உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தமிழகத்தில் பட்டியலின கட்சிகளை ஒருங்கிணைக்க அமித் ஷா முடிவு

 தமிழகத்தில் பட்டியலின கட்சிகளை ஒருங்கிணைக்க அமித் ஷா முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஹாரில் பா.ஜ., கூட்டணியின் வெற்றிக்கு, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சி முக்கிய காரணம் என்பதால், தமிழகத்திலும் பட்டியலின கட்சிகளை ஒருங்கிணைத்து, அவர்களின் ஓட்டுகளைப் பெற, அமித் ஷா முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதற்கு, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி முக்கிய காரணம் என, எதிர்க்கட்சிகளும் கூறத் துவங்கியுள்ளன. இக்கட்சி, பீஹாரில் 19 தொகுதிகளில் வென்று, 4.97 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. கடந்த 2020 சட்டசபை தேர்தலில், சிராக் பாஸ்வானை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள நிதிஷ்குமார் மறுத்து விட்டார். இதனால் 135 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட லோக் ஜன சக்தி, 5.66 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றது. இதனால் 115 தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷ்குமாரின், ஐக்கிய ஜனதா தளம் 43ல் மட்டுமே வெல்ல முடிந்தது. இதை உணர்ந்துதான், இந்த தேர்தலில் சிராக் பாஸ்வானை, கூட்டணியில் சேர்த்து, வெற்றிக்கனியை பா.ஜ.,வும், நிதிஷ்குமாரும் பறித்துள்ளனர். பீஹாரைப் போலவே, தமிழகத்திலும் 20 சதவீதம் பட்டியலின மக்கள் உள்ளனர். திருமாவளவனின் வி.சி.க., கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. ஆனாலும், லோக் ஜன சக்தி போன்ற வலுவான பட்டியல் இன மக்களை அடையாளப்படுத்தும் கட்சி, தமிழகத்தில் இல்லை. பீஹார் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 'பீஹார் வெற்றியால் தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு ​வங்கம், அசாம் மாநிலங்களில், பா.ஜ., தொண்டர்களுக்கு புது சக்தி கிடைத்துள்ளது. பா.ஜ., தொண்டர்களால் முடியாதது எதுவுமே இல்லை' என்றார். பீஹாரைப் போல் தமிழகத்திலும், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற, பட்டியலினத்தவர் ஓட்டுகளைப் பெற வேண்டும். அதற்கு ஏற்கனவே பா.ஜ., கூட்டணியில் இருந்த கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் தவிர, மற்ற பட்டியலின கட்சிகள், அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டணிக்குள் கொண்டு வர அமித் ஷா முடிவு செய்துள்ளார். அதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: பீஹார் போன்ற மாநிலங்களில், பட்டியலின கட்சிகள், முக்கிய அரசியல் சக்தியாக வர முடிகிறது. ஆனால், தமிழகத்தில் பட்டியலின கட்சிகள், முக்கிய அரசியல் சக்தியாக மாறுவதை, தி.மு.க., உள்ளிட்ட பெரிய கட்சிகள் விரும்பவில்லை. திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கூட சில தொகுதிகளை மட்டும் கொடுத்து, தி.மு.க., ஏமாற்றி வருகிறது. இதையெல்லாம் எடுத்து சொல்லி, தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழக பா.ஜ., தலைவர்களை, அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர். --நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ