உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அண்ணாமலைக்கு எதிரான காங்., போராட்டம் பிசுபிசுப்பு

அண்ணாமலைக்கு எதிரான காங்., போராட்டம் பிசுபிசுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக காங்கிரஸ் தலைவரை, 'ரவுடி' என, விமர்சித்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை நேற்று, 4 மாவட்ட காங்., தலைவர்கள் மட்டும் எரித்ததால், ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்துள்ளது.சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை, ரவுடி என, விமர்சித்தார் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. 'நான் ரவுடி என்பதற்கு அண்ணாமலை ஆதாரம் காட்ட வேண்டும்; அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடர்வேன்' என, செல்வப்பெருந்தகை எச்சரித்தார். இதற்கு அண்ணாமலை, செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளைப் பட்டியலிட்டு, 'மன்னிப்பு கேட்க மாட்டேன்; இந்த விவகாரத்தில் பின்வாங்கவும் மாட்டேன்' என, பதிலடி கொடுத்தார்.இதையடுத்து, சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகரன் தலைமையில், அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, அவரது உருவப்படத்தை காங்கிரசார் எரித்தனர். பின், சிவராஜசேகரன் கூறியதாவது: செல்வப்பெருந்தகை மீது தற்போது, எந்த குற்ற வழக்கும் இல்லை. ஆனால், அண்ணாமலை தவறான குற்றச்சாட்டுகளை கூறி அவதுாறு பரப்புகிறார். அது நீதிமன்ற அவமதிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில், அண்ணாமலைக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மற்ற மாவட்டங்களில் போராட்டம் நடக்கவில்லை. இதனால், தமிழக காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், இன்று மாநிலம் முழுதும் பல்வேறு போராட்டங்களை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காங்., மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், காணொலி வாயிலாக நேற்று நடந்தது. அதில், மாநில நிர்வாகி ஒருவர் பேசுகையில், 'அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால், பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும்' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

MADHAVAN
ஜூலை 15, 2024 16:29

போராட்டத்தைவிட அதிக மக்கள் வந்தது தெரியலையா ?


Manoharan. S. R.
ஜூலை 12, 2024 10:15

ஆர்ப்பாட்டம் செய்ய காங்கிரஸ்ஸில் யார் இருக்காங்க


Kesavan
ஜூலை 12, 2024 07:16

செல்வம் பெருந்தொகை வாய் மூடி கொண்டு இல்லாமல் அண்ணாமலையை சீண்டி தனது தலைவர் பதவிக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டார்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 11, 2024 16:40

இந்த விவகாரத்தில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் சேர்த்துக் கொண்டது தான்.


pv, முத்தூர்
ஜூலை 11, 2024 16:37

பெருந்தொகை. வெறுஎதாவது சென்னா ஜாதிபிரச்சனை ஆக்கிடுவாங்கப்ப


பேசும் தமிழன்
ஜூலை 11, 2024 08:39

அண்ணாமலை அவர்கள் ஏற்கெனவே சொல்லி இருக்கிறார்.... அப்போது வருகிறீர்கள் என்று சொன்னால்... வரும் 10 பேருக்கும் பிரியாணி விருந்து வைக்கப்படும் என்று !!!


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 11, 2024 07:31

திமுக மீது ஊழல் புகார் கூறினால் அது உடனே ஆதாரம் இருக்கிறதா என்றே கேட்கும். அதைப்போலவே காங்கிரசும் கேட்கிறது. ஏற்கனவே செல்வப்பெருந்தகை மீது வழக்குகள் இருந்ததையும், அவர் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் இருந்ததையும் ஒப்புக்கொள்ள மனமில்லாத காங்கிரஸ் இப்போது வழக்குகள் இல்லையென நழுவுகிறது. முன்னமிருந்த வழக்குகள் எப்படி முடித்து வைக்கப்படதென்பதை செல்வப்பெருந்தகை விளக்க வேண்டும்.


மோகனசுந்தரம்
ஜூலை 11, 2024 06:19

அண்ணாமலை கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. அதற்கு சரியான ஆதாரத்தையும் அவர் காண்பித்து உள்ளார். எதற்காக இந்தப் போராட்டம் நாங்கள் உத்தமர் என்று நிரூபிப்பதற்காக. என்ன இந்த காங்கிரசுக்கு வந்த சோதனை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை