உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாலாறும், காவிரியாறும் வறளுதே; குட்டையாக மாறிய மேட்டூர் அணை

பாலாறும், காவிரியாறும் வறளுதே; குட்டையாக மாறிய மேட்டூர் அணை

தமிழகத்திற்கு பெரும் வாழ்வாதாரமாக திகழும் மேட்டூர் அணை நீர்மட்டம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதிக்கு பாதியாக குறைந்து வறண்டு காணப்படுகிறது.வரலாறு காணாத வெயில், வறட்சி என நாளும் செய்தி வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை நிலவரம் குறித்து அறிந்து வர ஒரு 'விசிட்' அடித்தோம்.காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம்; சேலத்தில் இருந்து, 60 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது மேட்டூர் அணை. 1925ம் ஆண்டு துவங்கி, 1934க்குள் கர்னல் எல்லீஸ் அவர்களின் வடிவமைப்பில், 4.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அணை இது. உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமும் இதுவே.

தொழிற்சாலைகள்

மேட்டூர் அணையின் வாயிலாக, தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளீட்ட 12 மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல மாவட்ட பொதுமக்களின் குடிநீருக்கும், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கும், இந்த அணையின் நீர் தான் பயன்படுகிறது.மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் போது, சுரங்க மின் நிலையம் வாயிலாக, 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் ஏழு கதவணை மின் நிலையம் வாயிலாக, 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளிலிருந்து தண்ணீர் வருகிறது; மேலும், பாலாறு வாயிலாகவும், மழைப்பொழிவு காரணமாகவும் நீர் ஆதாரம் பெருகுகிறது. மேட்டூர் அணை நீர் மட்டம் 120 அடி. கோடை காலத்தில் தண்ணீர் இருப்பு குறையும் போதெல்லாம், மக்கள் மனம் வாடும்.

பாதிக்கு பாதி

கடந்த 2023 ஏப்ரலில், அணையின் நீர்மட்டம் 101.49 அடியாக இருந்தது. நீர் இருப்பு 66.78 டி.எம்.சி.,யாக காணப்பட்டது. இந்த வருடம், அணை நீர்மட்டம் பாதிக்கு பாதியாகி, இப்போது 53.81 அடியாக உள்ளது. நீர் இருப்போ, 20.29 டிஎம்சி.,யாக இருக்கிறது. அணைக்கு ஒரு ஒடை போல, 82 கன அடி தண்ணீர் தான் வருகிறது. ஆனால், குடிநீர் தேவைக்காக 1200 கனஅடி திறக்கப்படுகிறது.அணையின் பிரதான பகுதி வறண்டு போய் காணப்படுகிறது; அணையில் இருந்து, 39 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள பாலாறு, ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.பாலாறும், காவிரி ஆறும் சங்கமிக்கும் இடத்தில் கால்நடைகள் தண்ணீர் தேடி பரிதாபமாக அலைகின்றன. அந்தப் பகுதியில் அகண்டு வரும் காவிரி ஒரு ஒடையை போல சுருங்கி காணப்படுகிறது. தண்ணீர் ஓடிய பகுதி பாளம், பாளமாக வெடித்துப் போயுள்ளது. அணையை சுற்றியுள்ள காடுகள் பசுமையை இழந்துள்ளன.

பரிசலுக்கு பதில் பஸ்

அணையின் பின்பக்கம் உள்ள பண்ணவாடி என்பது, பரிசல் பயணத்திற்கு பெயர் பெற்ற பகுதி. அணையில், 120 அடி தண்ணீர் தேங்கியிருக்கும் போது, இந்தப்பகுதி அப்படியொரு செழிப்புடன் காணப்படும். இப்போது நீர் தேங்கியிருக்கும் பகுதி குறைந்து அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளது; நீருக்குள் மறைந்திருந்த நந்தி சிலையும் முழுமையாக வெளியே தெரிகிறது.அணையின் ஒரு பகுதியில், 500 மீட்டர் துாரத்தை பரிசல் வாயிலாக கடந்தால், தர்மபுரி மாவட்டத்தின் நாகமரை, ஏரியூர், நெருப்பூர், ஒகேனக்கல், பென்னாகரம் போன்ற பகுதிகளுக்கு செல்லலாம். அதேபோல, அந்தந்த ஊர்களிலிருந்து சேலம் மாவட்டத்தின் கொளத்துார், மேட்டூர் வருவதற்கு இந்தப் பரிசல் போக்குவரத்து பயன்படுகிறது.இந்தப் பரிசல் பயணியரின் வசதிக்காக, அணையின் நீர்பிடிப்பு பகுதிக்குள்ளேயே அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அவ்வப்போது வந்து போகின்றன.அந்தப்பகுதியை சேர்ந்தவர்களிடம் பேசிய போது, “எப்போதும் இல்லாத அளவு வெயில் உக்கிரமாக உள்ளது. இதன் தாக்கத்தால், பெரியளவில் நீர் பிடிப்பு பகுதிகள் வறண்டு வருகின்றன. இது போன்ற சந்தர்ப்பங்களில் கோடை மழை தான் எப்போதும் கைகொடுக்கும்; இப்போதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venkatakrishna
மே 03, 2024 07:04

நல்லார் ஒருவர்கூட இலையேல், அதை பொருட்டு மழையும் பொய்த்ததே, அணையும் வரண்டதே


அப்புசாமி
மே 01, 2024 18:58

அங்கேயெல்லாம் ஜல்ஜீவன் குழாய் பதிச்சு மேட்டூர் அணையை ரொப்புங்கள்.


N Sasikumar Yadhav
மே 01, 2024 17:13

ஆறு ஏரிகளை தூர்வாருகிறேன் என அரசு கஜானாவை தூர் வாரிவிடுவார்கள்


jss
மே 01, 2024 12:59

வரட்சி மக்களை ஒழித்நு விடும் அதனால் திராவிட கட்சிகள் ஒழியும் என்றால் அதை god sent gift ஆக ஏற்றுக் கொள்ளத தயார்


jss
மே 01, 2024 12:19

இந்த முறை தமிழ் நாட்டில் மழை டாட்டா காட்டிஙிடும் என்ற நம்பிக்கை வலத்து இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சி செய்யும்போது மழை கொட்டி தீர்த்து. திமுக வந்தவுடனயே சூரியன் கொளுத்தி மக்களை எரிக்கிறது.


Rajasekar Jayaraman
மே 01, 2024 10:28

மக்களுக்கு நன்மை பயக்கும் அரசாக இருந்தால் இந்த நேரத்தில் முடிந்தவரை தூர்வார முடியும் இதற்கு ஒதுக்கீடு என்ற பெயரில் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வேலையை செய்ய முடியும் அது மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும் திராவிட அரசால் அது முடியாது செய்யவும் மாட்டார்கள் மக்களே சிந்தியுங்கள்.


அப்புசாமி
மே 01, 2024 09:15

சீக்கிரமா அங்கே ஒரு லட்சம் ஜல்.ஜீவன் குழாய்களை பதிச்சு தண்ணீர் வரச்செய்வோம். நான் கேரண்டி.


jss
மே 01, 2024 12:07

உங்கள் கேரண்டிய யார் ஏற்றுக்கொள்வார்கள? நீங்களே உங்கள் கேரண்டிய ஏற்றுக் கொள்வீர்களா என்பதும் சந்தேகம்தான்


sankaranarayanan
மே 01, 2024 01:17

சனாதன தர்மத்தின் எதிர்ப்பின் விளைவு இன்னும் போக போக இயற்கையின் பல பல விபரிதங்கள் நடைபெறும் நடைபெறம் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் என்பதுபோல மத விஷயங்களில் திராவிட மாடல் அரசு தலையிட்டு வேண்டாத வேலைகளை செய்து மக்களிடையே விரோதத்தை பரப்பி இயற்கையின் எதிரியாக விளங்குகிறது பாவம்தான் அதன் பலனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது


vaiko
மே 01, 2024 00:22

ஒன்றிய அரசு புயல் நிவாரண நிதியாக கொடுத்த முந்நூறு கோடிகள் பிட்சை போட்ட மாதிரிதான் ஆனால் அந்த பணத்தை வைத்து மேட்டூர் அணையை உடனே தூர் வார வேண்டும் சிறிது தாமதித்தாலும் ஜூனில் தண்ணீர் வந்து விடும் துரைமுருகன் இப்போது தன மகனின் தோல்வியை நினைத்து மிகவும் சோகத்தில் இருப்பார் எனவே அவரை நம்பாமல் முதல்வர் அவர்கள் தானே நேரில் இந்த முக்கியமான விஷயத்தை கண்காணிக்க vendum


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை