உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., ராஜாவின் அநாகரிக பேச்சு ஹிந்து முன்னணி கடும் கண்டனம்

தி.மு.க., ராஜாவின் அநாகரிக பேச்சு ஹிந்து முன்னணி கடும் கண்டனம்

திருப்பூர்:தி.மு.க, -- எம்.பி., ராஜாவின் அநாகரிகமான பேச்சுக்கு, ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ஹிந்து முன்னணி மாநிலதலைவர் காடேஸ்வராசுப்ரமணியம் அறிக்கை:கடந்தாண்டு ஸ்டாலின் தன் கட்சியினரிடம் பேசும்போது, 'நம் கட்சியின் தலைவர்கள் என்ன பேசுவரோ என, காலையில் கண் விழிக்கும்போதே பதற்றமாக இருக்கிறது. இதனால், தனக்கு இரவில் துாக்கம் கூட வருவதில்லை' என, புலம்பியதை நாடே அறியும்.இந்நிலையில் தற்போது, தி.மு.க.,வினர் அநாகரிகமாக தேச தலைவர்கள் குறித்து பேசுவது, அவரது காதுக்கு செல்லாமல் மறைக்கப்படுகிறதோ என்று மக்கள் பேசுகின்றனர். சமீபகாலமாகதி.மு.க., பிரமுகர்கள் பேச்சு எல்லை மீறுகிறது.கப்பலோட்டிய தமிழன்வ.உ.சி., சுதேசி இயக்கத்தின் முன்னோடி. தொழிலாளர்கள் உரிமைக்காக போராடியபோது, ஆங்கிலேய கிறிஸ்துவ அடக்குமுறை ஆட்சியில் பாதிக்கப்பட்ட போது, தன் சொத்துக்களை விற்று தொண்டாற்றிய வள்ளல் அவர்.சுதந்திர போரில் ஈடுபட்டு, சுதேசி கப்பல் கம்பெனி நடத்தி, அனைத்தையும் நாட்டுக்காக அர்ப்பணித்து, இறுதியில் ஏழ்மையில் வாடினார் என்றாலும், இறுதிக்காலம் வரையில், இதற்காக எந்த வருத்தமும் படவில்லை; யாரிடமும் கையேந்தவில்லை.இச்சூழலில், அவரது நேர்மைக்கும், எளிமைக்கும், தியாகத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், 'ஈ.வெ.ரா.,விடம் தன் மகனின் வேலைக்காக வ.உ.சி., கெஞ்சினார்' என்று கட்டுக்கதை கட்டி, ராஜா பேசியது, தேச பக்தர்கள் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை பிராமண மற்றும் பட்டியலின சமூகத்தை கேவலப்படுத்தி வந்த தி.மு.க.,வினர், சமீபகாலமாக ஹிந்து சமூகத்தின் அனைத்து பிரிவினரையும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின், ராஜா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

நாவடக்கம் வேண்டும்

திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில், திருப்பூர் பகுதியில் ராஜாவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'வ.உ.சி., குறித்து தவறாக பேசிய ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநிலதலைவர் அண்ணா சரவணன் கூறியதாவது:நீலகிரி தி.மு.க., - எம்.பி., ராஜா, வ.உ.சி., குறித்து அவதுாறாக பேசியதற்கு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் சார்ந்துள்ள கட்சி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், அந்த கட்சியையே எங்கள் சமுதாயம் புறக்கணிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை