உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: பார்லிமென்டுக்கு புதிய பிரச்னை!

டில்லி உஷ்ஷ்ஷ்: பார்லிமென்டுக்கு புதிய பிரச்னை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்டில் பலத்த பாதுகாப்பு உள்ளது. 3,500க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். உள்ளே யார் வந்தாலும், மூன்று முறை அவர்களை பரிசோதனை செய்தபின்தான் அனுமதிக்கின்றனர். ஏற்கனவே, பார்வையாளர் மாடத்திலிருந்து ஒருவர் சபையில் குதித்து பிரச்னையை ஏற்படுத்தியால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் திடீரென மூன்று குரங்குகள் பார்லிமென்ட்டுக்குள் நுழைந்தன. இவைகளை விரட்ட, பாதுகாப்பு வீரர்கள் எவ்வளவோ முயன்றனர். சுட்டால் பிரச்னை. ஏனெனில், குரங்குகளை ஹனுமனின் மறு உருவமாக வடமாநிலத்தவர்கள் மதிப்பதுடன், ஆராதிக்கவும் செய்கின்றனர்.எம்.பி.,க்களை குரங்குகள் தாக்குமோ, அவர்களிடம் உள்ள பைகளை பிடுங்குமோ என, பாதுகாப்பு வீரர்கள் பயந்தனர். கடைசியில், குரங்கு பிடிப்பவர்களை அழைத்து வந்து, பிரச்னையை தற்காலிகமாக தீர்த்து வைத்தனர். பார்லிமென்ட் மற்றும் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள இடங்களுக்கு அருகே, 'ரிட்ஜ்' என, அழைக்கப்படும் காடு உள்ளது; அங்கிருந்துதான் குரங்குகள் வருகின்றன. டில்லியில் பார்லிமென்ட் அருகே அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்களில், எப்போதும் குரங்குகள் ஓடிக்கொண்டிருக்கும்.இங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள், படிக்கட்டுகளில் செல்லும்போது, குரங்குகளைக் கடந்து தான் செல்ல வேண்டியிருக்கும். குரங்குகளிடமிருந்து எம்.பி.,க்களை பாதுகாப்பது, இனி பெரும் பிரச்னையாக இருக்கும் போலிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
ஆக 11, 2024 20:52

குரங்கிலிருந்து பிறந்தவர்கள் இவர்களும்தான் என்பதை சொல்ல வருகின்றதோ என்னவோ தெரியவில்லை


அப்புசாமி
ஆக 11, 2024 16:41

ஜெய் ஹனுமான்...


Swaminathan L
ஆக 11, 2024 16:31

அடிக்கடி பாராளுமன்றத்துக்கே வெளியே கும்பலாகக் கூடி ஏதாவது போராட்டம், குழுவாக பேட்டிகள் என்று செய்து கொண்டிருப்பது காட்டிலுள்ள ஆவலைத் தந்து வளாகத்துக்கு வரவழைக்கிறது போலிருக்கிறது.


Balasubramanian
ஆக 11, 2024 05:38

பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் ஒரே பிரச்சினை ஆண்டவா நீதான் இந்த நாட்டை காக்க வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை