உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அஸ்த்ரா ஏவுகணைகளை தயாரிக்க விமானப்படை ஒப்புதல் வழங்கியது

அஸ்த்ரா ஏவுகணைகளை தயாரிக்க விமானப்படை ஒப்புதல் வழங்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போர் விமானங்களில் இருந்து வான் ஊர்திகளை தாக்கும், '200 அஸ்த்ரா மார்க் - 1' ஏவுகணைகளை தயாரிக்க, 'பாரத் டைனமிக்ஸ்' நிறுவனத்துக்கு, இந்திய விமானப்படை ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்த ஏவுகணையை, டி.ஆர்.டி.ஒ., எனப்படும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்துள்ளது.கடந்த வாரம் இந்திய விமானப்படையின் துணைத் தளபதி ஹைதராபாதில் உள்ள பாரத் டைனமிக்ஸ் நிறுவன தயாரிப்பு ஆலைக்கு சென்றபோது, தயாரிப்புக்கான ஒப்புதலை வழங்கியதாக, இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2023ம் நிதியாண்டில், 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான அஸ்த்ரா திட்டத்திற்கு, பாதுகாப்பு கொள்முதல் ஆணையம் ஒப்புதல் வழங்கியது. பல கட்ட ஏவுகணை சோதனைகளுக்கு பின், தற்போது இதனை தயாரிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.இந்த ஏவுகணைகள், விமானப்படையின் 'சுகோய் - 30' மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் 'தேஜஸ்' ஆகிய இரு போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அஸ்த்ரா மார்க் 1 ஏவுகணை, 110 கி.மீ., துாரம் வரை பயணித்து, இலக்கை துள்ளியமாக தாக்கும் வல்லமை உடையது. இதேபோல், 150 கி.மீ., வரை செல்லும் அஸ்த்ரா மார்க் 2 மற்றும் 300 கி.மீ., வரை செல்லும் மார்க் 3 ஏவுகணைகள் சோதனையில் உள்ளன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஆக 06, 2024 19:53

வாழ்த்துக்கள்


Swaminathan L
ஆக 06, 2024 10:57

நல்ல விஷயம். உள்நாட்டில் வடிவமைத்து தயாராகும் இம் மாதிரி ஏவுகணைகளை இந்திய அரசு வாங்குவது பாராட்ட வேண்டிய விஷயம். அக்னி, ஆகாஷ், நாகா என்று பல ஏவுகணைகளை பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஏற்கனவே தயாரித்து வழங்குகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை