உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆபீஸ்களில் கோப்புகள் மாயம்; பணத்துக்காக கைங்கர்யம்! ஆவணத்துக்காக அலைமோதும் மக்கள்

ஆபீஸ்களில் கோப்புகள் மாயம்; பணத்துக்காக கைங்கர்யம்! ஆவணத்துக்காக அலைமோதும் மக்கள்

கோவையிலுள்ள பல்வேறு அரசு அலுவலகங்களிலும், பணத்துக்காக கோப்புகளை அலுவலர்கள் சிலர் மறைத்து வைப்பதும், பின்பு கொண்டு வருவதுமான வேலைகள் அதிகரித்து வருகின்றன.கோவையில் மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள மாநகராட்சி, வருவாய்த்துறை, வீட்டு வசதி வாரியம் போன்ற அலுவலகங்களைத் தேடி, தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகங்களில் தான், பல ஆயிரம் மக்களின் விண்ணப்பங்கள் தேங்கிக் கிடக்கின்றன. அரசு மற்றும் பொதுமக்களின் சொத்துக்கள் குறித்த ஆவணங்களும், இந்த அலுவலகங்களில் தான் இருக்கின்றன.

காகித ஆவணங்கள்

உதாரணமாக, ஒரு 'லே -- அவுட்' வரைபடம், அதிலுள்ள பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தானப்பத்திரங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், வாரியத்திடமிருந்து பொதுமக்கள் நிலம் மற்றும் வீடுகள் வாங்கி, பணம் கட்டியதற்கான ரசீதுகள், ஒப்பந்தங்கள் ஆகியவை, ஆவண வடிவங்களில் இந்த அலுவலகங்களில் தான் பாதுகாக்கப்பட்டுள்ளன.இவற்றில் பாதியளவுக்குக் கூட, மென்பொருள் வடிவங்களில் சேமிக்கப்படவில்லை; இணையதளங்களில் பதிவேற்றப்படவுமில்லை. அதிலும் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட லே -- அவுட்களின் வரைபடங்கள், நிலங்கள் சார்ந்த பதிவேடுகள், மனையிடம் மற்றும் வீடு ஒதுக்கீடுகள் சார்ந்த ஆவணங்கள் அனைத்தும் காகித வடிவில் தான் இருக்கின்றன.

அலைக்கழிப்பு

தங்கள் தேவையின் பொருட்டு, இந்த ஆவணங்களைக் கேட்டு, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் இந்த அலுவலகங்களைத் தேடி வருகின்றனர். ஆனால், முறைப்படி விண்ணப்பித்தாலும், நேரடியாக வந்து கேட்டாலும் இந்த ஆவணங்கள் உடனடியாகக் கிடைப்பதில்லை. தேடித்தருவதாகக் கூறி, மாதக்கணக்கில் விண்ணப்பதாரர்கள், ஒதுக்கீடுதாரர்கள் போன்றவர்களை, அலுவலர்கள் அலைக்கழிக்கின்றனர்.வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில், ஒதுக்கீடுதாரர்கள் தவணை, வாடகை மற்றும் வட்டி கட்டியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தாலும், அலுவலகத்தில் காகிதக் குப்பை மலையாக மாற்றி, அவற்றைப் புதைத்து விடுகின்றனர். லஞ்சம் கொடுத்தால் கோப்புகள் மீண்டும் கிடைக்கின்றன; இல்லாவிட்டால், காணவே இல்லை என்று மொத்தமாகக் கையைக் கழுவி விடுகின்றனர்.குறைந்தபட்சம் சில அலுவலர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இப்படி பொதுச் சொத்து மற்றும் பொது மக்கள் சார்ந்த ஆவணங்களை மறைக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Suresh R
ஜூன் 02, 2024 09:22

Shame All government offices need to be closed. Privatise all these activities. At least pension for these corrupt fellows will be saved


UTHAMAN
ஜூன் 01, 2024 11:21

அகில இந்திய பணி அலுவலர்களே ஊழியர்களை அனுசரித்து போகவேண்டிய அவலநிலை. அரசு அலுவலர்கள் சங்கங்கள் பலமாக இருந்தன. அதுவாவது பரவாயில்லை, கமிஷனரையும் மாவட்ட ஆட்சியரையும் அனுசரித்தார்கள். தற்போது பணிநியமனமே அரசியல்வாதிகள் தான் செய்கிறார்கள். ஒவ்வொருத்தனுக்கும் பின்னால் ஒவ்வொரு கட்சிக்காரன் இருக்கிறார். கமிஷனரோ, கலெக்டரோ கேட்டால் அவர்கள் மாற்றப்படுவார்கள். கஷ்டப்பட்டு வாங்கின பசையுள்ள சீட் முக்கியமா ஏழைகளின் கண்ணீர் முக்கியமா. ஆளும் கட்சி கூறும் பணிகளை கவனித்தால் மட்டும் போதும் என கமிஷனர்களும் கலெக்டர்களும் எண்ணுகிறார்கள். மொத்தத்தில் ஊழியர்களின் தயவில் அகில இந்திய பணி அலுவலர்கள்.


Vijayakumar Srinivasan
ஜூன் 02, 2024 09:28

உண்மை தான் சார். அரசியல் பின்புலம் அதிகம். எனவே எதுவும் செய்ய இயாலாது


அப்புசாமி
ஜூன் 01, 2024 10:38

திருட்டு திராவிடங்க எல்லா இடத்திலேயும்.ஊடுருவிட்டாங்க. லட்சக்கணக்கில் லஞ்சம்.குடுத்து வேலைக்கு வந்தவர்


konanki
ஜூன் 01, 2024 07:31

இவங்கள எல்லாம் கொதிக்கிற எண்ணெய் கொப்பரை யில தூக்கி போடணும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை