உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / லஞ்ச சார் பதிவாளரை பாதுகாக்கிறது பதிவுத்துறை? 8 மாதமாகியும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை

லஞ்ச சார் பதிவாளரை பாதுகாக்கிறது பதிவுத்துறை? 8 மாதமாகியும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: அன்னுார் சார்பதிவாளர் செல்வபாலமுருகன் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து எட்டு மாதங்களாகி விட்டது; பத்திரப்பதிவு துறையில் இருந்து, அவர் மீது இன்று வரை துறை ரீதியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கோவை மாவட்டம், அன்னுார் சி.எஸ்.ஆர்., நகரில் உள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் சார் பதிவாளராக இருப்பவர் செல்வபாலமுருகன். பத்திரம் பதிவு செய்வதற்கும், வில்லங்கச் சான்று பெறுவதற்கும் வரும் பொதுமக்களிடமும், பத்திர எழுத்தர்களிடமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் சென்றது. கடந்த ஜன., 22ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

லஞ்சம் வாங்க சம்பள ஆள்

லஞ்சம் வாங்குவதற்காகவே பிரபு என்பவரை, தனிப்பட்ட முறையில் பணிக்கு அமர்த்தி, வாரந்தோறும் ரூ.3,000 சம்பளம் கொடுப்பதாகவும், லஞ்சப்பணத்தை கார் டிரைவர் மணி மூலமாக பெற்று, வீட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையில், சார்பதிவாளர் செல்வபாலமுருகன் தெரிவித்திருக்கிறார்.பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு எதிரே உள்ள பத்திரம் எழுதும் அலுவலகங்களில், பிரபுவை அழைத்துச் சென்று விசாரித்தபோது, சார்பதிவாளரிடம் வழங்குவதற்காக கொடுத்து வைத்திருந்த, 500 ரூபாய் நோட்டுகளில், 264 எண்ணிக்கையில், ரூ.1.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.அதன்பின், சார்பதிவாளரின் கார் டிரைவர் மணியிடம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்தனர். அப்போது, பிரபு கொடுக்கும் பணத்தை சார் பதிவாளரிடமோ அல்லது அவர் வழங்கும் வங்கி கணக்கிலோ செலுத்தி விடுவேன் என கூறியிருக்கிறார்.டிரைவருக்கும், சார்பதிவாளருக்கும் இடையே, மொபைல் போன் 'வாட்ஸ்ஆப்' மூலம் நடந்த உரையாடல் ஆய்வு செய்யப்பட்டு, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து பதிவு செய்யப்பட்டது.லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி, இதுதொடர்பாக வழக்கு பதிந்து, ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். இவ்வழக்கு விசாரணையை, லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்வதோடு, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்து பத்திரப்பதிவுத்துறைக்கு அறிக்கை அனுப்பினர்.

நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ரூ.1.32 லட்சம் பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட அனைவரது வாக்குமூலமும் பெற்று, லஞ்ச ஒழிப்புத்துறை எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, எட்டு மாதங்களாகி விட்டது. இன்று வரை பத்திரப்பதிவு துறையில் இருந்து, சார்பதிவாளர் செல்வபாலமுருகன் மீது, துறை ரீதியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது, லஞ்ச ஒழிப்புத்துறையினரை சோர்வடைய வைத்திருக்கிறது.லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கேட்டபோது, 'லஞ்சம் பெறுவோரை கண்காணித்து, நடவடிக்கை எடுக்கிறோம். பணம் பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்று, வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிக்கை அனுப்புகிறோம். பத்திரப்பதிவுத்துறையில் இருந்தே, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

நடவடிக்கை எடுக்கணும்'

கோவை மண்டல பத்திரப்பதிவுத்துறை துணை தலைவர் பிரபாகரனிடம் கேட்ட போது, ''அன்னுார் சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, ரூ.1.32 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்தனர். செல்வபாலமுருகன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதுதொடர்பான மேல்நடவடிக்கைகள், சென்னையில் உள்ள பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் இருந்தே பிறப்பிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

சாண்டில்யன்
அக் 23, 2024 20:56

அவர் பிஜேபி ஆதரவு உள்ளவரா இருக்குமோ என்னவோ தொட்டு பாக்க முடியலை போலிருக்கு


Suresh R
அக் 03, 2024 12:29

This is standard operating procedure of ruling party. They steel money from buyers. Very soon they will steel money from sellers also. Central government is somewhat corrupt. All state governments are most corrupt. None can save this country. During world war3 all these corrupt fellows will be taken care


V GOPALAN
அக் 02, 2024 21:53

என்னுடைய நண்பரின் தந்தையர் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் . கமிஷன் தொகை மினிஸ்டரால்தான் கலெக்ட்டர் அனுமதியுடன் சார்பதிவாளர் தினசரி கலெக்ஷன் கையேடு மூலம் பதிவு செய்யப்பட்டு அன்று இரவே மினிஸ்டருக்கு கமிஷன் சென்று விடும்


David DS
அக் 02, 2024 20:02

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா சப் ரிஜிஸ்திரார் அலுவலகம் முன் இவரெல்லாம் தூசி


Yasararafath
அக் 02, 2024 19:02

வேலையை விட்டு நீக்கனும்


Srimathibuilders
அக் 02, 2024 18:10

இதே நிலைமை தூத்துக்குடி ரெஜிஸ்ட்ரர் ஆபீஸ்–ல் உள்ளது .


mohamedismail
அக் 02, 2024 16:50

, தமிழ்நாடு அரசு இது போன்ற இலஞ்சம் வாங்குவதற்கு கண்டுக் கானதால் செல்லும் நிலையில் உள்ளது. இதனால் வருவாய் துறை பத்திரபதிவுத்துறை இலஞ்சம் வாங்குவதுகொடி கட்டி பறக்கும்


sampath, k
அக் 02, 2024 16:06

Corruption is exorbitant in all sub registrar offices in Tamilnadu. Top to bottom, all staff and officers are more corruptive. No solution for that since they are huge funds on their hands and thereby they are capable to purchase other govt agencies very easily


sankar
அக் 02, 2024 11:40

வேர் மிகவும் ஸ்ட்ராங் , அதுதான்


Subramaniam Mathivanan
அக் 02, 2024 11:30

மேலிடங்களை அரசியல்வாதிகள் உட்பட சரியாக கவனித்து இருப்பார்


சமீபத்திய செய்தி