உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அடுத்த குறி ஆந்திராவுக்கு!

அடுத்த குறி ஆந்திராவுக்கு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வட மாநிலங்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், தென்னகத்தில் பலமாக உள்ளது காங்கிரஸ். பா.ஜ.,விடமிருந்து, கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியது; அடுத்து தெலுங்கானாவில் வெற்றி பெற்று, சந்திரசேகர ராவை ஒரு வழியாக்கி விட்டது.காங்கிரசின் அடுத்த இலக்கு ஆந்திரா. இங்கு, ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். இவருக்கும், இவரது சகோதரி ஷர்மிளாவிற்கும் பிரச்னை. இதை பயன்படுத்தி ஷர்மிளாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டது காங்கிரஸ். அண்ணன் -- தங்கை சண்டையில் காங்., குளிர் காய விரும்புகிறது.ஷர்மிளாவிற்கு ராஜ்யசபா எம்.பி., சீட் தருவதாக காங்., உறுதி அளித்துள்ளது. அத்துடன், கட்சியின் முக்கிய பதவியும் அவருக்கு வழங்கப்பட உள்ளதாம். மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போது, ஜெகன் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளை தொடர்ந்தது; அவை இப்போதும் நிலுவையில் உள்ளன.இதை முன்னிலைபடுத்துவதோடு, ஜெகனுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்ய இருக்கிறார், ஷர்மிளா. 'எப்படியாவது கர்நாடகா, தெலுங்கானாவை அடுத்து ஆந்திராவையும் கைப்பற்ற காங்., தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. 2014ல் ஆந்திராவை இரண்டாக பிரித்தது காங்கிரஸ்; அதன் பின் ஆந்திரா, தெலுங்கானா இரண்டிலுமே காங்., தோல்வியை சந்தித்தது. இப்போது தெலுங்கானாவை கைவசப்படுத்தியுள்ளது; அடுத்தது ஆந்திரா தான் என்கின்றனர்' காங்., தலைவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Vijay D Ratnam
ஜன 07, 2024 23:35

ஆந்திராவை பொறுத்தவரை ஜெகன் மோகன் ரெட்டியா சந்திரபாபு நாயுடுவா என்பதுதான் போட்டியே. பாஜகவோ காங்கிரஸோ அங்கே பொருட்டே இல்லை.


NicoleThomson
ஜன 07, 2024 22:31

பாப்போம்


Thanikachalam
ஜன 07, 2024 17:59

2024 ஆந்திரா தேர்தலில் கடும் போட்டி இருக்கும்.


ராஜா
ஜன 07, 2024 15:35

ஜெகன் முடியை கூட அசைக்க முடியாது.


Indian
ஜன 07, 2024 11:38

கண்டிப்பாக அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகான இலக்கு ஆந்திரா தான் அங்கும் காங்கிரஸ் ஆட்சி அமையப்போவது உறுதி இதை யாராலும் தடுக்க முடியாது


Ramesh Sargam
ஜன 07, 2024 10:33

யார் அரசியலுக்கு வந்தாலும் 'நாட்டுக்கு சேவை செய்ய அரசியலில் கால் பதித்தேன்' என்று கூறுகிறார்கள். நான் கேட்கிறேன், நாட்டுக்கு சேவை செய்ய ராணுவத்தில் சேர்ந்து, நமது நாட்டின் எல்லைப்பகுதியில் சென்று பணிபுரியவேண்டியதுதானே. அது என்ன அரசியலில் கால் பதிப்பது?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2024 09:47

கட்டுரை எழுதியவருக்கு தெலுங்கானாவில் காங்கிரஸ் பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் எத்தனை என்பது தெரியுமா ????


குமார் சென்னை
ஜன 07, 2024 08:19

சந்திரபாபு நாயுடு உள்ளவரை ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர இயலாது. கர்நாடகாவிலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும். காங்கிரஸ் தோல்வி அடையும்.


Duruvesan
ஜன 07, 2024 07:13

எல்லாமே free னு சொல்லு மொத்தம் உங்களுது ஆயிடும்


Sivakumar
ஜன 07, 2024 07:12

அப்போ திருச்சி சிவாவின் மகன் மற்றும் AK அந்தோணியின் மகன்கள் பிஜேபியில் சேர்த்தது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை