உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வில் நீங்கள் எந்த அணி முதல்வர் கேள்வி; நிர்வாகிகள் அதிர்ச்சி

தி.மு.க.,வில் நீங்கள் எந்த அணி முதல்வர் கேள்வி; நிர்வாகிகள் அதிர்ச்சி

சென்னை: 'தி.மு.க.,வில் நீங்கள் எந்த அணி என, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளிடம், முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியது, நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அறிவாலயத்தில், நேற்று முன்தினம், கட்சி நிர்வாகிகளுடன், 'ஒன் டூ ஒன்' சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு சட்டசபை தொகுதி நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது நிர்வாகிகள், 'ஒரத்தநாடு தொகுதியில் இருக்கும், முத்தரையர் சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று, ஐயம்பட்டி கிராமத்தை, தனி ஊராட்சியாக உருவாக்கி தர வேண்டும் எனக் கூறியதற்கு, பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் கிருஷ்ணசாமி, அதிகாரிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக வந்த குற்றச்சாட்டிற்காக, அவரை தனியாக அமரவைத்து, முதல்வர் கண்டித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள், முதல்வரை சந்திக்க செல்லும்போது, நீங்கள் பழனிமாணிக்கம் அணியா அல்லது துரைசந்திரசேகர் அணியா என, முதல்வர் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்க முடியாமல், நிர்வாகிகள் திணறி உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் தலைமையில் ஒரு அணி, தற்போதைய மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான துரை சந்திரசேகர் தலைமையில் ஒரு அணி செயல்படுவதாக, தலைமைக்கு புகார் வந்தது. அதையடுத்தே, கிண்டல் செய்யும் வகையில் முதல்வர் அப்படி கேட்டதாக கட்சியினர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Tamilan
ஆக 18, 2025 20:35

ஒரே ஒரு அணி சர்வாதிகார மோடி அணி என்று பாஜவைத்தவிர எந்த கட்சியிலும் கூறுவதில்லை


Ramesh Sargam
ஆக 18, 2025 19:52

எனக்கென்னமோ உதயநிதியின் பின் ஒரு கும்பல் ஸ்டாலின் அவர்களை ஒதுக்கிவிட்டு தனியாக ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டுகிறதோ என்று ஒரு சந்தேகம் வலுக்கிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2025 19:24

Stalin is more dangerous than Karunanidhi .......


V RAMASWAMY
ஆக 18, 2025 18:17

அம்பலம்.


Barakat Ali
ஆக 18, 2025 13:45

திணறடிப்பார் எங்கள் துக்ளக்கார் ...... இவர் பிரதமர் ஆகவேண்டும் ......


Ramesh Sargam
ஆக 18, 2025 13:11

ஆக திமுகவில் கோஷ்டி பூசல் ஆரம்பித்துவிட்டது.


நிக்கோல்தாம்சன்
ஆக 18, 2025 12:38

எந்த அணி என்று சூசகமா கேட்டிருக்கலாம்


கல்யாணராமன் சு.
ஆக 18, 2025 17:10

கேள்வி எழுதிக்கொடுத்த ஆசாமி அப்படி எழுதிக் கொடுக்கலியே ....


M Ramachandran
ஆக 18, 2025 11:39

அனைவரும் ஒரே குரலில் துட்டு அடிக்கும் உங்க அணித்தான் பசையுடன் இருக்கும் அதில் தான் நாங்க திளைத்திருப்போம் அது தான் எங்க வாழ்வாதாரம.


vivek
ஆக 18, 2025 11:27

அய்யோ அப்போ நம்ம இதயம் பத்திரம் வாசகர் என்ன செய்வாரு


எஸ் எஸ்
ஆக 18, 2025 11:02

கட்சி தலைவரே இப்படி கேட்கிறார் என்றால் கோஷ்டி அரசியல் திமுகவில் எந்த அளவுக்கு வளர்ந்து விட்டது என்று புரிகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை