உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தி.மு.க.,வில் இளைஞரணிக்கு 40 சீட்; மாநாட்டுக்கு பின் உதயநிதி எதிர்பார்ப்பு

 தி.மு.க.,வில் இளைஞரணிக்கு 40 சீட்; மாநாட்டுக்கு பின் உதயநிதி எதிர்பார்ப்பு

வரும் சட்டசபை தேர்தலில், 40 தொகுதி களில் போட்டியிட, தி.மு.க., இளைஞரணி முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க.,வின் இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு, திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நடந்தது. வடக்கு மண்டல தி.மு.க., பொறுப்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலு ஏற்பாட்டில் நடந்த இந்த மாநாட்டுக்கு, துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்தார். முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை வழங்கினார். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவில் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் மாநாடு என்பதால், அம்மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதை உணர்த்தும் வகையில் உதயநிதி பேசுகையில், 'வரும் சட்டசபை தேர்தலில், இளைஞரணி நிர்வாகிகள் அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். 'இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலர் துரைமுருகன் ஆகியோர் நிறைவேற்றி தர வேண்டும்' என்றார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், எந்த பதிலும் சொல்லவில்லை என்றாலும்கூட, சட்டசபை தேர்தலில் வருவாய் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையில், 38 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., இளைஞரணி முடிவு செய்துள்ளது. அதனால், 40 தொகுதிகளை கட்சி தலைமையிடம் கேட்டு பெற முடிவெடுத்துள்ளார், இளைஞர் அணி செயலரான உதயநிதி. இது குறித்து, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், இளைஞரணி செயலர் பதவியை உதயநிதி ஏற்றார். தமிழகம் முழுதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இளைஞரணி சார்பில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில், பிரபாகர் ராஜா உட்பட சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஈரோடு எம்.பி., பிரகாஷுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது, தி.மு.க., இளைஞரணி நிர்வாகத்தின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 5 லட்சம் நிர்வாகிகள் தி.மு.க., இளைஞர் அணியில் உள்ளனர். அப்படியொரு கட்சி தி.மு.க., மட்டுமே. சட்டசபை தேர்தலில், விஜய் தலைமையிலான த.வெ.க., சார்பில் அதிகளவில் இளைஞர்களை களமிறக்க வாய்ப்பு உள்ளது. அதனால், இம்முறை தி.மு.க., சார்பில் கூடுதல் எண்ணிக்கையில், கட்சியின் இளைஞரணி நிர்வாகிகளை களமிறக்க வேண்டும் என்பதில் உதயநிதி உறுதியாக உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிருப்தியில் ஐ.டி., அணி

திருவண்ணாமலை மாவட்டத்தில், தி.மு.க., இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, மாநாடு போல சிறப்பாக நடத்தப்பட்ட பின், கட்சியில் இளைஞரணியினருக்கான முக்கியத்துவம் கூடியிருப்பதாக, இளைஞரணி செயலரான உதயநிதி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினரை கண்டுகொள்ளாமல், தி.மு.க., தலைமை புறக்கணித்து வருவதாக, அவ்வணியைச் சேர்ந்தோர் கொந்தளிப்பில் உள்ளனர். தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தகவல் தொழில்நுட்ப அணி செயலராக அமைச்சர் தியாகராஜன் இருந்தவரை, அவ்வப்போது மண்டல அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன; பங்கேற்போருக்கு உணவு, செலவிற்கு பணம், மொபைல் போன் போன்றவை வழங்கப்பட்டன. தற்போது தகவல் தொழில்நுட்ப அணியினரை, கட்சி தலைமை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், தகவல் தொழில்நுட்ப அணியினர் தான், சமூக வலைதளங்களில் கட்சிக்கு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்; எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி தருகின்றனர்; அரசின் திட்டங்களை, மக்களிடம் கொண்டு போய் சேர்க்கின்றனர். தற்போது நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் கூட, தகவல் தொழில்நுட்ப அணியினரின் பங்கு அதிகம். ஆனால், கட்சியில் இளைஞர் அணியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கட்சி தலைமையின் செயல், ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலையில் உள்ளது. இது, ஒரு தரப்பினரின் உற்சாகத்தை குலைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ram
டிச 16, 2025 15:19

எல்லாம் பதவிக்கு வந்தால் அவ்வளவுதான்


SUBRAMANIAN P
டிச 16, 2025 13:29

நாசமாப்போக


என்னத்த சொல்ல
டிச 16, 2025 12:46

சும்மா கொழுத்தி போடுங்க.. காசா பணமா...


krishna
டிச 16, 2025 17:22

ENNATHA SOLLA UNNAI PONDRA 200 ROOVAA COOLIKKU AZHUKKALAYAM ADAPPU EDUKKUM KOTHADIMAI KUMBALUKKU POZHAPPE KOLUTHI PODUVADHUDHAAN.


N S
டிச 16, 2025 11:37

60 வயதிலும், இளைஞரணி தலைமை ஏற்று பாசறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து தவப்புதல்வனிடம் கொடுத்ததற்கு, இப்படி ஒரு எதிர்பார்ப்புக்கா?


angbu ganesh
டிச 16, 2025 09:31

குடும்ப அரசியலை அழிக்கவேணும் இதுங்க குடும்பம் மட்டும் செழிப்பை காட்டுது அதுங்களுக்கு ஓட்ட போட்ட நாம பஸ்ல நடந்து போறோம் இந்த 7 1/2 ங்க எப்பதான் ஒழியுமோ கடவுளை திருப்பரங்குன்ற முருகா உன் வேல வேலைய காட்டு


Iyer
டிச 16, 2025 08:29

தமிழ் நாட்டில் SIR த்ரிப்திகரமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு செமையாக செய்யப்பட்டு வருகிறது. 85 லக்ஷம் வரை - கள்ளவோட்டுக்கள் களையப் பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இன்னும் நிறைய கள்ளவோட்டுக்கள் கண்டுபிடிக்கவிடாமல் செய்துவிட்டது DMK இதே நிலை நீடித்தாலும் போதும். DMK 50 க்கும் கீழே தள்ளப்படும். தமிழ்நாட்டின் ""லாலு-தேஜஸ்வி"" ஜோடி தயார்.


V RAMASWAMY
டிச 16, 2025 07:44

ஒரு சிசு அணிகூட ஆரம்பித்து ஐந்து சீட்டுக்கள் கேட்கலாம், அவர்கள் உரிமைகளான சுத்தமான ஆடைகள், பால், தொட்டில், டையபெர்கள் இவையெல்லாம் இலவசமாக பெறுவதற்கு.


ராமகிருஷ்ணன்
டிச 16, 2025 07:22

கனியக்கா வுக்கு எத்தனை சீட், மாப்பிள்ளை சாருக்கு எத்தனை சீட், இன்பநிதிக்கு எத்தனை சீட், மாறன் குடும்பத்தினருக்கு எத்தனை சீட், மிச்சம் மீதி அல்லக்கைகளுக்கு தரப்படும்


V RAMASWAMY
டிச 17, 2025 08:23

மிச்சம் இருந்தால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை