உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்., குடியரசு தின பொதுக்கூட்டம்: தி.மு.க., புறக்கணிப்பால் சலசலப்பு

காங்., குடியரசு தின பொதுக்கூட்டம்: தி.மு.க., புறக்கணிப்பால் சலசலப்பு

மதுரை : தமிழக காங்., முதன்முறையாக நடத்திய குடியரசு தினவிழா பொதுக்கூட்டத்தை தி.மு.க., புறக்கணித்தது.குடியரசு, சுதந்திர தின நிகழ்வுகளை சென்னையில் மட்டும் நடத்தாமல் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் நடத்த மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முடிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக முதல் நிகழ்வாக குடியரசு தினவிழா பொதுக்கூட்டம் ஜன., 26ல் மதுரையில் நடந்தது. இது முதற்கூட்டம் என்பதால், கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக தி.மு.க., துணைப் பொதுச்செயலர் ராஜா பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், ராஜா வருகை ரத்து செய்யப்பட்டது.இதேபோல ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் புறக்கணித்தனர். காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.

இதுகுறித்து காங்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

தேர்தல் நெருங்குவதால் சென்னையைத் தாண்டி, பிற மாவட்டங்களில் காங்கிரசை பலப்படுத்தும் பணியில் மாநில தலைவர் இந்த முயற்சியை எடுத்துள்ளார். ஆனால் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன. காரணம் தெரியவில்லை.தி.மு.க., நிகழ்ச்சிகளில் கூட்டணி தர்மத்தை மதித்து தொடர்ந்து காங்., தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். ஆனால், மதுரை காங்., பொதுக்கூட்டத்தில், தி.மு.க., நகர் செயலர் தளபதி உள்ளிட்ட நிர்வாகிகள்கூட பங்கேற்கவில்லை. இதனால், அடுத்தடுத்த கூட்டங்களில் தி.மு.க.,விற்கு அழைப்பு விடுப்பது குறித்து மாநில தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

PARTHASARATHI J S
ஜன 28, 2025 21:57

இந்த இரண்டு கட்சிகளின் பார்லிமெண்ட்டில் பாஜகவை எதிர்ப்பதே தங்களது கொள்கையான இருக்கிறது. மக்களின் உண்மையான பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை.வரிப்பணத்தை மகளிரின் உரிமைத்தொகை வாரி இழைக்கிறது. மறுபடியும் ஆட்சிக்கு வந்து விடுவோம் என பகல்கனவு காண்கின்றன. மக்களுக்கு சரியான புரிதல் கிடையாது. ஜனநாயகம் அளவுக்கு மீறிய சுதந்திரம் அளிப்பதால் வளர்ச்சி வேகம் குறைகிறது.ஆட்சி மாற்றம் தேவை. விஞ்ஞான ஊழல் விரிவாக்கம் செய்யாமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.


பேசும் தமிழன்
ஜன 28, 2025 10:27

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ள அவர்கள் எல்லாம் என்ன அறிவு இல்லாதவர்களா? மூழ்கி கொண்டு இருக்கும் கான் கிராஷ் கட்சியை வளர்க்க அவர்கள் ஏன் காசு செலவழிக்க வேண்டும்.. அதனால் தான் அத்தனை பேரும்.. எஸ்கேப்.


ராமகிருஷ்ணன்
ஜன 28, 2025 09:18

90 சதம் செத்த காங்கிரஸூக்கு உயிர் வந்து விட கூடாது என்பதில் திமுக தெளிவாக இருக்கு. எல்லா அல்லக்கை கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்க ஆரம்பித்து விட்டால் குடும்ப வருமானம் போய்விடும். அதான் திமுக வரவில்லை


பேசும் தமிழன்
ஜன 28, 2025 08:17

உங்களுக்கு வேறு வழியில்லை.....


Smbs
ஜன 28, 2025 06:24

நமக்கு வாய்த்த அடிமைகள் புத்திசாலிகள்


சமீபத்திய செய்தி