நாடாளுமன்றத்திலும் தரவுகள் இன்றி பேசக்கூடாது .


Puli Kesi
ஆக 08, 2024 15:22

சென்னை to செங்கல்பட்டு 60 கிலோமீட்டர்


Saai Sundharamurthy AVK
ஆக 08, 2024 12:01

30 km க்கு மேல் இயக்கப்படும் ரயில்களில் கழிவறை வசதிகள் இருக்க வேண்டும். மின்சார ரயிலில் அந்த அம்சம் கிடையாது என்பதால் திண்டிவனம், விழுப்புரம் வரை கழிப்பறை வசதிகள் கொண்ட மெமோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சின்ன விஷயம் கூட தெரியாமல் இந்த எம்.பி இருப்பது வேடிக்கையாக உள்ளது. ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றால் கழிப்பறை வசதியுடன் கூடிய ரயில்களை அதிகமாக விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாமே தவிர சென்னையிலிருந்து மின்சார ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வெகுளித்தனமானது.


Puli Kesi
ஆக 08, 2024 15:35

சென்னை to செங்கல்பட்டு 60 கிலோமீட்டர்


R K Raman
ஆக 08, 2024 11:41

விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டை பாதை திட்டம் என்ன ஆச்சு என்று யாரும் கேட்கவில்லை. ஆம்னி பஸ் தொழில் காரணமாக இருக்கலாம்... முன்பே உளறுவாயன் அய்யர் எம் பியாக இருந்த போது அகலப் பாதை திட்டம் முடிந்த பிறகும் பல நாட்கள் ரயில் ஓட விடாமல் செய்ததாக ஒரு பேச்சு உண்டு


SS
ஆக 08, 2024 10:07

நியாயமான கோரிக்கை. 40க்கு 40 ஜெயித்தவர்கள் இதைபற்றியெல்லாம் கவலைபடுவதில்லை.


Premanathan Sambandam
ஆக 08, 2024 10:06

ரயில் வண்டி ரிப்பேர்


Karthikeyan
ஆக 08, 2024 03:38

குட், ஹி டாக் அபௌட் தி மிடில் கிளாஸ் people problem.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை