மேலும் செய்திகள்
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
3 hour(s) ago
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
3 hour(s) ago
அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்
22 hour(s) ago | 5
நாட்டிலேயே யானை-மனித மோதல் அதிகமுள்ள பகுதியாக கோவை மாறியிருப்பதால், இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்று, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 147 பேர் உயிரிழப்பு
வனத்துறை புள்ளி விபரப்படி, கடந்த 2011 லிருந்து 2022 வரையிலான 12 ஆண்டுகளில், கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட 85 கிராமங்களில், யானைகள் தாக்கி 147 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் 102 பேர், வனப்பகுதிக்கு வெளியே பலியாகியுள்ளனர். அதேபோல, பல்வேறு காரணங்களால் 176 யானைகள் இறந்ததில், 109 யானைகள், மனிதர்களின் நடவடிக்கைகளால் உயிரிழந்துள்ளன.யானைக்கே 'பெரிய' பங்கு!
காட்டுப்பன்றி உள்ளிட்ட மற்ற வன உயிரினங்களைக் காட்டிலும், யானைகளால் 600 மடங்கு அதிகமான அளவில் பயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மனித-வன உயிரின மோதலால், ஆண்டுக்கு ஒரு மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் அழிக்கப்படுகின்றன. அதிலும் யானைகளால் விவசாயிகளின் ஆண்டு வருவாயில், ஐந்தில் ஒரு பங்கு பாதிக்கப்படுகிறது.இந்த மோதலால்400 மனிதர்கள் இறக்கின்றனர்; நுாறு யானைகள் பலியாகின்றன.மனிதர்கள் உயிரிழப்பில் 12.4 சதவீதம் பேர், யானைகளால் இறக்கின்றனர். அதை விட அதிகமாக 24.7 சதவீதம் யானைகளும் பலியாகின்றன. எனவே, யானை-மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசியமாகவுள்ளது.- நமது நிருபர் -
3 hour(s) ago
3 hour(s) ago
22 hour(s) ago | 5