உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தி.மு.க., எதிர்ப்பு; அ.தி.மு.க., ஆதரவு

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தி.மு.க., எதிர்ப்பு; அ.தி.மு.க., ஆதரவு

சென்னை: 'பருவமழை மற்றும் பண்டிகை காலத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்ளக்கூடாது' என, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நவ.,4 முதல் டிச.,4 வரை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்க உள்ளது. இப்பணி குறித்து, அரசியல் கட்சிகளுக்கு விளக்குவதற்காக, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற, 12 அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடனான, ஆலோசனைக் கூட்டம், தேர்தல் கமிஷன் சார்பில், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு கருத்துகளை வலியுறுத்தினர்.

பின் அவர்கள் அளித்த பேட்டி:

தி.மு.க., - ஆர்.எஸ்.பாரதி: நடப்பாண்டில், தமிழகத்தில் பருவமழை கூடுதலாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. பொங்கல் பண்டிகையின்போது திருத்த பணி நடக்கும் என, தேர்தல் கமிஷன் கூறிஉள்ளது. இதில், மத்திய பா.ஜ., அரசுக்கு உள்நோக்கம் உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை தள்ளி வைக்க வேண்டும். தி.மு.க., கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க, 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - ஜெய குமார்: தமிழகத்தில் ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது. அப்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் பெயரை நீக்கவேண்டும் என, அ.தி.மு.க., சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால் , எதுவும் செய்வதில்லை. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது நல்ல விஷயம். பா.ஜ., - கரு.நாகராஜன்: தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்றால், வாக்காளர் பட்டியலில் இருந்து, இரட்டை ஓட்டுரிமை வைத்துள்ளவர்கள் உள்ளிட்ட போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். எனவே, 2004ம் ஆண்டுக்கு பிந்தைய வாக்காளர் பட்டியலை, முழுமையாக ஆய்வு செய்து திருத்தம் செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சி - கிருஷ்ணன்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில், தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில், அவசர கதியில் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதும், லட்சக்கணக்கான வாக்காளர்களை புதிதாக சேர்ப்பதும், மக்களாட்சி முறைக்கு எதிரானதாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ