உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பூண்டு கிலோ 400 ரூபாய்; ரசம் மணப்பதில்லை

பூண்டு கிலோ 400 ரூபாய்; ரசம் மணப்பதில்லை

திருப்பூர்: பூண்டு விலை வழக்கத்துக்கு மாறாக கிடுகிடுவென உயர்ந்ததால், வீட்டில் சாம்பார், ரசம் கமகமக்காத சூழல் உள்ளது.'பூண்டு இல்லையேல் ரசம் மணக்காது' என்பர்; பூண்டு இருந்தால் சாம்பார், குழம்பு, ரசம் கமகமக்கும். மருத்துவக் குணம் வாய்ந்ததால், பூண்டு அதிகளவில் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.இந்தாண்டு துவக்கத்தில், 200 முதல், 250 ரூபாய் இருந்த ஒரு கிலோ பூண்டின் விலை. தற்போது, 400 ரூபாயாகியுள்ளது. இதனால், தள்ளுவண்டி கடைகளில் பூண்டே இல்லாத நிலை உருவாகியுள்ளது.திருப்பூருக்கு ஊட்டி, மேட்டுப்பாளையம், தேனி மாவட்டம், வடுகபட்டி ஆகிய இடங்களில் இருந்து பூண்டு விற்பனைக்கு வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசத்தில் இருந்து முதல் தர பூண்டு வாங்கி சிலர் விற்கின்றனர்.கடந்தாண்டு ஹிமாச்சல் பிரதேசத்தில் திடீர் வெள்ள பெருக்கு, வடமாநிலங்களில் தொடர் மழை காரணமாக பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டது. தமிழகத்திலும் பூண்டு விளைச்சல் குறைந்தது. திடீரென மூன்றில் ஒரு பங்கு பூண்டு வரத்து குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது.

வாங்க தயக்கம்

பூண்டு வரத்து குறைந்தாலும், முதல் தர பூண்டு தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதனால், இரண்டாம், மூன்றாம் தர பூண்டு, அதைவிடத் தரம் குறைந்த பூண்டு, முதல் தரம் விலைக்கு விற்கப்படுகிறது. பார்ப்பதற்கு பளிச்சென இல்லாததால், விலை உயர்வாக இருப்பதால், இல்லத்தரசிகள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

g.s,rajan
பிப் 17, 2024 22:45

நமது நாட்டில் காய்கறி மளிகை சாமான்கள் விலை எப்படியும் ஏறிக்கொண்டேதான் போகும்,இந்தப் பொருளும் சீசனில் அளவுக்கு அதிகமான விளைச்சல் இருந்தால் விலை சரியும் ,விளைச்சல் குறைந்தால் விலை நிச்சயம் பல மடங்கு எகிறும்,என்ன செய்வது இருக்கின்ற வருமானத்தை வைத்துக்கொண்டு மக்கள் தான் எல்லா செலவுகளையும் சமாளிக்க வேண்டும்.....


Loganathan Kuttuva
பிப் 17, 2024 17:27

Small onions are selling at a cheaper rate. Garlick is not very important.


rama adhavan
பிப் 17, 2024 14:51

பூண்டு அரிசி போல் அல்ல. ஓரு குடும்பத்திற்கு மாதம் அரை கிலோ 1 கிலோ தான் உபயோகம். எனவே விலை ஏற்ற பாதிப்பு மாதம் 50, 100 ருபாய் தான். சாராயத்திற்கு ஒருவர் மாதம் ரூ.3000 செலவு செய்கிறார்.மொபைல் recharge க்கு மாதம் ஓரு குடும்பத்தில் ஓரு மாதத்திற்கு ரூ. 220 ஆகிறது. போன் 15000 ஆகிறது. எனவே பூண்டுக்கான கூச்சல் நியாயம் அற்றது.


raja
பிப் 17, 2024 14:14

அப்புறம் என்ன தமிழா... ஸ்டாலின் தான் வந்தாரு விடியல் தான் தந்தாருண்ணு பாடி குதுகூலித்து இருக்க வேண்டியது தானே ...


Apposthalan samlin
பிப் 17, 2024 11:36

பிஜேபி ஆட்சியில் அத்தியாவசியமான பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது ஏன்? பதுக்கல் காரணம ?செயற்கை விலை ஏற்றமா?கார்பொரேட் சூளிச்சியா?


Ramesh Sargam
பிப் 17, 2024 07:55

நேற்று சாம்பார் வெங்காயம் விலை சரிவு. மக்கள் சந்தோஷம். இன்று பூண்டு விலை உயர்வு. So, மக்கள் சந்தோஷம் சரிவு.


மேலும் செய்திகள்