உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராஜ்யசபா சீட்: பிரேமலதா நிபந்தனையை புறக்கணித்த பா.ஜ., - அ.தி.மு.க.,

ராஜ்யசபா சீட்: பிரேமலதா நிபந்தனையை புறக்கணித்த பா.ஜ., - அ.தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' வழங்க முடியாது என, அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் கைவிரித்து விட்டன.லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பில் தனித்தனியாக பேச்சு நடந்து வருகிறது. தே.மு.தி.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை, அதன் பொதுச்செயலர் பிரேமலதா சமீபத்தில் நடத்தினார். பின், '14 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா 'சீட்' தரும் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும்' என, அதிரடியாக அறிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bfsx7tf1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிபந்தனையால், அ.தி.மு.க., - பா.ஜ., தலைமைகள் அதிருப்தி அடைந்தன; கூட்டணி பேச்சை தொடராமல் நிறுத்தி கொண்டன. இதையடுத்து. மீண்டும் கட்சி அலுவலகத்தில் பேட்டியளித்த பிரேமலதா, 'தே.மு.தி.க.,விற்கு 14 லோக்சபா தொகுதிகள் வேண்டும் என யாரிடமும் கேட்கவில்லை.மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் சிலர் விருப்பப்பட்டதை வெளியே கூறினேன். அதை சரியான புரிதல் இல்லாமல், பத்திரிகையாளர்கள், தே.மு.தி.க., 14 சீட் கேட்டு நிர்பந்திப்பது போல செய்தி வெளியிட்டு விட்டனர். இருந்த போதும், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ராஜ்யசபா 'சீட்' என வலியுறுத்தி கேட்பது, எங்களது உரிமை' என்றார்.இதையடுத்து, அதிகாரப்பூர்வமாக இல்லாமல் தே.மு.தி.க., முன்னணி தலைவர்கள் சிலருடன், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பில் கூட்டணி தொடர்பாக பேசி வந்த ஒரு சிலரும், அக்கட்சியினருடன் கூட்டணி சம்பந்தாக பேசுவதை நிறுத்தி விட்டனர்.இதற்கிடையில், கூட்டணி பேச்சு நடத்துவதற்காக, தே.மு.தி.க., தரப்பில் அமைக்கப்படவிருந்த பேச்சுவார்த்தைக் குழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தலைமைகளும், அதிகாரப்பூர்வமாக தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேச்சை தொடர முன்வரவில்லை. தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா 'சீட்' வழங்கப்படாது என, இரு கட்சிகளும் திட்டவட்டமாக கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு ஒரு லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட இருப்பதாக தகவல் பரவி உள்ளது. தே.மு.தி.க., தலைமைக்கு நெருக்கமாக இருப்போர் சிலர், இப்படியொரு தகவலை கசிய விட்டிருப்பதாக தி.மு.க., தரப்பில் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

M Ramachandran
பிப் 22, 2024 21:00

பித்தம் தலைக்கேரி பேயாட்டம் ஆடுது


M Ramachandran
பிப் 22, 2024 20:55

தனியாக தேர்தலில் நின்று பார்க்கட்டும் வாயால வடை சுட தேவை இல்லை.


காஷ்மீர் கவுல் பிராமணன்.
பிப் 16, 2024 20:15

இந்த பேராசையே விஜயகாந்த் மறைவுக்கும் தேமுதிக அழிவுக்கும் காரணம்.


Bala
பிப் 16, 2024 18:16

ட்ம்க் கூடாரம் ஹெஸ்பூல். no entry board போடாச்சு. தேதிமுக அறிவாலயம் கதவை தட்டுவது waste


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
பிப் 16, 2024 17:37

இனி தேமுதிக என்ற கட்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை.


Sivaraman
பிப் 16, 2024 17:17

திரு வாசன் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு போட்டியிட விட்டுவிட்டு ஒதுங்கியது அரசியல் சாதுர்யம் /. தேமுதிக போட்டியிட்டு ஒருமுறை அவர்கள் வென்ற தொகுதியில் இடைத்தேர்தலில் அதாவது ஈரோட்டில் வெறும் ஆயிரத்து நானூறு ஓட்டுக்கள் . எடப்பாடி க்கு ஈரோடு தோல்வி மிகப்பெரிய சறுக்கல் . தேமுதிக இன்னும் பாடம் கற்கவில்லை . தேசியத் தேர்தல் . ஒரு தொகுதி வெற்றி மிகப்பெரியது தேமுதிக நன்றாக ஆராய்ந்து செயல்பட வேண்டும்


kulandai kannan
பிப் 16, 2024 16:06

விஜயகாந்த் இருக்கும்போதே கட்சி செல்லாக்காசுதான்.


செந்தமிழ் கார்த்திக்
பிப் 16, 2024 14:14

விஜயகாந்த் முகத்தை வைத்து மட்டுமே கட்சியை வளர்த்தார்கள். கொள்கை கொழுக்கட்டை என்று எதுவும் கிடையாது. விஜயகாந்த் இருக்கும் வரை தான் கட்சிக்கு மதிப்பு. இப்போது இருப்பவர்கள் மீதெல்லாம் யாருக்கும் எந்த செல்வாக்கும் இல்லை. திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டாம். செல்ல காசு தேமுதிக.


Sck
பிப் 16, 2024 13:11

பிரேமாக்கா கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ப்ளிஸ். இப்பதான் உங்க கணவர் காலமானார். so, அரசியல விட்டு கொஞ்ச நாளைக்கு விலகி இருந்தால் கொஞ்சம் தெளிவு கிடைக்கும்.


குமாரவேல் பெருந்துறை
பிப் 16, 2024 12:54

அலையறாள் ~ யாரு பெட்டி தருவாங்கன்னு ~ பெட்டிக்காக காத்து கிடக்கிறாள் பிரேமா ~


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை