உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  உண்மையில் நடந்ததா விஜய் - ராகுல் பேச்சு?

 உண்மையில் நடந்ததா விஜய் - ராகுல் பேச்சு?

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுடன், த.வெ.க., தலைவர் விஜய் பேசியதாக வெளியான தகவல், தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், பீஹார் தேர்தல் முடிவு, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'பீஹார் தேர்தல் தோல்வி, 'இண்டி' கூட்டணி கட்சிகளுக்கு ஒரு பாடம்' என முதல்வர் ஸ்டாலின் கூறியது, கூட்டணி கட்சிகளிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தி.மு.க., தலைமையிடம் அதிக தொகுதிகளை எதிர்பார்க்க இயலாது என்ற கருத்து காங்கிரசாரிடம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பீஹார் தேர்தல் முடிவுகளை அடுத்து, ராகுலிடம், த.வெ.க., தலைவர் விஜய் பேசியதாக தகவல் வெளியானது. அப்போது, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக, த.வெ.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள தகவலை விஜய் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த ராகுல், 'தமிழக காங்., தலைவர்கள் சிலர் வாயிலாக, வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு எதிராக, ஒத்த எண்ணம் உடைய அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என சொல்லி இருந்தேன். 'உங்களிடம் தகவல் சொல்லி இருப்பதாக கூறினர். அந்த வகையில், த.வெ.க.,வும் போராட்டக் களத்துக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது' என கூறியுள்ளார். தொடர்ந்து, ராகுல் சில புள்ளி விபரங்களை அவரிடம் கூறியுள்ளார். ராகுலிடம் பேசிய பின், தமிழகம் முழுதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை கண்டித்து, த.வெ.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் மேலிடம் தரப்பிலிருந்து, புதிய 'வாட்ஸாப்' குழு, காங்கிரஸ் கட்சியின் தரவு ஆய்வுப் பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி தலைமையில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் ஷோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், மாநில நிர்வாகிகள் சொர்ணா சேதுராமன், டி.செல்வம், அருள் பெத்தையா உட்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க, இக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

ராகுலுடன் தொலைபேசியில் விஜய் பேசியுள்ளார்; ஆனால், கூட்டணி தொடர்பாக பேசவில்லை. அவர்கள் இருவரும் வெளிநாட்டில் சந்திப்பதற்குரிய திட் டத்தை, ராகுலுக்கு நெருக்க மானவரும், விஜய்க்கு நெருக்கமானவரும் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசிய பின், கூட்டணியிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை