உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓ.பி.எஸ்., பற்றி பேச வாய்ப்பூட்டு போட்ட இ.பி.எஸ்.,

ஓ.பி.எஸ்., பற்றி பேச வாய்ப்பூட்டு போட்ட இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓ.பி.எஸ்., சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும் என, மூத்த நிர்வாகிகள் இ.பி.எஸ்.,யிடம் வலியுறுத்திய தகவல் வெளியான நிலையில், லோக்சபா தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டம், அ.தி.மு.க.,வில் இன்று துவங்குகிறது. இந்த கூட்டத்தில், நீக்கப்பட்டவர்கள் குறித்தும், அவர்களை சேர்ப்பது குறித்தும் பேச, நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்குக் கிடைத்த தோல்வியை அடுத்து, கட்சி அமைப்பை சீர்படுத்த, 117 மாவட்டங்கள் பிரித்து, லோக்சபா தேர்தலில் சரியாக பணியாற்றாத மாவட்ட செயலர்களை மாற்றி, துடிப்புடன் செயல்படுகிற இளைஞர்களை நியமிக்க, இ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளார். அதை செயல்படுத்துவதற்கு முன்பாக, இன்று முதல் 19ம் தேதி வரை, தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகளை அழைத்து, தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cqmogf24&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல் கட்டமாக, 26 லோக்சபா தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்கள், இன்று முதல் வரிசையாக நடக்க உள்ளன. இதற்கிடையில், ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ்., சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து யாரும் பேசக் கூடாது என, இ.பி.எஸ்., திடீர் தடை உத்தரவு போட்டிருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

MADHAVAN
ஜூலை 17, 2024 12:16

எடப்பாடி சாதி கட்சி தொடங்கி தலைவராக இருந்துகொள்ளுங்கள், அதிமுகவை வளரவிடுங்கள்,


ஆஸ்குமி
ஜூலை 12, 2024 20:21

எடப்பாடிக்கு தன் பின்புறத்தை காப்பாற்றுவதே நோக்கம். அவனுக்கு கட்சியோ தொண்டர்களோ ஓரூ பொருட்டே இல்லை


jaihind mani
ஜூலை 11, 2024 14:23

மதிப்பிற்குரிய எடப்பாடியார் அவர்களே, கட்சியின் நலனைக் க௫த்தில் கொண்டு, அனைவரும் ஒன்று பட்டு, விடியல் ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள் தயவுசெய்து, ?, அம்மாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும், அதற்கு ஒரே வழி, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதே உண்மை... ???


Annamalai
ஜூலை 11, 2024 09:49

நல்லது


Annamalai
ஜூலை 11, 2024 09:47

பழனிச்சாமி,,, நீங்க தப்பு மேல தப்பு பண்ரீங்க நீங்க யாரை கட்சியில் இனணக்கிறீர்களோ இல்லையோ, ஓ பி எஸ் ஐ இனணக்காமல் அண்ணா தி மு க ஐ எதிலும் வெற்றிபெற வைக்க முடியாது…ஏதோ உயர்ந்த நல்ல பதவியை உங்களுக்கு ஈடாக கொடுத்து உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்…ஜெயக்குமார் வார்த்தையை கேளுங்கள் மதியுங்கள் ஆனால் எல்லாவற்றையையும் கேட்க வேண்டிய அவசியமில்லை.ஜெயல்லிதாவைப்போல தன் நிலையில் முடிவை எடுங்கள்.நிச்சயமாக தொண்டர்கள் அனைவரும் உங்கள் பின்னால் நிற்போம் ஏனென்றால் தொண்டர்கள் அனைவரும் எம் ஜி ஆர், ஜெயல்லிதா அவர்களின் பாசறையில் வளர்ந்த பிள்ளைகள்… அவர்கள் வாங்கித்தந்த இரட்டை இலை சின்னம் பக்கம் என்றும் நிற்போம்… தொண்டர்களின் மன நிலையை தடுமாற விடாதீர்கள்….


Annamalai
ஜூலை 11, 2024 09:27

நீங்கள் அனுப்பக்கூடிய செய்திகள் அனைத்தும் நன்றாக உள்ளது…


M Ramachandran
ஜூலை 10, 2024 21:22

நாம் ஒன்றை பேச வேறு ஒரு பூதம் கிளம்பி அடிவாரத்தையே பெயர்த்து விட்டால் என்ன செய்வது என்று அதி தீவிர மாக யோசித்து எடுத்த முடிவு. சில பெயர் நினைக்க கூட மௌனம் சம்மதம் மென்று மௌனம் முடிவை எடுத்து. எதுக்கும் இருக்கட்டுமென்று தன ஜலராக்கல்களை விட்டு ஓதி வருகிறார்.


RADHAKRISHNAN
ஜூலை 10, 2024 13:16

சரியான முடிவு, ஒரு கொள்ளைகும்பலை சேர்த்து தமிழ்நாட்டை மொத்தமாக பட்டபோட இடமழிக்கவேண்டாம், எடப்பாடியின் செயல் சரியானது, என்ன ஆசை அக்காவுக்கு


Neelamegam
ஜூலை 12, 2024 10:26

எடப்பாடி எதுவுமே வாங்காத உத்தமர்


selvaralraj Raj
ஜூலை 10, 2024 10:33

அஇஅதிமுக அழிவு பாதையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.. கருத்து சுதந்திரம் இல்லாத கட்சியை கலைந்து போகும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை