உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  துரை வைகோவுக்கு ரூ.250 கோடி சொத்து: மல்லை சத்யா புது குண்டு

 துரை வைகோவுக்கு ரூ.250 கோடி சொத்து: மல்லை சத்யா புது குண்டு

சென்னை: ''தமிழகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக வைகோ நடைபயணம் செல்கிறார் என்றால், தி.மு.க.,வுக்கு எதிரான நடைபயணமா என்ற சந்தேகம் எழுகிறது,'' என மல்லை சத்யா தெரிவித்தார். ம.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா ஏற்கனவே, ம.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து, நாளை மறுதினம் புதிய கட்சியை துவக்குகிறார். இது குறித்து, அவர் அளித்த பேட்டி: வைகோ தன் மகனுக்காக ம.தி.மு.க.,விலிருந்து என்னை நீக்கினார். என் எதிர்கால பயணம், அரசியல் கட்சியா அல்லது சங்கமமா என ஆலோசிக்க, புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைத்தோம். அக்குழு வழங்கிய ஆலோசனையின்படி, நாளை மறுதினம், சென்னை அடையாறில் புதிய கட்சியை துவக்குகிறோம். மத்திய அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் துரைக்கு உள்ளது; அதனால் தான், பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும், 250 கோடி ரூபாய்க்கு வைகோ குடும்பத்திற்கு சொத்து இருக்கிறது. அவரது உறவினர்கள் நடத்தும் மதுபான ஆலைகளால், கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. மிகப் பெரிய நட்சத்திர விடுதியை, 5 கோடி ரூபாய் மதிப்பில், சில ஆண்டுகளுக்கு முன் வாங்கினார். தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில், 10 கிரவுண்டில் மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டை கட்டியிருக்கிறார்; ரகசியமாக புதுமனை புகுவிழா நடத்தினார். வைகோ உறவினர் மதுபான ஆலை நடத்தி வரும் நிலையில், மதுவிற்கு எதிராக அவர் நடைபயணம் செல்கிறார். துரைக்கு மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் உள்ளதால், பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார். அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என தற்போது ராமதாஸ் வருத்தப்படுகிறார். அதேபோல் ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார். சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ. சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். தமிழகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக வைகோ நடைபயணம் செல்கிறார் என்றால், தி.மு.க.,வுக்கு எதிராக நடைபயணம் போகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார். மல்லை சத்யாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருக்கும் வைகோ, ''எங்களை களங்கப்படுத்தும் தீவிரத்தில் இருக்கிறார் மல்லை சத்யா. துரோகிகள் கூட சொல்லத் துணியாத அபாண்டங்களை துணிந்து சொல்கிறார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Natchimuthu Chithiraisamy
நவ 18, 2025 16:21

கூட இருக்குபோது கூலியை கேட்டு வாங்கவில்லையே பிட்சை தான் கிடைத்தது


Sun
நவ 18, 2025 11:07

மக்கள் எல்லாம் தெருக் கோடியில் நிற்க இவர்களுக்கு மட்டும் எப்படி இத்தனை நூறு கோடிகள்? இத்தனை வருடங்கள் கூட இருந்தவர் சொல்கிறார்! துரை. வைகோ மறுப்பு தெரிவிப்பாரா?


Kulandai kannan
நவ 18, 2025 10:44

மிஷனரி காசு


SUBBU,MADURAI
நவ 18, 2025 07:40

மல்லை சத்யா சொல்வது தவறு, நடைப்பயண நாடக நடிகரின் மகன் துரை வைகோவிற்கு ரூ. 250 கோடிகளை விட இரு மடங்கு கூடுதலாகத்தான் சொத்துக்கள் இருக்கும்.


krishna sah
நவ 18, 2025 10:17

உண்மை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை