உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  விளிம்பு நிலை மக்களை சந்தித்து குறைகளை கேளுங்கள்: பா.ஜ.,வினருக்கு மேலிடம் உத்தரவு

 விளிம்பு நிலை மக்களை சந்தித்து குறைகளை கேளுங்கள்: பா.ஜ.,வினருக்கு மேலிடம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'விளிம்பு நிலையில் உள்ள மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய வேண்டும்' என தமிழக பா.ஜ., வினருக்கு, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, பா.ஜ., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: துாய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், தி.மு.க., அரசு புறக்கணித்து வருகிறது. மூன்று வேளை உணவு என, கண் துடைப்பிற்கு திட்டங்களை துவக்கி உள்ளது. துாய்மைப் பணியாளர்கள், மீனவர்கள் உட்பட சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள, மக்களின் பிரச்னைகளுக்கு, தி.மு.க., அரசில் தீர்வு கிடைக்கவில்லை. அதேசமயம், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட, வங்கிகளில் கடனுதவி உள்ளிட்ட திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இதனால், பா.ஜ.,வினர் ஒவ்வொருவரும், தங்கள் பகுதியில் உள்ள, துாய்மைப் பணியாளர்கள், மீனவர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட, விளிம்பு நிலை மக்களை சந்திக்க வேண்டும். அவர்களின் குறைகளை கேட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய வேண்டும் என, கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பான விபரங்களை, தலைமைக்கு மாதந்தோறும் அறிக்கையாக தெரிவிக்குமாறும் கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை