உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., பைல்ஸ் - 3: அண்ணாமலை ரிலீஸ்

தி.மு.க., பைல்ஸ் - 3: அண்ணாமலை ரிலீஸ்

சென்னை: தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர்சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் இடம் பெற்றுள்ள தி.மு.க., பைல்ஸ் பாகம் மூன்று என்ற வீடியோவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 2023 ஏப்., 14ல், தி.மு.க., பைல்ஸ் பாகம் ஒன்று வெளியிட்டார். அதில் தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.அதை தொடர்ந்து, ஜூலை மாதம் தி.மு.க., பைல்ஸ் பாகம் இரண்டு வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.தி.மு.க., பைல்ஸ் பாகம் மூன்று என்ற வீடியோ பதிவை, அண்ணாமலை நேற்று வெளியிட்டார். அதில், தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.அவர்கள் இருவரும் பேசியது தொடர்பான, கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் வெளியிடுவதாக, அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பல நாடாக்களில் இதுவும் ஒன்று.இந்த கூட்டணி 2004ம் ஆண்டு முதல் 20014ம் ஆண்டு வரை வேறு பெயரை கொண்டிருந்தது. டி.ஆர்.பாலு, ஜாபர் சேட் உரையாடலில், 2ஜி விசாரணையில் சி.பி.ஐ., ரெய்டுகளின் நேரத்தை தி.மு.க., காங்கிரஸ் முடிவு செய்து, விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டனர். வரும் நாட்களில் இது தொடர்பாக, மேலும் பல்வேறு தகவல்கள் வெளியிடப்படும்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 15, 2024 23:19

திமுக வ கூட்டணிக்கு மசிய வைக்க நீங்களும் உங்க அசைன்மென்ட்டை வெச்சுக்கிட்டு தீயா வேலை செய்யறீங்க ..... வெரி குட் .......


g.s,rajan
ஜன 15, 2024 22:56

சிந்து பாத் கதை போல் தொடர்ந்து போய்க்கிட்டே இருக்கும்.....


திகழ்ஓவியன்
ஜன 15, 2024 21:37

GURU ::அரசியலுக்கு வரவில்லை என்றால் அண்ணாமலை இந்நேரம் நிம்மதியாக இருந்திருப்பார் என்றும் அரசியலுக்கு வந்ததால் நிம்மதியை இழந்து கட்சிக்காக உழைத்து வருகிறார். அப்போ நாங்க எண்டெர்டைன்மென்ட்டுக்கு என்ன செய்வோம்.


பாரதி
ஜன 15, 2024 21:32

மலையின் திறமை பன்றிகளுக்கு புரிவதில்லை. புரியாமல் இருப்பதே நல்லது. முழுவதும் லாக்கப் பண்ணி விடலாம். .


திகழ்ஓவியன்
ஜன 15, 2024 21:08

ஒன்றிய அரசில் இருக்கிறோம் என்கிற ஒற்றை தைரியம் இல்லை என்றால் இவர்களை எல்லாம் கொசு கூட தீண்டாது


T.sthivinayagam
ஜன 15, 2024 20:59

தனுக்கு என எந்த அகிகாரமும் இருப்பதாக தெரியவில்லை எடுப்பார் கை பிள்ளையாக உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்


திகழ்ஓவியன்
ஜன 15, 2024 20:37

அதிமுக விடம் வாங்கிய சூடு வலிக்குதா?? என்னா பேச்சு ?? என்ன பேசுகிறோம் என்று நிலை இல்லாமல் வாய்க்கு வந்த படி பேசியதின் விளைவு வரும் தேர்தல்களில் நோட்டோவிடம் மட்டுமே போட்டி போடும் நிலையாகிவிட்டது. வசூல் யாத்திரைக்கு வரும் கூட்டங்கள் எப்படி கூடுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். எங்கள் ஊரிலும் பணம் பெற்று யாத்திரைக்கு வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்..சும்மா வாயாலேயே ஜீயைப்போல் வடை சுட்டதின் விளைவு அதிமுக காரர்கள் வாயிலேயே சூடு வைத்து விட்டார்கள்..இதில் அவர்களைப் பற்றி பேச மேலிடத்தின் அனுமதி வேண்டுமாம்... அதுவரை நேரம் போக கமல் உதயா ராகுல் பற்றி கதை அளக்கவும்.


Vasu
ஜன 15, 2024 21:10

நல்ல புலம்பு கண்ணா


திகழ்ஓவியன்
ஜன 15, 2024 19:30

ஏற்கனவே ரிலீச ஆன 2 பைலை க்கு என்ன கதியோ அதே கதி தான் இதற்கும் /


Kasimani Baskaran
ஜன 15, 2024 20:36

முதல் பைலில் பத்து ரூபாய் பார்ட்டி காலி. இரண்டாவது பைலில் தங்ககூந்தல் காலி... இன்னும் வரும்


திகழ்ஓவியன்
ஜன 15, 2024 20:55

நீங்கள் வீரர்கள் என்றால் எங்களிடமும் ED கொடுத்து விட்டு எங்களை வெற்றி கொள்ள பாரு கோழை கல் போல ED IT CBI வெச்சி மிரட்டும் தொடை நடுங்கிகள்


திகழ்ஓவியன்
ஜன 15, 2024 21:06

இந்த சங்கிகள் எப்போதும் ஆதாரம் இன்றி பொய் பேசுவார்கள் , மற்றவர்கள் ஆதாரத்துடன் பேசினால் அதை பொய் என்பார்கள் இது தான் RSS இந்த தாரக மந்திரம்


RAMESH
ஜன 15, 2024 21:27

தீய தீமுகா கூட்டத்திற்கு இந்த அடி பத்தாது . உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக முன்வந்து ஸ்டாப்களின் உட்பட அணைத்து குடும்ப உறுப்பினர்கள் , பினாமிகளை கண்டறிந்து , வழக்கை தாமே நடத்தி மொத்த ஆட்டைய போட்ட சொத்துக்களையும் ஜப்தி பண்ண வேண்டும் . தமிழ் நாட்டு மக்களை சாராயம் குடிக்க வைத்து காலி செய்த இந்த அரசை டிஸ்மிஸ் செய்து தலா பத்து வருடம் துண்டு சீட்டு குடும்பத்திற்கு கடுங்காவல் தண்டனை வழங்க வேண்டும் .


கனோஜ் ஆங்ரே
ஜன 17, 2024 14:16

.... பொன்முடி கேஸ் பதினைந்து வருட கேஸ்...? இதை உடனே “நா ஜெயிலுக்கு போறேன்.. நானும் ரவுடிதான்”...ன்னு கூவாதீங்க...? இதை உங்க லிஸ்ட்ல சேர்க்காதீங்க... ஏன்னா, இது ஜெயலலிதா போட்ட கேஸ்...?


S.F. Nadar
ஜன 15, 2024 18:24

எத்தனை படம் ரிலீஸ் ஆனாலும் ...கிடைக்க போவதோ ...நோட்டா ..தான்


Krishna Gurumoorthy
ஜன 15, 2024 17:58

நீங்கள் முட்டு கொடுத்து கொண்டே இருங்கள் அங்கே ஒவ்வொரு விக்கெட்டாக விழுந்து கொண்டே இருக்கும்


திகழ்ஓவியன்
ஜன 15, 2024 20:36

2024 வரை தேர்தலில் தோற்றால் அதே ED வேலை காட்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை