உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தளவாய் சுந்தரத்திற்கு மாஜி அமைச்சர்கள் ஆதரவு: பொங்கி எழுந்து குரல் கொடுக்க அழைப்பு

தளவாய் சுந்தரத்திற்கு மாஜி அமைச்சர்கள் ஆதரவு: பொங்கி எழுந்து குரல் கொடுக்க அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பதவிகள் பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை தொடர்பு கொண்டு, கொங்கு மண்டல 'மாஜி' அமைச்சர்கள் ஆதரவும் ஆறுதலும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், ''பிரிந்தவர்கள் ஒன்றிணையவும், பதவி பறிப்பை எதிர்த்தும் பொங்கி எழுந்து, தளவாய் சுந்தரம் குரல் கொடுக்க வேண்டும்,'' என, முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறினார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை, அ.தி. மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்.இது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் எனக் கூறி, அவர் வகித்த மாவட்ட செயலர் மற்றும் மாநில அமைப்பு செயலர் பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி, பொதுச்செயலர் பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த தளவாய்சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, அ.தி.மு.க.,வில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை திரைமறைவில் மேற்கொண்டுள்ள ஈரோடு, நாமக்கல், கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், தளவாய் சுந்தரத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.அப்போது, தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் அவர் பேசி சமாதானப்படுத்தி உள்ளனர்.இதற்கிடையில், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது:லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைக்காத காரணத்தால், 10 முதல் 15 தொகுதிகளை இழந்து விட்டோம் என, எஸ்.பி.வேலுமணி பேசியதற்கு, அவர்மீது பழனிசாமி என்ன நடவடிக்கை எடுத்தார்?அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர்பாக, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என, திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளதற்கு, அவர்மீது ஏன் பழனிசாமி நடவடிக்கை எடுக்கவில்லை?பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, வழிநெடுக அ.தி.மு.க.,வினரிடம் பா.ஜ., கொடியை வழங்கி வரவேற்க வைத்த பழனிசாமி, தற்போது தளவாய்சுந்தரம் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமா?லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரியின் அ.தி.மு.க., வேட்பாளரை, பழனிசாமி அறிவிப்பதற்கு முன் தளவாய்சுந்தரம் அறிவித்தார்.பழனிசாமியின் அதிகாரத்தை தளவாய்சுந்தரம் எடுத்துக் கொண்டதற்கு பழி தீர்க்கும் வகையில், கட்சி பதவிகளை பறித்து உள்ளார்.பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று, பதவிகள் பறிப்பை எதிர்த்து தளவாய்சுந்தரம் பொங்கி எழுந்து, குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நிக்கோல்தாம்சன்
அக் 10, 2024 20:43

பழனிசாமி அதிமுகவை குழி தோண்டி புதைக்காமல் விடமாட்டார் போல?


பேசும் தமிழன்
அக் 10, 2024 19:05

SDPI போன்ற தேச விரோத சக்திகள் நடத்தும் கூட்டத்தில்.... இவர் கலந்து கொள்வாராம்.... ஆனால் நாட்டு நலன் உயிர்மூச்சாக கொண்ட ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் அவர் கலந்து கொண்டது தவறாம்....என்னடா உங்க நியாயம் !!!


ram
அக் 10, 2024 11:30

sdpi போன்ற தேசிய கட்சி ஆட்களுக்கு சப்போர்ட் செய்யலாம் அனால் இவர் என்னவென்றால் RSS பேரணியை தொடங்கி விட்டார், எவ்வளவு பெரிய குற்றம். என்னமோ எடபஸ் சிறுபான்மை வோட்டு அப்படியே வந்து விடும் என்று கனா காண்கிறார், போற போக்கை பார்த்தல் aiadmk கமல் கட்சியை overtake செய்துவிடும் போல, இவர் கட்சியில் இருக்கும் வரை mgr ஜெயலலிதா கட்டி காத்த கட்சி காற்றில் கரைந்து விடும் போல.


Pradeep Kumar
அக் 10, 2024 15:35

உண்மை...நல்லா இருந்த ஒருவர் தன் சுய பதவி ஆசை... மோகம் ...பிரித்து விட படுவோம் எனும் வேண்டா பயம் ... இருக்கும் நிலைஇறங்கி விட கூடாது எனும் ஈகோ கொண்டு தானும் தாழ்ந்து எம் ஜி ஆர் பெருமையாக வளர்த்த கட்சியையும் காணாமல் செய்து இறக்குவது சரியல்ல. இன்றும் முக வை கொண்டாடும் திமுக... எம் ஜி ஆர்யை சுத்தமாக மறந்து தினம்கொண்டாட தவறிய அதிமுக. எம் ஜி ஆர் தான் அதிமுக என்பதை மறந்து அவரின் வெள்ளை வேட்டி வெள்ளை பைஜாமா சட்டை கருப்பு கண்ணாடி ..ஆளுயர வேட்டி ஒரு கையில் தூக்கி நடக்கும் படம் போட்ட பெரிய போஸ்டர் ஒன்று கூட இப்போ காண்பது இல்லை...மாறாக ஆயிரத்தில் ஒருவன் கயிற்றில் தொங்கும் எம் ஜி ஆர் படம்.. அரசிளங்குமரி படம் போட்ட போஸ்டர் எம் ஜி ஆர் மரியாதை குறைத்து அருவருப்பை தான் தருகிறது.


rao
அக் 10, 2024 08:36

EPS is not only digging but also for the party.


Govinda raju
அக் 10, 2024 03:36

Govinda raju


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை