உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசியலில் 30 நாளை தாண்ட மாட்டார்; விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி சாபம்

அரசியலில் 30 நாளை தாண்ட மாட்டார்; விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி சாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''இன்றைக்கு சுள்ளான்கள் எல்லாம் வந்து, அடுத்த எம்.ஜி.ஆர்., நான்; அடுத்த முதல்வர் நான் தான் என, சொல்கின்றனர். அவர்கள் சொல்வது ஒரு காலமும் நடக்காது,'' என, நடிகர் விஜயை விமர்சித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் திருத்தங்கலில் நடந்தது.அதில், ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையிலும், ரத்தத்திலும் வளர்ந்த மலர் தான் அ.தி.மு.க., இயக்கம். ஆனால், தி.மு.க.,வில் உழைப்பவர்களும் இல்லை; உழைப்பவர்களுக்கு மரியாதையும் இல்லை. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்ட தி.மு.க., ஆட்சி வேண்டுமா என்பதை, மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.இன்றைக்கு சுள்ளான்கள் எல்லாம் வந்து, அடுத்த எம்.ஜி.ஆர்., நான் தான் என்கின்றனர்; அடுத்தது நான் தான் முதல்வர் என்கின்றனர். அதெல்லாம் ஒரு காலமும் நடக்காது. அடுத்த முதல்வர் பழனிசாமி தான்.இது திராவிட பூமி. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே தான் போட்டியே இருக்கும். பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் கூட சீனில் கிடையாது. அப்படி இருக்கையில், புதிதாக வந்தவரெல்லாம் உள்ளே நுழைய முடியுமா?அரசியலுக்கு புதிதாக வரக்கூடியவர்கள் எல்லாம், 30 நாட்களை தாண்ட முடியாது. அவர்களால் பிரச்னையை சந்திக்க முடியாது. மக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.தி.மு.க.,வில் மன்னர் ஆட்சி போல் பரம்பரை பரம்பரையாக, ஒரு குடும்பமே ஆதிக்கம் செலுத்துகிறது. முதல்வர் ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்; பழனிசாமியை கோட்டைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Bala
அக் 25, 2024 22:23

பொய்யான தகவல்களை பேசி பேசி அரசியலில் வாழ்ந்து வளர்ந்த இப்போது ❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓


Bala
அக் 24, 2024 20:11

இது சுதந்திர நாடு. யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். விஜய் ஒரு நல்ல மனிதர். சர்க்கார் ‌படத்தைபப் போல தமிழ் நாட்டை திருத்துவார். தமிழ் மக்கள் எதிர் பார்ப்பது லஞ்சம் ஊழல் அற்ற நேர்மையான நிர்வாகம். கல்வி மருத்துவம் மட்டும் இலவசமாக கிடைத்தால் போதும். 1000 ரூ இலவசம் பஸ் இலவசம் ஸ்கூல் பிள்ளைகளுக்கு 1000 இலவசம் தேவையில்லை. இலவசங்கள் எல்லாம் தவறான விஷயத்திற்கு போய்க்கொண்டு இருக்கிறது.


Rajesh
அக் 24, 2024 09:39

ராஜேந்திர பாலாஜி சார் நீங்க..சாரி ...உங்க கட்சி என்ன செஞ்சாங்க..எந்த கிராமத்துக்கு செஞ்சாங்க..நீ சாப்பிடறயே சோறு அதாவது அரிசி அத விளைவிக்கிற விவசாயி அவங்களுக்கு என்ன குரல் கொடுத்த. நண்பா..மைக் கிடைத்தால் போதும் புதுசா ஏதும் பண்ண விடமாடீங்களே..வோட்டை வாங்க


mugundh
அக் 19, 2024 12:56

7 masam thanditare. innum enna polambal??. makkal irukom yara ukara vekanamo avangala adutha election la ukara vaipom


mugundh
அக் 19, 2024 16:51

you have filtered my comment.


பிரேம்ஜி
அக் 19, 2024 11:44

இராசேந்திர பாலாசி மட்டும் என்ன பெரிய எம்ஜியாரா? அவரும் ஒரு சுள்ளானா இருந்து அமைச்சர் ஆனவர்தான். பழச் மறந்து பேச்சு கூடாது.


sankaranarayanan
அக் 19, 2024 11:18

ராஜேந்திர பாலாஜி எப்போது அ.தி.மு.க. ஜோய்சியர் ஆனார் எந்த பதவியும் இல்லையென்றால் கட்சி ஜோசிர் பதவிதான் மிச்சம் இருந்ததை இவருக்கு கொடுத்துவிட்டார்களா? அது எப்படி முப்பது நாட்கள் விஜயின் அரசியில் தாண்டாது என்கிறார் சோழி போட்டு சொல்கிறாரா அல்லது வேப்பிலை அடித்து சொல்கிறாரா தெரியவில்லை நானும் கட்சியில் இருக்கிறேன் என்பதை காட்டுவதர்க்கே இவர்க்கு இந்த பதவியா?


பிரேம்ஜி
அக் 19, 2024 10:34

போலீஸுக்கு பயந்து ஓடி ஒளிந்து இருந்த உங்களை விட விஜய் மேல். நீங்க ஒரு ஒட்டுண்ணி.


Balasubramanian
அக் 19, 2024 08:54

சிவாஜி சுந்தர் ராஜன் சேர்ந்து ஆரம்பித்த கட்சி மாதிரி நீடூழி வாழ்க ! (அப்படி ஒன்று ஆரம்பிக்க பட்டது யாருக்காவது இன்று தெரியுமா?)


சம்பா
அக் 19, 2024 08:24

சாபம் அல்ல உண்மை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை