உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்., மகளிரணியிலும் கோஷ்டி பூசல்: மாவட்ட தலைவர்கள் நியமனம் இழுபறி.. புதிய உறுப்பினர்கள் சேர்த்தும் ஏமாற்றம்

காங்., மகளிரணியிலும் கோஷ்டி பூசல்: மாவட்ட தலைவர்கள் நியமனம் இழுபறி.. புதிய உறுப்பினர்கள் சேர்த்தும் ஏமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழக காங்., மகளிரணியிலும் நீடிக்கும் கோஷ்டி பூசலால், 20க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்களை நியமிக்க முடியாமல் அகில இந்திய காங்., தலைமை திணறி வருகிறது. காங்., சார்பு அணியில் மகளிரணி முக்கியமானது. மாநில தலைவராக ஹசீனா சையத் உள்ளார். இவர் பொறுப்பேற்ற பின் மாவட்டங்களில் மகளிரணி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்த்தவர்கள் அடிப்படையில், மாவட்ட தலைமை பதவிகளை அகில இந்திய தலைமை அளித்து வருகிறது. அதேநேரம் ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் சேர்த்தவர்களை மாவட்ட தலைவர்களாக நியமிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழக காங்., மகளிரணி நிர்வாகிகள் கூறியது: காங்., கட்சியில், அகில இந்திய தலைமையுடன் தொடர்பில் உள்ள சீனியர் மகளிர் நிர்வாகிகள், மாநில தலைமையால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பணபலம் உள்ளவர்களுக்கு தான் பதவி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் மாவட்ட தலைவர்கள் இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், கோஷ்டி பூசலால் கட்சி தடுமாறுகிறது. 'புதிய உறுப்பினர்களாக 100 பேரை சேர்த்தால் பதவி வழங்கப்படும்' என மாநில தலைமை தெரிவித்தது. ஆனால், ஆயிரத்திற்கும் மேல் உறுப்பினர்கள் சேர்த்தவர்களுக்கு கூட, பதவி வழங்கப்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்த ராமலட்சுமியை அகில இந்திய தலைமை பாராட்டியது. அதுபோல் 3 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்து, எஸ்.ஐ.ஆருக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் கையெழுத்து பெற்றுத்தந்த கன்னியாகுமரி (கிழக்கு) மாவட்ட தலைவர் வதனா நிஷா உட்பட, தென் மாவட்ட சீனியர் நிர்வாகிகள் பலரையும் மாநில தலைமை தொடர்ந்து புறக்கணிக்கிறது. இதனால், தமிழக காங்., மகளிர் அணியில் கோஷ்டி பூசல் த லைவிரித்தாடுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை