உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உஷார்: போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 பைன்

உஷார்: போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 பைன்

சென்னை: விபத்து தடுப்பு நடவடிக்கையாக, மாநிலம் முழுதும், 'ஸ்டார்மிங் ஆபரேஷன் என, குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.அவர் நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக, சாலை விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்ற நிலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதேபோல, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும், குடிபோதையால் வாகனம் ஓட்டி உயிரிழப்புகள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.அதற்கு ஏற்ப, மாநிலம் முழுதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். 'ஸ்டார்மிங் ஆபரேஷன்' என, குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு வாகனம் ஓட்டுபவர்களுக்கு தலா, 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Shankar
ஜன 15, 2024 20:15

ஒரு படத்தில் வரும் காட்சி... அப்போ நாம காட்டியும் கொடுக்கிறோம், கூட்டியும் கொடுக்கிறோமா பாஸ்? இதுபோலத்தான் இருக்கிறது இந்த விடியல் அரசின் சட்டங்கள். மதுவையும் குடிக்கவைத்து அதை குடித்துவிட்டு வண்டிஓட்டினால் அதற்க்கு அபராதமும் கட்டவேண்டுமாம். அப்படியென்றால் மது பிரியர்களுக்கு வீட்டிற்க்கே கொண்டுபோய் சேர்ப்பது போல ஒரு திட்டத்தை தயாராத்தீர்களென்றால் யாரும் குடித்துவிட்டு வண்டி ஓட்டவேண்டிய அவசியம் இருக்காது.


mrsethuraman
ஜன 15, 2024 18:12

பைன் தொகையை கேட்டதுமே போதை தெளிந்துவிடும் .


Gopinathan S
ஜன 15, 2024 16:56

ஒவ்வொரு டாஸ்மாக் வாசலிலும் நூற்றுக்கணக்கில் இருசக்கர வாகனங்கள் நிற்கிறது...நேரடியாக கடை வாசலில் சென்று ஒட்டு மொத்தமாக அபாராத்தை ஏன் அள்ளக்கூடாது? இவர்களே விற்பார்களாம், நூறு மீட்டர் தள்ளி இருந்து மடக்கி அபராதம் விதிப்பார்களாம்....இந்த கொடுமையை ஒரு அமைப்பும் தட்டி கேக்காதது வேடிக்கை...அதே போல டாஸ்மாக் காட்சி இல்லாமல் வரும் திரைப்படங்கள் அரிதிலும் அரிது...ஒரு வேலை அந்த காட்சி வைத்தால் தான் வரிவிலக்கு எளிதில் கிடைக்குமோ என்னவோ? யார் கண்டது?


Ram
ஜன 15, 2024 16:28

மதுவை ஊத்திக்கொடுக்கும் அரசாங்கம் , பையை காலி செய்யும் அரசாங்கம் , மக்களிடம் கொள்ளையடித்து வாழ்வு நடத்தும் வடிகட்டிய படையல் அரசாங்கம்


Sck
ஜன 15, 2024 16:11

பூ...₹10,000தானா...ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். துபாயில் இந்த வழக்கம் உண்டா, இல்லையா?


ராஜா
ஜன 15, 2024 12:17

மும்பையில் ஹிட் அந்த ரன்னுக்கு கிளம்பியது போல இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்ப போகிறது.


கருத்து சுந்தரம்
ஜன 15, 2024 08:33

இது அரசுக்கு வருமானத்தை அதிகரிக்கும் யுக்தி அல்ல. அபராதத்தை அவாய்ட் பண்ணி "அன்பளிப்பை" அதிகரிக்கும் அதிசய யுக்தி.


டாஸ்மாக் தமிழன்,கமுதி
ஜன 15, 2024 08:32

ஒரு நல்ல நாளும் பொல்ல நாளுமா குடிச்சிட்டு கூட வண்டி ஓட்டக் கூடாதுன்னா என்ன ஞாயம்? சரக்குக்கும் எங்ககிட்ட காச புடுங்கிட்டு வண்டி ஓட்றதுக்கும் ஃபைன் போட்டு காசை புடுங்குவது எந்த விதத்தில் நியாயமாகும் அப்படீன்னா இந்த திராவிட மாடல் அரசு அன்றைக்கு மட்டும் சரக்கு கடையை அடைக்கட்டும் அப்பறம் யார் குடிச்சிட்டு வண்டியை ஓட்டப் போறானுக இதெல்லாம் இவர்களுக்கு அடுக்குமா?


ராமகிருஷ்ணன்
ஜன 15, 2024 08:21

டாஸ்மாக்கில் குடித்து மட்டையாகி விழுந்து கிடக்க இட வசதிகள் செய்து தர மதுகுடிப்போர் சங்கம் மாபெரும் போராட்டம் தொடங்க னும். தெளிந்து வீட்டுக்கு போவார்களா. அல்லது மீண்டும் மீண்டும் குடிப்பார்களா? குடிமகன்களின் வசதியை பொருத்தது.


Palanisamy T
ஜன 15, 2024 07:38

எங்கவூரில் குடிபோதையில் வண்டி யோட்டினால் முன்பு அபராதம் மட்டும் விதித்தார்கள் இப்போது கட்டாய சிறைத்தண்டனையோடு வாகன ஓட்டும் உரிமையும் பறிமுதல் செய்யப்படும். இதன் பின்விளைவு, செய்யும் வேலையும் பறிபோகும். பின் அவன் குடும்பத்தின் நாளைய நிலை தமிழகத்திலுள்ள மகளிர் அமைப்புக்கள், சங்கங்கள் அனைவரும் இந்த கடுமையான சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர அழுத்தம் தரலாம். மேலும் காவற்றுறையினரும் அரசுக்கு பரிந்-துரைக்கலாம். மக்கள் இந்த சட்டத்தை ஆதரிக்கின்ற அரசியல் கட்சிகளை மட்டும் ஆதரிக்கவேண்டும். இது நிறைவேற்றப் பட்டால் நாளை இந்திய நாட்டிற்கு முன்னோடியாக தமிழகம் அமைந்துவிடும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை