உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜெ., அறையில் கிடைத்த ரகசிய ஆவணங்களை நானே எரித்தேன்: தினகரன்

ஜெ., அறையில் கிடைத்த ரகசிய ஆவணங்களை நானே எரித்தேன்: தினகரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரது அறையில் இருந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களின் ரகசிய ஆவணங்களை கைப்பற்றினோம்,” என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., கடந்த காலங்களில் பிளவை சந்தித்தபோது, தன்னை விமர்சித்தவர்களை ஜெயலலிதா மீண்டும் அரவணைத்து வழிநடத்தினார்; அதுபோல தலைமை இருக்க வேண்டும். பழனிசாமிக்கு தலைவருக்கான தகுதி இல்லை. கடந்த 2017ல், பழனிசாமி ஆட்சி அமைக்க நாங்கள் தான் காரணம். அவருடைய துரோகத்தால் அ.ம.மு.க., உருவானது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரது அறையில் இருந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களின் ரகசிய ஆவணங்களை கைப்பற்றினோம். அதை படித்துவிட்டு நானே தீயிட்டு எரித்தேன். அதுபோன்ற ரகசிய ஆவணங்கள், கோடநாட்டிலும் இருக்கலாம் என்ற எண்ணத்தில், பழனிசாமி தேடினார். அதை வைத்து நாங்கள் மிரட்டுவோம் என்ற பயத்தில், அங்கு பூட்டை உடைத்து பல சம்பவங்களை அரங்கேற்றி உள்ளனர். பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன். ஒருபோதும் பழனிசாமியுடன் சேர மாட்டேன். பழனிசாமி தலைமையிலான கூட்டணி, வரும் தேர்தலில் விஜயால் மூன்றாவது இடத்துக்கு செல்லும்; தேர்தலில், தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி இருக்கும். விஜய் தலைமையில் சரியான கூட்டணி அமைந்தால், அது கடுமையான போட்டியாக இருக்கும். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், எங்களிடம் கூட்டணிக்காக அணுகினர். எங்களை தவிர்த்து விட்டு, எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. எங்களை தி.மு.க.வின், 'பி டீம்' என விமர்சிக்கின்றனர். உண்மையில், எங்களை இயக்குவதே பழனிசாமிதான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

chinnamanibalan
நவ 07, 2025 19:27

இவர் ஆர் கே நகர் தொகுதியில் அன்று எப்படி வெற்றி பெற்றார் என்பதையும் விளாவரியாக கூற வேண்டும். கூறுவாரா?


Srprd
நவ 07, 2025 16:13

இவருக்கு திமுகவின் ஆதரவு மற்றும் பாதுகாப்பு உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இவர் திமுக உதவி இல்லாமல் இப்படி பேச முடியாது.


kamal 00
நவ 07, 2025 12:25

நல்ல பய அதை வச்சு அள்ளு கிளப்புறதை விட்டுட்டு உதார் ஓவரா இருக்கு


Sun
நவ 07, 2025 10:19

ஜெயலலிதா அறையில் இருந்த மற்றவர்கள் குறித்த ஆவணங்களை தானே எரித்தேன் என்கிறார். மற்றவர்கள் குறித்த ஆவணமாக இருந்திருந்தால் எதிர்காலத்தில் அரசியல் செய்யப் பயன்படும் எனப் பத்திரப் படுத்தித்தானே இவர் வைத்திருப்பார்? ஏன் எரிக்கப் போகிறார்? இவர் குறித்த ஆவணமாக இருந்ததால் தான் அதை எரித்திருக்கிறார்? இதே போல் தன்னைக் குறித்த ஆவணங்கள் கொடநாட்டில் உள்ளது தெரியவர தினகரனே ஏன் கொடநாட்டில் அதை எடுக்க முயற்சித்து இருக்கக் கூடாது? கொடநாடு கொலை வழக்கில் காவல் துறை தினகரனை தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.


aaruthirumalai
நவ 07, 2025 08:50

ஆவணங்களை எரித்தது மறைத்தது குற்றம் கிடையாதா? எந்த விதமான ஆவணங்களை இவர் எரித்தார்.. இதை பற்றி உரியவர்கள் விசாரணை செய்வார்களா


Barakat Ali
நவ 07, 2025 08:28

ஆவணத்தையும் எரிப்பே .... அம்மணியையும் ......


Appan
நவ 07, 2025 08:10

தினகரன் பெயர் லண்டனில் பெரிய அளவில் பிரபலம். ஒரு மரீஷியஸ் financial consultan , விளம்பரம் செய்கிறார். இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் அரசியல்வாதிகளிடம் பெரும் அளவில் கருப்பு பணம் அதாவது ஊழல் பணம் பெரும் அளவில் உள்ளது. அதை white ஆக ஆக்க அவர்கள் உதவுகிறார்களாம். உதாரணத்திற்கு தினகரனுக்கு உதவி செய்து ஒரு ஓட்டலும் வாங்க உதவினார்களாம். இவரெல்லாம் ஒரு அரசியல் தலைவராக எப்படி நாட்டில் உலாவலாம்? இந்திய அவ்வளவு மோசமான நாடா? சாமானியர்கள் ஆயிரம் ரூபாய் தவறு செய்தால் ஜெயிலில் போடும் அரசு கோடி கோடியாக திருடுபவர்களை இப்படி உலவ அனுமதிக்கலாமா ...?இது எந்த அரசியல் தர்மம் ...?.


V RAMASWAMY
நவ 07, 2025 08:40

ஆண்டாண்டு காலமாக ஒரு கட்சி தமிழகத்தை சுரண்டிக்கொண்டிருக்கிறதே, அதைவிடவா இது பெரியது?


Haja Kuthubdeen
நவ 07, 2025 08:03

பெரிய யோக்கியர் சொல்லிட்டார்...நம்பிட்டோம்.


Naga Subramanian
நவ 07, 2025 07:22

சரியான யோக்கியர் என்றால், அந்த இரகசியத்தை பொதுவெளியில் மக்களிடம் அல்லவா சமர்த்திருக்க வேண்டும்? அதைவிட்டு விட்டு, எரித்தாராம் இவர்களது நோக்கம் தனது வளமான எதிர்காலத்தைப் பற்றி மட்டுமேயாகும் மக்கள் எக்கேடும் கேட்டு போனாலென்ன என்ற போக்குதான் மிகவும் நிறைந்திருக்கிறது.


Govi
நவ 07, 2025 06:34

யாருடா உன்னை வா.வானு கூப்பிடுரா சும்மா கத்தீட்டு கெட


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை