உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காய்ந்தும், சாய்ந்தும் பயிர்கள் நாசம்: டெல்டா விவசாயிகளுக்கு சோகம்

காய்ந்தும், சாய்ந்தும் பயிர்கள் நாசம்: டெல்டா விவசாயிகளுக்கு சோகம்

காவிரி கடைமடை பாசன பகுதிகளில், மழை இல்லாததால், 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இடைவிடாது பெய்த மழையால், நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார் கோவில், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை ஆகியன காவிரியின் கடைமடை பாசன பகுதிகள்.இங்கு, 30,000 ஏக்கர் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாததால், காவிரி பாசனம் பெறும் பகுதிகள், மேட்டூர் அணை நீர் நிறுத்தப்பட்டதால், பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் நெற்பயிர்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 'அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதிகளுக்கு, கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். மேட்டூரில் ஓரளவு இருக்கும் தண்ணீரை திறந்து விட்டு, கல்லணை கால்வாயின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கினால் நெற்பயிர்களை காப்பாற்றலாம். இல்லாவிட்டால், பாதிப்பை தவிர்க்கவே இயலாது' என்றனர்.தண்ணீர் இன்றி புதுகையில் பயிர்கள் காயும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில், இடைவிடாது பெய்த மழையால், பயிர்கள் சாய்ந்துள்ளன.நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆழ்துளை கிணறு வாயிலாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் கதிர் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மழையால் பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளன.மழை நீடித்தால் நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

T.sthivinayagam
ஜன 08, 2024 22:52

அண்ணாமலை சாரின் என் மண் வெள்ளத்தில் எண் மக்கள் வெள்ளத்தில் மத்திய பஜாக அரசின் நிவாரனம் எங்கே அண்ணாமலை சார்


S.Ranganathan
ஜன 08, 2024 11:31

பெய்ந்தும் காய்ந்ததும் கஷ்டம் பட்டு விவசாயம் செய்து அடிமாட்டு விலைக்கு நெல்லை வி்ற்பது தான் உழவனின் தலையெழுத்து. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இது தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பது தான் அவர்கள் வேலை.


sivakumar Thappali Krishnamoorthy
ஜன 08, 2024 11:02

காசு வாங்கி வோட்டை போடுங்க..


sivakumar Thappali Krishnamoorthy
ஜன 08, 2024 11:02

மீண்டும் தி மு க ஜொலிக்கும் காலம் வந்தாச்சு.. வாழ்க டெல்டா மக்கள்...


R S BALA
ஜன 08, 2024 07:57

விவசாயம் ஒரு சூதாட்டம்..இதில் போனியானவர்களை விட போண்டியானவர்களே அதிகம்.இந்த காவேரி நீரை நம்பி விவசாயம் செய்வதை விட தப்பி சென்று வெளிநாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் நாற்பதுவருடங்களுக்கு முன்னரே தஞ்சம் அடைந்துவிட்டனர் பல டெல்டாமாவட்ட மக்கள்.


Ramesh Sargam
ஜன 08, 2024 07:33

ஒரு பக்கம் அதிக மழையினால் பயிர்கள் சேதம். மறுபக்கம் மழை இல்லாததால் சேதம். விவசாயிகளின் கண்ணீரை துடைப்பதை விட்டுவிட்டு, முதல்வர் பலகோடிகளை 'கலைஞர் 100' விழா, பலகோடிகளில் பாதுகாப்பு கார்கள், மகன் ஆசையை தீர்க்க racing track and racing events, என்று மக்கள் வரிப்பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறார். உருப்படுமா இந்த அரசு??


NicoleThomson
ஜன 08, 2024 05:46

பார்பதற்க்கே கஷ்டமா இருக்கு


மேலும் செய்திகள்