உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமலானது நடத்தை விதிகள்; யாருக்கு என்ன கட்டுப்பாடு?

அமலானது நடத்தை விதிகள்; யாருக்கு என்ன கட்டுப்பாடு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை, இந்த நாடே, தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் இருக்கும்.அரசியலமைப்பு சட்டத்தின், 324வது பிரிவின்படி, தேர்தல் அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடக்க, இந்த விதிகளை அமல்படுத்த தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பு

இந்த விதிகள், அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அரசு அதிகாரிகள், ஏன் பொதுமக்களுக்கும் பொருந்தும். தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை, தேர்தல் பணியில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், தேர்தல் கமிஷனின் உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்த வேண்டும்.கடந்த, 1960ல் கேரள சட்டசபை தேர்தலில் முதல் முறையாக இந்த நடைமுறை அறிமுகமானது. அதைத் தொடர்ந்து, 1962 லோக்சபா தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த, 1967ல் இருந்து லோக்சபா மற்றும் அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் அமல்படுத்தப்பட்டது.இந்த விதிகளின்படி, அரசுகள் எவ்வித புதிய அறிவிப்புகள், திட்டங்கள் திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா நடத்த முடியாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, துவக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தலாம்.அமைச்சர்கள் உள்ளிட்டோர், அதிகாரப்பூர்வ கார்கள் உள்ளிட்ட வாகனங்களை, அரசு பணிக்கு மட்டுமே பயன்படுத்தலாம். தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த முடியாது. எந்த வகையிலும், பொது நிதி, அவர்களுடைய தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.கோவில், சர்ச், மசூதி, குருத்வாரா உள்ளிட்ட எந்த ஒரு வழிபாட்டு தலத்தையும் அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது.மதம், ஜாதி ரீதியில் உணர்வுகளைத் துாண்டும் வகையில், ஓட்டுகளை பெறுவதற்காக கருத்து தெரிவிக்கக் கூடாது; பேசக் கூடாது.அதிகாரிகளை இடமாற்றம் செய்வது போன்றவை மேற்கொள்ள முடியாது. தவிர்க்க முடியாத பட்சத்தில், தேர்தல் கமிஷனின் ஒப்புதல் பெற வேண்டும்.

கருத்து கணிப்பு

ஓட்டுப்பதிவு நடப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய, 48 மணி நேரங்களில், எவ்வித கருத்துக் கணிப்பு, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது.பொதுமக்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர், ஓட்டுச்சாவடிக்கு, 100 மீட்டர் பரப்புக்குள் மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை யாரும் எடுத்துச் செல்ல முடியாது.இந்த விதிகளை மீறினால், இந்திய தண்டனை சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். -- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
மார் 17, 2024 19:42

எல்லா கட்டுப்பாடுகளும் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே உண்டு, பாஜகவுக்கு இல்லை!


duruvasar
மார் 17, 2024 15:58

இது களிமண் . இதுபோல் எத்தனை கட்டுப்பாடுகளை பார்த்திருக்கிறது.


NicoleThomson
மார் 17, 2024 10:53

இது யாவும் குடும்ப வாரிசுகளுக்கும் அவர்களின் கார்பொரேட் ஊடகங்களுக்கும் பொருந்தாது அப்படியே கேட்டா மறைச்சுடுவோம்ல


Kasimani Baskaran
மார் 17, 2024 07:55

வின்சிக்கு விதிகளிலிருந்து விலக்கு உண்டு ஏனென்றால் அவரது யாத்திரையை அவர் இன்னும் முடிக்கவில்லை.


தமிழ்
மார் 17, 2024 11:04

ஒருத்தர் கோயம்பத்தூரில் ரோடு ஷோ நடத்தி சீன் போடப்போகிறார் அவரைப்பற்றி தங்கள் கருத்து என்ன.


Krishnan
மார் 17, 2024 05:11

இந்த விதிகளை எந்த கட்சியும் கடைபிடிக்காது... விதிகளை மீறும் கட்சிகள் மீது ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது....


Palanisamy Sekar
மார் 17, 2024 04:42

தேர்தல் கமிஷனும் சொல்லிட்டுதான் இருக்குது. ஆனால் பாருங்களேன் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மக்கள் ஆளாய் பரப்பார்கள்.எங்கே எந்த தெருவில் எந்த சந்துல பணம் பட்டுவாடா பண்றங்க என்று கேட்டு. வீட்டுக்கு வீடு பரிசுப்பொருட்கள் கொடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள் அதனை செவ்வனவே செய்துகொண்டிருப்பவர்கள் திமுகவினர் மட்டுமே. பணப்பட்டுவாடா நடக்காத தொகுதியே இல்லை என்கிற அளவில் இதனை இன்னும் கட்டுப்படுத்த இயலாமல் தேர்தல் கமிஷன் இருப்பது கொடுமைதான். திமுகவினர் கொடுக்கின்ற பணமும் வெள்ளியில் பொருளும் ஏன் பொன்னில் மூக்குத்தியும் கால்கொலுசும் கொடுப்பதை ஊர் உலகமே சொல்லும் ஆனால் தேர்தல் கமிஷனுக்கு மட்டும் இதுபற்றி தெரியாது என்பார்கள். வழக்கமான அறிவிப்புகள்..அதே வழக்கமான பணப்பட்டுவாடா...ஹ்ம்ம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை