உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேவசம் போர்டு - போலீஸ் பனிப்போர்: சபரிமலையில் தவிக்கும் பக்தர்கள்

தேவசம் போர்டு - போலீஸ் பனிப்போர்: சபரிமலையில் தவிக்கும் பக்தர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் போலீஸ் இடையே நடக்கும் பனிப்போரால், சபரி மலையில் பக்தர்களின் பரிதவிப்பு தொடர்கிறது. கேரள மாநிலம் சபரிமலையில், 'விர்ச்சுவல் கியூ' என்ற திட்டத்தை முதலில் அமல்படுத்திய கேரள போலீசார், இதன் வாயிலாக நல்ல வருமானத்தையும் பெற்று வந்தனர். அந்த இணையதளத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கான கட்டணங்கள் போலீஸ் துறைக்கு கிடைத்து வந்தது. கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு இந்த திட்டம் தேவசம் போர்டிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னர் தேவசம் போர்டுக்கும், போலீசுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவற்றை தேவசம் போர்டு மறுத்து வருகிறது. 'ஆன்லைன் கியூ சிஸ்டம்' வருவதற்கு முன்பே, தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த போதும், சில மணி நேரம் மட்டுமே நெரிசல் இருக்கும். அதற்கு பின் சீராகிவிடும். கடந்த ஆண்டு வரை போலீசிடம் விர்ச்சுவல் கியூ திட்டம் இருந்தபோது போலீசார் தீவிரமாக பணியாற்றி, அதிக எண்ணிக்கையில் பக்தர்களை 18 படியேற்றி நெரிசலை தவிர்த்தனர்.ஆனால் இந்த ஆண்டு நிமிடத்திற்கு 60 பேரை மட்டுமே ஏற்றுவோம் என போலீசார் செயல்பட்டு வருகின்றனர். அதை கேரள ஏ.டி.ஜி.பி., அஜித், சபரிமலை தொடர்பான பல ஆய்வுக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளார். இதற்கு அவர் பல தொழில்நுட்ப காரணங்களையும் கூறியுள்ளார். தேவசம்போர்டு, ஒரு நிமிடத்திற்கு 90 பேரையாவது ஏற்ற வேண்டும் என்று கெஞ்சுகிறது. ஆனால், அதற்கு போலீசார் செவி சாய்ப்பதாக தெரியவில்லை.

தொடரும் பனிப்போர்

சபரிமலையில் மண்டல காலத்தை போல மகர விளக்கு காலத்திலும் பக்தர்களின் நீண்ட கியூ, மர கூட்டம் வரை காணப்படுகிறது. 12 மணி நேரம் வரை காத்திருப்பதால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சபரிமலை வரும் பாதைகளில் வாகனங்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகின்றன. தேவசம் போர்டுக்கும், போலீசாருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜன., 15 மகரஜோதி நாளில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கக் கூடாது என்பதற்காக, 10 -15 வரை ஸ்பாட் புக்கிங் வசதியை தேவசம்போர்டு நிறுத்தி உள்ளது. ஜோதி நாளில் பக்தர்கள் எண்ணிக்கையை 20,000 ஆக குறைக்கும்படி போலீசார் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Diraviam s
ஜன 04, 2024 17:53

if number of devottees reduces, govt will take action automatically.


Iniyan
ஜன 04, 2024 13:19

தேவசம் போர்டுக்கு திவசம் பண்ணினால் எல்லாம் சரியாகும்


அப்புசாமி
ஜன 04, 2024 09:29

ஜீன்ஸ் போட்டுக்கிட்டு சபரிமலைக்கு பயபக்தியோடு போறாங்க.


Ramesh Sargam
ஜன 04, 2024 07:39

இந்தமுறை சபரிமலை சீசன் போது அதிக பிரச்சினைகள். இதற்கு முன்பு இவ்வளவு பிரச்சினைகள் இருந்தது இல்லை. காரணம், திறமையற்ற பினாரயி விஜயன் ஆட்சி.


அப்புசாமி
ஜன 04, 2024 07:02

இதுக்குற்றான் பெரும்பாலான மலையாளிகள் சபரிமலைக்கு முட்டி மோதுவதில்லை. எல்லாம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்னாடகா பக்தர்கள்தான். சபரிமலை மடுமல்லாமல் தமிழகத்து கோவில்களில் எல்லாம் குழுமி டார்ச்சர் குடுக்கறாங்க.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை